Sunday, December 2, 2007

51. காற்றினிலே வரும் கீதம்..



காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே...
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுரமோகன கீதம்
நெஞ்சினிலே
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

சுனை வண்டுடன் சோலைக்குயிலும்
மனங் குவிந்திடவும்
வானவெளிதனில் தாரா கணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ.. என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
காற்றினிலே வரும் கீதம்..
காற்றினிலே வரும் கீதம்..
காற்றினிலே..


படம் : மீரா( 1945)
பாடியவர் : எம். எஸ். சுப்புலட்சுமி
பாடலாசிரியர் : கல்கி கிருஷ்ணமூர்த்தி
இசை : எஸ்.வி. வெங்கடராமன்

5 Comments:

கப்பி பய said...

வரும்போதே உருகவைக்கும் அருமையான பாடலோடு வர்றீங்க..வருக ! :)

ரசிகன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்...............
ஏனுங்க வேதா எங்க வயசுக்கேத்த மாதிரி உங்களுக்கு வேற பாட்டு கெடைக்கலியா?..
இன்னும் போன ஜெனரேசனிலேயே இருந்தாக்கா.. எப்பிடிங்க?..ஹிஹி...:)))

மதுரையம்பதி said...

மிக அருமையான பாடலை தந்தமைக்கு நன்றி. நிஜமாகவே தேன் கிண்ணம்தான்....அந்த நேரத்தில் தான் இதனை கேட்டிருக்கிறேன்....

//நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம்//

அருமையான இந்த வரிகளில், 'காலமெல்லாம்' அப்படின்னு முதல் முறை எம்.எஸ் எடுப்பதை கேட்பதற்கே 3 முறை பாடலை கேட்டேன்.

நிலையத்தாருக்கும், அளித்த வேதாவுக்கும் நன்றிகள் பல.

நாகை சிவா said...

கப்பி சொன்னது போலவே உருக வைக்கும் பாடலுடன் தான் வந்து இருக்கீங்க...

@ ரசிகன், வேதாவை விட இரண்டு தலைமுறைக்கு முன்பு வந்த பாடல் இது. அதை இந்த தலைமுறையும் ரசிப்பதற்கு காரணம் எம்.எஸ். அவர்களின் குரல் தான்.

வேதா said...

என்ன ரசிகன் இப்டி சொல்டீங்க? மத்தவங்க சொன்ன மாதிரி இந்த பாடல் எப்ப கேட்டாலும் மனதை உருக்க வைக்கும் :) ரொம்ப பழைய பாடல்னு பீல் பண்றீங்களா இதுக்கேவா? இன்னும் வரும் பாருங்க :)

Last 25 songs posted in Thenkinnam