Saturday, December 8, 2007

81. துன்பம் நேர்கையில்...





துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா?

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க - எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?


அறமிதென்றும் மறமிதென்றுமே அறிகிலாதபோது
யாம் அறிகிலாதபோது
தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா

நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?



படம் : ஓர் இரவு (1951)
பாடியவர் : எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே. வர்மா
பாடலாசிரியர் : பாரதிதாசன்
இசை :சுதர்சனம்

2 Comments:

ஆயில்யன் said...

சூப்பர் பாட்டு !

நான் சின்னவயசுல நிறைய வாட்டி கேட்டிருக்கேன் !

எங்கப்பா ஆடியோ கலெக்‌ஷ்ன்ல ஞாயிறு தோறும் கேக்கும் பழைய பாடல்கள் லிஸ்ட்ல இது உண்டு :)

இனியவள் புனிதா said...

மனதை மயக்கும் மதுர கானம் :-)

Last 25 songs posted in Thenkinnam