Wednesday, April 27, 2011

என்னுயிரே ஏனுனக்கு

என்னுயிரே ஏனுனக்கு
என் மனம் புரியவில்லை
கன்னி மயில் நீர்துளிக்கு
காரணம் தெரியவில்லை

உனக்காக வாழும் ஜீவன்
உனை மீறி எங்கு போகும்
உறவே நீதான் உலகம்நீதான்


கண்ணில் கண்டிடும் காட்சிகள்
யாவுமே மாயமே
தப்பு நேரும் முன்
என்னுயிர் நீங்கியே போகுமே

அழகான சோலைக்குள்ளே
நுழைந்தாடும் மந்திபோல
விபரீதமாக இங்கே
விதி வந்து ஆடுதன்பே
அறிந்தால் போதும் அமைதி ஆகும்

என்னுயிரே ஏனுனக்கு
என் மனம் புரியவில்லை
கன்னி மயில் நீர்துளிக்கு
காரணம் தெரியவில்லை

பாடியவர் : உமா ரமணன்
திரைப்படம் : கஜா
இசை : மணிஷர்மா
பாடல் : விஜய் சாகர்

Last 25 songs posted in Thenkinnam