Monday, December 17, 2007

117. உந்தன் தேசத்தின் குரல்...





உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா!
அந்த நாட்களை நினை அவை நீங்குமா உனை?
நிழல் போல் வராதா?
அயல்நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!

வானம் எங்கும் பறந்தாலும் பறவை எண்ணம் தன் கூட்டில்..
உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எண்ணம் தாய் நாட்டில்..
சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அங்கு செல்வமரம் காய்த்தாலும்..
உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!

கங்கை உனை அழைக்கிறது
யமுனை உனை அழைக்கிறது
இமயம் உனை அழைக்கிறது
பல சமயம் உனை அழைக்கிறது

கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க..
சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க..
தென்னந்தோப்பு துரவுகள் அழைக்க..
கட்டிக்காத்த உறவுகள் அழைக்க..
நீ தான் தின்ன நிலா சோறு தான் அழைக்க..

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா!

பால் போல் உள்ள வெண்ணிலவு..
பார்த்தால் சிறு கறையிருக்கும்..
மலர் போல் உள்ள தாய்மண்ணில்..
மாறாத சில வலி இருக்கும்..
கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்..
அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்..
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே..
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே..
அன்பு தாயின் மடி உனை அழைக்குதே தமிழா!

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!..

படம் : தேசம்(2004)
பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான்
பாடலாசிரியர்:வாலி
இசை : ஏ.ஆர்.ரகுமான்

4 Comments:

SurveySan said...

பாடலுக்கு நன்றி!

சூப்பர் பாட்டு இது.

வாலியா? வைரர்னு நெனச்சிருந்தேன்.

ஹ்ம். இந்த பாட்ட கேக்கும்போது ஒரு ஏக்கம் வரத்தான் செய்யுது :)

Covai Ravee said...

திரு.ராம் அவர்களுக்கு,
உடனடியாக அழைப்பிதழ் அனுப்பி உங்கள் கூட்டாளிகளில் ஒருவராக சேர்த்துகொண்டதற்க்கு இன் இதயபூர்வமான நன்றி. இந்த தளத்தில் நானும் ரசித்த ஜாம்பவான்களின் குரல்(எஸ்.பி.பி தவிர, எனென்றால் அவரூக்கு என்று "பாடும் நிலா பாலு" என்ற தளத்தில் திரு.சுந்தர் சாருடன் கூட்டாளியாக உள்ளேன்) மற்றவர்கள் பாடிய பாடல்கள் நான் ரசித்ததை தங்களூடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மீண்டும் நன்றி.

.:: மை ஃபிரண்ட் ::. said...

அட.. புது பாட்டு கூட கேப்பீங்களா professor அக்கா... :-))

வேதா said...

நானும் கூட இது வைரமுத்து எழுதியதுன்னு தான் நினைச்சேன் அப்புறம் இணையத்துல தேடிப்பார்த்தப்ப வாலின்னு தெரிஞ்சது.

@மைப்ரண்ட்,
உனக்கு நக்கல் அதிகமா போச்சு,உனக்காகவே அடுத்து ஒரு புத்தம்புது பாட்டு போடறேன் :D

Last 25 songs posted in Thenkinnam