Sunday, December 16, 2007

114. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...





மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
தெய்வமாகலாம்..

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்

யாருக்கென்று அழதபோதும் தலைவனாகலாம்
மனம்! மனம்! அது கோவிலாகலாம்..

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்

துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம்! குணம்! அது கோவிலாகலாம்...

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
தெய்வமாகலாம்..

படம் : சுமைதாங்கி (1962)
பாடியவர்: P.B.ஸ்ரீநிவாஸ்
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்

4 Comments:

நாகை சிவா said...

நல்ல பாடல். இது போன்ற பாடல்கள் கண்ணதாசனால் மட்டுமே எழுத முடியும்.

ரசிகன் said...

எல்லாம் ஆகலாம் ஆகலாம்...ஹிஹி...

குறைந்தபட்ச ஒரு மனித தன்மைக்குறிய தகுதிகள் இருந்தாலே தெய்வமா ஆகிடலாம்ன்னு இந்த பாட்டுல சொல்லறப்போல இருக்கே?..

ஒருவேளை இந்த காலத்துக்கு சரியாத்தேன் வரும்ன்னு தோனுது..

சூப்பராயிருக்கு..கருத்து..

கபீரன்பன் said...

// உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்//

இது "உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்" என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் !

வல்லிசிம்ஹன் said...

இது "உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்" என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் // இதுவே சரி.
நல்ல பாடல். எப்பவுமே என்னை ஒரு நிலைப்படுத்தும்.

Last 25 songs posted in Thenkinnam