மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்
நீயே எந்தன் சுக வாசல்
கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும்
உன்னில் நானே கண்ட வேதம்
பனிப்பூவாய் என் மேல் விழுந்தாய் உயிரே உரையுதடி
இதற்கு மேலாக ஆசைகள் வந்து கவிதையில் சேறுதடி
என் கவிதையில் சேறுதடி
(மீண்டும்..)
உண்மை காதல் மறையாது
பாதை கூட தவறாமல் ஜீவன் ஒன்றே எண்ணி வாழும்
எந்த காலம் பிறந்தாலும் காலம் சொல்லும் பதிலாக
தெய்வீகமே இந்த காதல்
தாயை போலே நான் அள்ளிக்கொள்வேன்
உன்னை உன்னை நெஞ்சுக்குள்ளே
விடுமுறை காணாமல் தொடர்ந்திட கூடாதா
நானும் நீயும் வாழ்க்கை தோறும்
(மீண்டும்..)
மின்னல் ஒன்று கரை வீச நெஞ்சம் ஒன்றூ குடை சாய
மின்னல் நீயே நெஞ்சம் நானே
தென்றல் வந்து முத்தம் இட
கோர தீயும் பூவாய் மாற
தீயும் நானே தென்றல் நீயே
ஆசை எல்லாம் நான் அள்ளிக்கொண்டு
வந்தேண் வந்தேண் உந்தன் வாசல்
புயலென்ன மழை என்னவோ கடந்திட வேண்டாமா
நானும் நீயும் வாழ்க்கை தோறும்
(மீண்டும்..)
ஆல்பம்: மீண்டும் மீண்டும்
இசை: திலீப் வர்மன்
பாடியவர்: திலீப் வர்மன், கார்த்திக்
Thursday, February 18, 2010
மீண்டும் மீண்டும் ஓயாமல்
பதிந்தவர் MyFriend @ 2:46 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2008, கார்த்திக், திலீப் வர்மன், மலேசியா
Wednesday, February 17, 2010
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம்தானே
பார்வை உன்னை அலைகிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும்பொழுது என்னை வதைக்கின்றதே
(கனவெல்லாம்..)
சாரல் மழைத்துளியில் உன் ரகசியத்தை வெளிப்பார்த்தேன்
நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனிப்பூவாய் நீ குறுக
எதை அறியாமல் மனம் பறித்தாய் உனை மறவேனடி
நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எது வரை சொல்லடி
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்
(கனவெல்லாம்..)
தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி
காணலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழித்திருந்தேண்
இணைப்பிரியாத நிலைப்பெறவே நெஞ்சில் யாகமே
தவித்திடும் போது ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன்
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகம் தினம் தினம்
(கனவெல்லாம்..)
ஆல்பம்: கனவெல்லாம்
இசை: திலீப் வர்மன்
பாடியவர்: திலீப் வர்மன்
வரிகள்: திலீப் வர்மன்
பதிந்தவர் MyFriend @ 2:33 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, திலீப் வர்மன், மலேசியா
Tuesday, February 16, 2010
என்னவளே என்னை மறந்தது ஏனோ
என்னவளே என்னை மறந்தது ஏனோ
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தானோ
என்னை சிதைத்தவள் நீ
பின்பு அணைத்தவள் நீ
இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ
கண்கள் ரெண்டு ஆன போதும் காட்சிகள் ஒன்றல்லோ
இது புரிந்தும் கொஞ்சம் புரியாமல் நீ கேட்பது முறையல்லோ
காற்று போகும் திசையில் அலைகள் போகுதே
உன் உயிர் போகும் திசையில் என் உயிர் போகுதே
(என்னவளே..)
நான் செல்லும் பாதை முள் மீது போகும் என்றால்
என்றென்றும் அன்பே கரம் கோர்க்க நீயும் வந்தால்
நானும் வந்தால்
நிம்மதி நீளும்
இல்லை என்றால்
ஜீவன் வாழும்
அன்பே என் ஜீவன் உந்தன் கண்ணில்
ஏன் இன்னும் தாபம் உந்தன் நெஞ்சில்
என் கண்ணில் ஏக்கம்
நெஞ்சம் ஈர்க்கும்
நீதான் என்றும்
உந்தன் சொந்தம்
(என்னவளே..)
பெண்ணே நம் காதல் கை கூடும் நேரம் வந்தால்
ஓ விழியோடு சேரும் என் பார்வை நீதான் என்றால்
நானே என்றால்
மனம் வானம் செல்லும்
சென்ற பின்னால்
மழை சாரல் தூவும்
ஏன் இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில்
ஏதோ ஒரு மாயம் உந்தன் கண்ணில்
மனம் தேடும் உன்னை
இங்கு தந்தேன் என்னை
நீங்காதென்னை
இல்லை இல்லை
(என்னவளே..)
ஆல்பம்: என்னவளே
இசை: திலீப் வர்மன்
பாடியவர்கள்: திலீப் வர்மன், திலா
பதிந்தவர் MyFriend @ 2:58 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, திலா, திலீப் வர்மன், மலேசியா
Friday, October 10, 2008
758. சத்யம் சாம்ராஜ்யம் - அன்பே சகியே எனை ஆள வந்த ரதி நீயே
இதயத்தில் அதி வேகம்
அழகே அருகே முழு நிலவே
என்னை கிறுக்கிய பேனாவே
கண்ணில் நுழைந்த நுன்னுயிரே
கனவாய் கையில் ஏந்தி
என்னை சிரிப்பாய் சிரிப்பவளே..
அன்பே சகியே
எனை ஆள வந்த ரதி நீயே
அன்பே சகியே
நெஞ்சில் நீந்துகின்ற நைல் நதியே
புயல் கடலிலே மையம் கொண்டதால்
நீர் மெல்ல மெல்ல மேல் எழும்புதே
காதல் என்னுள்ளே மையம் கொண்டதால்
நான் மெல்ல மெல்ல மேல் எழுகிறேன்
உன் பார்வை தந்த சாபத்தினால்
பிரணவாயு காற்றில் தீர்ந்ததடி
உன் மௌனம் தீட்டிய ஜாலத்தினால்
ஒரு வார்த்தை சொல்ல என்னுயிர் கசியுதே
(அன்பே சகியே..)
இரு விழியில் தோன்றிய காதல்
கைகளிலிருந்து கலைவது ஏனோ?
இரு மனங்களில் வசிக்கிற காதல்
இரு திசைகள் இன்று பிரிந்தது ஏனோ?
ஒரு முறை உன்னை பார்த்ததும் காதல்
ஒரு கணத்தில் தோற்றது ஏனோ?
ஒரு மொழியில் வாழ்ந்தது காதல்
ஒரு பிழையில் கால் சரிந்தது ஏனோ?
வெள்ளி நிலவில் ஒளிதான் காதல்
தேய்பிறையில் ஒழிந்தது ஏனோ?
இதயம் இதயம் வலிக்கிறதே...
மழை துளியில் உந்தன் முகம் தெரிகிறதே
அதை சேமிப்பேன் உள்ளங்க் கையிலே
வெயில் பட்டு தரையில் நிழல் வீழ்குமுன்
உடன் பட்டு உனை நிதமும் தாங்குவேன்
யார் தீண்டினால் தீ மூழுமோ
காதல் தீண்ட தீண்ட தீ நீழுமோ
உயிரும் உயிரும் உருகியதே
ஊடுருவி இரவில் கரைகிறதே
அன்பே நீ நானாகிறாய்
ஒன்று சொல்லி விட்டு போ போ
சொல்லி விட்டு போ போ
நீ போ போ போ
ரெண்டுக்கு புகுந்து நிறம் தந்தாள்
கல்லுக்குள் புகுந்து சிலை தந்தாள்
சொல்லுக்குள் புகுந்து மொழி தந்தாள்
இறைவனை போல் மறந்துக் கொண்டாள்
ஒன்று சொல்லி விட்டு போ போ
சொல்லி விட்டு போ போ
நீ போ போ போ
இனத்துக்குள் புகுந்து கவி டஹ்ந்தாள்
இரவுக்குள் புகுந்து ஒளி தந்தாள்
நிறத்துக்குள் புகுந்து பை தந்தாள்
மனதுக்கு மட்டும் வலி தந்தாள்
தனித்தீவின் அலைகளில் நீதான்
நீதானே நான்
நான் அங்கு வேண்டும்
கடல் நீரில் விழித்திட கூடும்
புயல் கடலிலே மையம் கொண்டதால்
நீர் மெல்ல மெல்ல மேல் எழும்புதே
காதல் என்னுள்ளே மையம் கொண்டதால்
நான் மெல்ல மெல்ல மேல் எழுகிறேன்
உன் பார்வை தந்த சாபத்தினால்
பிரணவாயு காற்றில் தீர்ந்ததடி
உன் மௌனம் தீட்டிய ஜாலத்தினால்
ஒரு வார்த்தை சொல்ல என்னுயிர் கசியுதே
(அன்பே சகியே..)
ஆல்பம்: சத்யம் சாம்ராஜ்யம்
இசை: பூமெராங்-X
பாடியவர்கள்: திலீப் வர்மன், பூமெராங்-X
பதிந்தவர் MyFriend @ 4:16 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2008, ஆல்பம், திலீப் வர்மன், பூமெராங்-X, மலேசியா
Thursday, October 9, 2008
753. நவீனம் - இரு கண்கள் பேசும் வேளை
இரு கண்கள் பேசும் வேளை
காதல் சொன்ன வார்த்தை
காதலான ஆசைகள் உள்ளம் எங்கும் கூடுதே
உனை நானும் சேரும் காலம் என்று வந்து கூடுமோ
அந்த சொர்க்கம் காணவே மௌனமாகி தேய்கிறேன்
என் ஸ்வாசமே என் ஸ்வாசமே
ஒரு முறை தாலாட்டிட தென்றலாகி வா வா
என் ஸ்வாசமே என் ஸ்வாசமே
ஒரு முறை தாலாட்டிட வெண்ணிலவே நீ வா
உன்னில் என்னை காண்பதே
என்னில் உன்னை காண்பதே
காரணங்கள் கேட்ட போது நேசம் என்னிடம்
கூறுகின்ற வார்த்தையில் நான் அறிந்த சொந்தங்கள்
நூறு கோடி ஜென்மம் எந்தன் கண்ணில் தோன்றுதே
ஆ.....
ஒவ்வொரு துடிப்பும் உந்தன் ஸ்வாசமாய்
ஒவ்வொரு விழிப்பும் உந்தன் காணலாய்
மாற்றி சென்ற அந்த பெண்மை எந்த தேவதை?
எங்கு என்று நானும் தேட உன்னில் காண்கிறேன்
உன்னில் காண்கிறேன்... அவளை உன்னில் காண்கிறேன்
உண்மை காதலும் இன்று என்றும் மறைந்திடுமா?
நீ எங்கு சென்றாலும் நிலவாக நான் வருவேன்
இரவில் தோன்றும் அந்த மென்மையான நேரத்தில்
உன்னில் என்னை காண்பதே
என்னில் உன்னை காண்பதே
காரணங்கள் கேட்ட போது நேசம் என்னிடம்
கூறுகின்ற வார்த்தையில் நான் அறிந்த சொந்தங்கள்
நூறு கோடி ஜென்மம்
எந்தன் கண்ணில் தோன்றுதே
ஆல்பம்: நவீனம்
இசை: சசி Rogkwave
பாடியவர்: திலீப் வர்மன்
பதிந்தவர் MyFriend @ 2:38 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, சசி Rogkwave, திலீப் வர்மன், மலேசியா
Wednesday, October 8, 2008
751. ஆரம்பம் - காதல் பூக்கும் நொடியில் பேசடி பார்வையாலே
காதல் பூக்கும் நொடியில் பேசடி பார்வையாலே
மாலை வேளை தினமும் தவிக்கிறேன் காதலாலே
உன்னாலே நான் கண்டேனே
உயிராலே நான் அணைத்தேனே
(காதல் பூக்கும்..)
நெஞ்சோடு நானே தாலாட்டுவேனே
என்னோடு நீ வந்தால் பெண்ணே
விழியோடு நானே உறவாகினேனே
முதல் பார்வை மறவேனே கண்ணே
ஓர் வார்த்தை சொல்லாமல் நீயும்
வழியொன்று தெரியாமல் நானும்
மழையில் குடையாக வந்தேன்
விழுந்தால் நிலமாக நின்றேன்
(காதல் பூக்கும்..)
கனவில்லை பூவே
நிஜம்தானே நீயே
நான் பாடும் புது ராகம் நீயே
சோகங்கள் இன்றே சுகமாகும் முன்னே
என்னை தீண்டி உறவாடு அன்பே
உன் ஜீவன் என் ஆயுள் அன்பே
உன் மூச்சில் நான் வாழ்வேன் இங்கே
இது போதும் இது போதும் நெஞ்சே
என் காதல் எங்கே நீ எங்கே
(காதல் பூக்கும்..)
படம்: ஆரம்பம்
பாடியவர்: திலீப் வர்மன்
பதிந்தவர் MyFriend @ 2:26 AM 4 பின்னூட்டங்கள்
வகை 2008, திலீப் வர்மன், மலேசியா
Monday, October 6, 2008
746. காதல் வேண்டும் - உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோ..
உயிரை தொலைத்தேன்..
அது உன்னில்தானோ..
இது நான் காணும் கனவோ நிஜமோ..
மீண்டும் உன்னை காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே..
விழியில் விழுந்தால்.. ஆஆஆஆஆ..
என்னில் எனதாய் நானே இல்லை..
எண்ணம் முழுதும் நீதானே
என் கண்ணே..
(உயிரை..)
அன்பே உயிராய் தொடுவேன் உன்னை..
தாலாட்டுதே பார்வைகள்..
(அன்பே..)
உனை சேரும் நாளை..
தினம் ஏங்கினேனே..
நானிங்கு தனியாக அழுதேன்..
விடியும் வரை..
கனவின் நிலை..
உனதாய் இங்கு..
தினம் ஏங்குது..
மனம் உருகிடும்..
நிலை இது..
எந்தன் முதல் முதல் வரும்..
உயிர் காதலில்..
(உயிரை..)
நினைத்தால் இனிக்கும் இளமை நதியே..
உன்னோடு நான் மூழ்கினேன்..
(நினைத்தால்..)
தேடாத நிலையில்..
நோகாத வழியில்..
கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்..
(விடியும்…)
(உயிரை..)
ஓஓஓஓஓ..
படம்: காதல் வேண்டும்
இசை: ஜெய்
பாடியவர்: திலீப் வர்மன்
பதிந்தவர் MyFriend @ 7:35 AM 7 பின்னூட்டங்கள்
வகை 2000's, திலீப் வர்மன், மலேசியா, ஜெய்