Sunday, February 10, 2013

விளையாட்டா படகோட்டி - தோனி



விளையாட்டா படகோட்டி - ஷ்ரேயா கோஷல்

விளையாட்டா படகோட்டி - ஹரிஹரன்


விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்

கரை காணா கடல் மேலே நீயும் நானும்
தடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம்
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா

தத்தி தத்தி நீரில் ஆடி
சுத்தி சுத்தி சுழலும்போதும்
அக்கரைக்குப் போகத்தானே அல்லாடும்
எத்தனையோ புயலும் கண்டு
கொட்டுமழையில் பொறுமையும் கொண்டு
தொலைதூரம் சேரத்தானே தள்ளாடும்
தன்னோட வழியெல்லாம்
தன்னைத் தவிர துணையுண்டோ
திசையெல்லாம் வழியாகும்
ஒரு வழிதான் உனக்காகும்
எப்போது கரையைச் சேரும் ஓடம் ஓடம்

கட்டுமரம் என்றால் என்ன
வெட்டு பட்ட மரங்கள் தானே
கஷ்டப்படும் நீயும் நானும் அது போலே
பட்ட பாடு அலைகள் போலே
விட்டு விட்டு மோதிப் பார்க்கும்
எட்டி நிற்க திரும்பத் திரும்ப விளையாடும்
கடலிறங்கும் கட்டுமரம்
ஆழத்தை அறியாது
கடல் சேரும் நதியெல்லாம்
திரும்பித்தான் போகாது
முடிவில்லா முடிவுக்கேது முடிவு?

வெட்டுப்பட்ட காயம் தாங்கி
கட்டுமரம் வடிவம் கொண்டு
காட்டை விட்டு கடலில் வந்து கரை தேடும்
பட்டப்பகல் வெயிலில் காய்ந்து
நட்டநடு நிலவில் தோய்ந்து
வெட்டவெளி வானம் பார்த்து விளையாடும்
கடலில்தான் திரிந்தாலும்
ஆழத்தை அறியாது
கடல் சேரும் நதியெல்லாம்
திரும்பித்தான் போகாது
முடிவில்லா முடிவுக்கேது முடிவு?


 படம்: தோனி
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல், ஹரிஹரன்






Saturday, February 2, 2013

எங்கெங்கே எங்கெங்கே



ஒ எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடி கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்த
பஞ்சு நெஞ்சம் பத்திக் கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளி தான் நான் உந்தன் கிளை தான்
செல்லாதே தள்ளி செல்லாதே
ஒ என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர் சொல்லி புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்

என் கால்களில் பொன் கொலுசுகள்
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்

பூப்போல இருந்த மனம் இன்று
மூங்கில் போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே
இதயம் துடிக்கும் உடலின் வெளியே

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடி கொல்லாதே

என் வீதியில் உன் காலடி
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்

உன் ஆடையின் பொன் நூலிலே
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்

நான் உன்னை துரத்தியடிப்பதும்
நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா முறையா
காதல் பிறந்தால் இது தான் கதியா

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடி கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்த
பஞ்சு நெஞ்சம் பத்திக் கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளி தான் நான் உந்தன் கிளை தான்
செல்லாதே தள்ளி செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

படம் : நேருக்கு நேர் (1997) 
இசை : தேவா 
பாடியவர்கள் : ஹரிஹரண், ஆஷா போஸ்லே
வரிகள் : வைரமுத்து

Friday, January 4, 2013

ஒரு தடவை சொல்வாயா



ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்கு சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை
யாருக்கும் அமைவதில்லை

உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு 
தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும் 
காதல் உடைவதில்லை

மின்மினி தேசத்து சொந்தக்காரன் விண்மீன் கேட்பது தவறாகும்

வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே

ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று

நெருங்க நினைக்கும் நினைவை மறக்க நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க பெண்மை அழைக்கிறது

கிளையை முறித்து போட்டு விடலாம்
வேரை என்ன செய்வாய்
தரையை உடைத்து முளைக்கும் போது
அன்பே எங்கு செல்வாய்

மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம் மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை

உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலும்  தள்ளாடுவேன்

ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே 

படம் :வசீகரா (2003)
இசை :ராஜ்குமார்
பாடியவர்கள் : ஹரிஹரன், சின்மயி
வரிகள் : பா.விஜய்

Monday, November 19, 2012

துப்பாக்கி - குட்டி புலி கூட்டம்



குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம் 
பஃல்லே பஃல்லே பாட்டு போட்டோம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் 
சாலை எங்கும் சேலை தோட்டம்
    
குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம் 
பஃல்லே பஃல்லே பாட்டு போட்டோம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் 
சாலை எங்கும் சேலை தோட்டம்
ஹே நானும் இப்ப மும்பை வாலா நாளை முதல் தௌசண்ட் வாலா
மேல போற சிக்ஸர் வாலா சாலா சாலா 
நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு ஆசி வாங்கி ஃபிகர வெட்டு
ஃப்ரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு போடா போடா 

ஏலே மாப்புள்ள அட நட்டு பட்டு வாழும் நாட்கள் வேப்பில்லை
வா வா கேப்புல நீ வம்பு செஞ்சு திட்டு வாங்கு தப்பில்ல
எதை எதை உலகம் பதை பதைக்கிறதோ அதை அதை மனதும் விரும்புதே
கரைகளை தீண்டும் அலைகளை போல கனவுகள் தினமும் அரும்புதே
இத பிடி அத பிடி இருக்கட்டும் அடிதடி இளமையின் கத படி இறுதியில் சுகமடி

குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம் 
பஃல்லே பஃல்லே பாட்டு போட்டோம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் 
சாலை எங்கும் சேலை தோட்டம்
    
ஹைய்யோ நெஞ்சம் தான் 
அது பெண்ணை தாண்டி எண்ணும் எண்ணம் கொஞ்சம் தான் 
பெண்ணே இன்பம் தான்
அதை வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள் பஞ்சம் தான் 
அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து அதில் மிக அழகியை விரும்பலாம் 
யுவதிகள் தேடி அவதிகள் கோடி இருந்தும் அது தான் சுகமெல்லாம்  
துறு துறு துறுவென இருந்திடு இருந்திடு துரு பிடிக்காமலே இருந்திட பறந்திடு 

குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம் 
பஃல்லே பஃல்லே பாட்டு போட்டோம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் 
சாலை எங்கும் சேலை தோட்டம்
ஹே நானும் இப்ப மும்பை வாலா நாளை முதல் தௌசண்ட் வாலா
மேல போற சிக்ஸர் வாலா சாலா சாலா 
நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு ஆசி வாங்கி ஃபிகர வெட்டு
ஃப்ரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு போடா போடா 

படம் : துப்பாக்கி (2012)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன், திப்பு, நாராயணா, சத்யன், ரணினா ரெட்டி
வரிகள் : விவேகா

Saturday, November 17, 2012

துப்பாக்கி - வெண்ணிலவே தரையில்



வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

வெண்ணிலவே விழியில் பிடித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

அழகே நீ ஓர் பூகம்பம் தானா அருகே வந்தால் பூக்கம்பம் தானா
அழகே நீ ஓர் பூகம்பம் தானா அருகே வந்தால் பூகம்பம் தானா
தீயா நீரா தீராத மயக்கம்
தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்
அணைத்திட எறிந்திடும் பெண் தேகம் அதிசயம்

வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்

ஒரு நாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்
மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்
விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன்
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்
நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழை  வரும்

வெண்ணிலவே விழியில் பிடித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

படம் : துப்பாக்கி (2012)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன், பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள் : நா. முத்துக்குமார்

Monday, November 5, 2012

அவள் வருவாளா


அவள் வருவாளா அவள் வருவாளா அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்து போன நெஞ்சை ஓட்ட வைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
ஏய் கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

ஸ்மூத்தாய் செல்லும் பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளூம் டால்பி சவுண்ட் அவள்

கட்டழகை கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரை பழக்கம்

ஸ்மூத்தாய் செல்லும் பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளூம் டால்பி சவுண்ட் அவள்

திருடி சென்ற என்னை திருப்பி தருவாளா தேடி வருவாளா
அட ஆணை விட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம்
வருவாளே அவள் வருவாளே
அவள் ஓர பார்வை என் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா

அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்து போன நெஞ்சை ஓட்ட வைக்க அவள் வருவாளா

ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
போக போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்

ஸ்மூத்தாய் செல்லும் பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளூம் டால்பி சவுண்ட் அவள்

அவளை ரசித்த பின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிற்று உற்றுரியும் ஐம்புலனும்
பெண்ணில் இருக்கு அந்த பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு

அவள் வருவாளா அவள் வருவாளா அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்து போன நெஞ்சை ஓட்ட வைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
ஏய் கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

ஸ்மூத்தாய் செல்லும் பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளூம் டால்பி சவுண்ட் அவள்

படம் : நேருக்கு நேர் (1997) 
இசை : தேவா 
பாடியவர் : ஹரிஹரன் 
வரிகள் : வைரமுத்து

Saturday, October 13, 2012

உன் உதட்டோர சிவப்பே



உன் உதட்டோர சிவப்பே
அந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும்
நீ சிரிச்சாலே சில நேரம்
அந்த நிலவு வந்து உளவு பாக்கும் உளவு பாக்கும்

என் செவ்வாழை தண்டே ஏ
என் செவ்வாழை தண்டே சிறுக்காட்டு வண்டே
உன்ன நெனச்சு தான் இசை பாட்டு
கொஞ்சம் நெருங்கி வா இதை கேட்டு

ஏன் மம்முதா அம்புக்கு ஏன் இன்னும் தாமதம்

அடி ஏ அம்மணி வில்லு இல்ல இப்போ கைவசம்

ஹே மல்லுவேட்டி மாமா மனசிருந்தா மார்க்கம் இருக்குது

என்ன பொசுக்குன்னு கவுக்க பொம்பளைக்கு நோக்கம் இருக்குது

என் சேலைக்கு கசங்கி விடும் யோகம் என்னைக்கி

அட என் வேட்டிக்கு அவுந்து விடும் யோகம் இன்னிக்கி

முருகமலை காடுக்குள்ள விறகெடுக்கும் வேளையிலே
தூரத்துல நின்னவளே தூக்கி விட்டாலாகாதா

பட்ட விறகு தூக்கி விட்டா கட்டை விரலு பட்டுபுட்ட
விறகில்லாம தீ புடிக்கும் வெட்கம் கெட்டு போகாதா

நீ தொடுவத தொட்டுக்கோ சொந்தத்துல வரைமுறை இருக்கா

நீ பொம்பளை தானே உனக்கு அது நியாபகம் இருக்கா

உன் நெனப்புத்தான் நெஞ்சுகுள்ள பச்சை குத்துது

உன் கிறுக்குல எனக்கு இந்த பூமி சுத்துது

சிங்கம் புலி கரடி கண்டா சேர்த்தடிக்க கை துடிக்கும்
பொட்டுக்கன்னி உன்ன கண்டா புலி கூட தொடை நடுங்கும்

உம்ம நெனச்சு பூசையிலே வேப்பெண்ணையும் நெய் மணக்கும்
நீ குளிச்ச ஓடையிலே நான் குளிச்ச பூ மணக்கும்

ஹே வெட்கம் கெட்ட பெண்ணே என்னை ஏன் தூக்கி சுமக்குற

என் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சான் இறங்க மறுக்குற

அடி என் நெஞ்சிலே ஏண்டியம்மா வட்டி வைக்கிற

உன் ஆசைய எதுக்கு இன்னும் பொத்தி வைக்கிற

படம்: பாஞ்சாலங்குறிச்சி (1996)
இசை: தேவா
பாடியவர்கள் : ஹரிஹரன் , அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: சினேகன்

Friday, October 12, 2012

கொஞ்சும் மஞ்சள் பூக்கள்



கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்
கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும்

தீ மூட்டியதே குளிர்க் காற்று
என் வெட்கத்தின் நிறத்தினை மாற்று
உன் ஆசைக்கு எத்தனை வண்ணம்
ஒரு ராத்திரி ஓவியம் தீட்டு

வியர்வையிலே தினம்
பாற்கடல் ஓடிடும் நாளும்
படகுகளா இது பூவுடல்
ஆடிட இவள் மேனியை
என் இதழ் அளந்திடும் பொழுது
ஆனந்த தவம் இது

உன் விரல் ஸ்பரிசத்தில்
மின்னலும் எழுமே
அடடா என்ன சுகமே

கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அன்பே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்

உன் மேனியில் ஆயிரம் பூக்கள்
நான் வாசனை பார்த்திட வந்தேன்
புல் நுனியினில் பனித்துளியை போலே
உன் உயிருக்குள் நனைந்திட வந்தேன்

மயங்குகிறேன் அதில்
உணர்வுகள் ஓய்ந்தது ஏனோ
வழங்குகிறேன் இவள்
உதடுகள் காய்ந்தது இவள் சேலையில்
பூக்களும் கட்டிலின் கீழே தூங்கிடலானது

உன் வளையோசையில் நடந்தது இரவே
நினைத்தால் என்ன சுகமே

கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அன்பே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்

கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும்

படம் : உல்லாசம் (1997)
இசை : கார்த்திக் ராஜா
பாடியவர்கள் : ஹரிஹரன், ஹரிணி
வரிகள் : அறிவுமதி

Tuesday, December 20, 2011

ஹேஹேஹே கீச்சுக் கிளியே - 2000வது பாடல்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்

கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில்,
இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்,
அதன் உயிர்சதை இசைவது
என்றும் அந்த நாதத்தில்,

உயிர்களின் சுவாசம் காற்று,
அந்த காற்றின் சுவாசம் கானம்,
உலகே இசையே… ஏ…
எந்திர வாழ்கையின் இடையே,
நெஞ்சில் ஈரத்தில் புசிவதும் இசையே,
எல்லாம் இசையே, …ஏ…
காதல் வந்தால் அட அங்கும் இசைதான்,
கண்ணீர் வந்தால் அட அங்கும் இசைதான்,
தொட்டில் குழந்தை ஒன்று அழுதால்,
அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான்,
யுத்த தளத்தில் தூக்கம் தொலைத்து,
கண் விழிப்பதற்கும் இந்த இசை தான்,

இசையோடு வந்தோம்… இசையோடு வாழ்வோம்,
இசையோடு போவோம்… இசையாவோம்…

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

இன்னிசை நின்று போனால் என் இதயம்,
நின்று போகும் இசையே… உயிரே…
எந்தன் தாய்மொழி இசையே,
என் இமைகள் துடிப்பதும் இசையே,
எங்கும் இசையே,
மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்,
கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்,
ஐம்புலன்கள் எந்தன் இருப்பு,
செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு,
நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு,
ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு,

இசையோடு வந்தேன்… இசையோடு வாழ்வேன்…
இசையோடு போவேன்… இசையாவேன்…

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

இசை:தேவா
பாடியவர்:ஹரிஹரன்
திரைப்படம்:முகவரி
வரிகள்: வைரமுத்து

அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே


அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே என்னோடு நான் இல்லயே
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடீ....
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே

ஓட்டுக்குள்ளே நத்தையைப் போல்
ஒளிந்திருந்த ஒரு நெஞ்சம்
பறவை போல பறக்கிறதே
பார்த்துகொள்ளு நீ கொஞ்சம்
மின்னல் வந்து விளக்கேற்றும்
மேகம் வந்து தாலாட்டும்
நினைக்கும் திசையில் பறந்திடலாம்
காதல் உனக்கு கை கொடுக்கும்
குட்டி குட்டி செடி அது
தொட்டில் கட்டும் மலர்
தினம் உன் பெயரை சொல்லிசொல்லி
அது அழைக்கிறதே
பெற்றவர்கள் முகம்
சுற்றி உள்ளவர்கள் முகம் - அட
அத்தனையும் நெஞ்சம் இன்று மறக்கிறதே


ஆ..நீயின்றி நானில்லை அது நிச்சயம்
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடீ....
அன்பே அன்பே லலலாலலாலா..
அன்பே அன்பே லலலாலலாலா..

தேவதையின் கதைக் கேட்டு
சின்ன வயதில் தூங்கினேன்
தூக்கம் பறிக்கும் தேவதையை
நேரில் இன்று பார்க்கிறேன்..
சின்ன வயதில் பார்த்த நிலா
தூரமாகிப் போகலாம்
இந்த வயதில் நீ நினைத்தால்
நிலவின் மடியில் வாழலாம்..

ஒ...காதல் ஒரு வனம்
அதில் அலைவது சுகம்
வா சுற்றி சுற்றி எங்கும் நாம் நடந்திடலாம்
ஒ...காதல் ஒருமழை
அதில் தேவை இல்லை குடை
வா சொட்ட சொட்ட அதில் நாம் நனைந்திடலாம்...

ஆ ..நீயின்றி நானில்லை அது நிச்சயம்
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடீ....
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே என்னோடு நான் இல்லயே

திரைப்படம் :: அன்பே அன்பே
பாடியவர்கள்: சாதனா சர்கம், ஹரிஹரன்
இசை: பரத்வாஜ்

Wednesday, November 16, 2011

ஓய்வெடு ஓய்வெடு நிலவே

ஓய்வெடு ஓய்வெடு நிலவே - நீ
காதலில் தேயாதே
சாய்ந்திடு சாய்ந்திடு நிலவே - வா
மார்பிலே இடம் தாரேன்
பனி மார்கழி மாதத்திலே
இள வான்மதி மோகத்திலே
இந்த காதலன் கீதத்திலே
இளைப்பாரிடு நாணத்திலே


தேய்ந்தது தேய்ந்தது நிலவு -தன்
காதலன் முகம் காண

நிலமெனில் நீராய்
மரம் எனில் வேராய்
உயிர்துணை சேர்ந்திட
நானும் வரவா
மலருக்கு மணமாய்
இதழுக்கு நிறமாய்
இணைபிரியாதொரு ராகம் தரவா
மலர்விழி அம்பில் நான்
விழுந்தென்னை இழந்தேன்
தளிர்க்கரம் பற்றி நான்
யார் என்று மறந்தேன்
இடைவெளி இனி இல்லை
வா காதல் மானே
ஈருடல் இணைந்ததும்
ஓர் உயிர் தானே

தேய்ந்தது தேய்ந்தது நிலவு - தன்
காதலன் முகம் காண
சாய்ந்தது சாய்ந்தது நிலவு - உன்
மார்பினில் சுகம் காண

கவி எனில் பொருளாய்
கரும்பெனில் சுவையாய்
கடை வரை நான் உந்தன் கூடவருவேன்
நிஜமெனில் நிழலாய்
நெருப்பெனில் சுடராய்
இருவிழி மூடாமல் காவல் தருவேன்
உனக்கெனத்தானே பால் நிலவாக வளர்ந்தேன்
உனைக்கண்டதாலே நான் தினம் தேய மறந்தேன்
இயற்கையின் தடை மீறி
வாழும் நம் காதல்
இதற்கிணை கிடையாது
வேரொரு காதல்

ஓய்வெடு ஓய்வெடு நிலவே - நீ
காதலில் தேயாதே
சாய்ந்திடு சாய்ந்திடு நிலவே - வா
மார்பிலே இடம் தாரேன்
பனி மார்கழி மாதத்திலே
இள வான்மதி மோகத்திலே
இந்த காதலன் கீதத்திலே
இளைப்பாரிடு நாணத்திலே


தேய்ந்தது தேய்ந்தது நிலவு -தன்
காதலன் முகம் காண
சாய்ந்தது சாய்ந்தது நிலவு - உன்
மார்பினில் சுகம் காண


திரைப்படம்: வேலை
பாடகர்கள்: பவதாரிணி, ஹரிஹரன்
இசை: யுவன்சங்கர் ராஜா
வரிகள் : ஆர்.வி. உதயக்குமார்

Friday, October 7, 2011

ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா



ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே

நீ வெள்ளை சந்திர வீதியில் உலா போகிறாய்
நீ நட்சத்திரங்கள் வாழவே கனா காண்கிறாய்
நெஞ்சே நீ விண்ணை சுற்றிப் பறந்தாலும்
உன் காலன் மண்ணில் ஊன்றி நில் நில் நில்
அன்பே அன்பே அன்பே உன் துக்கத்தை விட்டு
விண்ணை தொட்டு உன் பேரை நிலவில் வெட்டு

காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணாளா காதுக்குள் பாட்டுப்படி
என் காலும் நடக்கட்டுமே என் தேவா
உன் மார்பில் சாய்ந்தபடி
ஒரு பார்வை சிறு வார்த்தை எந்தன் உயிருக்கு கவசமடி
இறந்தாலும் உயிர் ஊட்டும் உந்தன் விரல்கள் ஸ்பரிசமடி
நான் சொல்லும் சொல்லை கேளாய் நாளைக்கு நீயே வெல்வாய்
சங்கீத ராகங்களுக்கு சேவை செய்வாய்
பெண்ணே பெண்ணே உன் ஒற்றை சொல்லுக்கு
பொன்னும் முத்தம் நான் கொட்டித்தர வேண்டும்
அன்பே அன்பே உன் அன்பு சொல் வேண்டும்
இன்னும் சொல்வேன் என் ரத்தம் ஊர வேண்டும்

ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே

காலேஜி காலேஜி அக்கா எந்தக் காலேஜி
அக்டோபர் நவம்பர் எந்த மாசம் மேரேஜு
லவ் லவ் லவ் லவ்

சந்தர்ப்பம் அமைந்து விட்டால் பெண் பூவே சங்கீதம் மாற்றி வைப்பேன்
காலங்கள் கனியும் வரை பேசாமல் காற்றுக்கு இசை அமைப்பேன்
கலங்காதே மயங்காதே உன் கனவுக்கு துணை இருப்பேன்
இந்த பூமி உடைந்தாலும் உன்னை உள்ளங்கையில் ஏந்தி பறப்பேன்
என் நெஞ்சில் சாய்த்து கொள்வேன் இதயத்தின் ஓசை கேளு
பூவே பூவே உன் மூச்சே சங்கீதம்
சத்தம் சிந்தும் உன் முத்தம் கூட நாதம்
வாழ்வின் தீபம் அடி நீதான் எப்போதும்
என்றும் போதும் நீ சொல்லும் சொல்லே வேதம்

ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே

நீ வெள்ளை சந்திர வீதியில் உலா போகிறாய்
நீ நட்சத்திரங்கள் வாழவே கனா காண்கிறாய்
நெஞ்சே நீ விண்ணை சுற்றிப் பறந்தாலும்
உன் காலன் மண்ணில் ஊன்றி நில் நில் நில்
அன்பே அன்பே அன்பே உன் துக்கத்தை விட்டு
விண்ணை தொட்டு உன் பேரை நிலவில் வெட்டு

படம்: முகவரி
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், சுவர்ணலதா

Sunday, October 2, 2011

நகுமோ ஹேய் சுகமோ



நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி

நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ..

வெள்ளி கொலுசுகள் ஓசை ஓச்சை இட
வெள்ளிக் கிழமையில் ஆசை ஆசை வர
முத்தம் தருகையில் மீச மீச வந்து மோகம் தூண்டிவிடுதே
உச்சந்தலையில் என்னை எண்ணிக் கொண்டு
உள்ளங்கால் வரை பின்னி பின்னிக்கொண்டு
முத்தம் தருகையில் மோகமான கிளி உதடு கடிச்சு விட்டதே
நெசமா நெசந்தான்
காயமா பாரும்மா
நகுமோ ஹேய் சுகமோ
தேன் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி
நகுமோ ஹோ..

அல்லி மலர்வது இரவு நேரத்துல
மல்லி மலர்வது மாலை நேரத்துல
பெண்மை மலர்வது எந்த நேரத்துல
என்னை கண்டு பிடிச்ச
கட்டை விரல் கொண்டு கோலம் போடுகையில்
கண்ணின் கடைவிழி சாய்ந்து மூடுகையில்
காலின் கொலுசுகள் தாளம் மாறுகையில்
பெண்மை மலர்ந்து நிற்குமே
சரியா சரிதான்
பரிசு இதுதான்

நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ..

படம்: அருணாச்சலம்
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா

Wednesday, September 28, 2011

கொஞ்சனாள் பொறு தலைவா



கொஞ்சனாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா

அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்

கொஞ்சனாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா

நேத்துக்கூட தூக்கத்தில பார்த்தேனந்தப் பூங்கொடிய
தூத்துக்குடி முத்தெடுத்து கோர்த்துவெச்ச மால போல
வேர்த்துக்கொட்டி கண்முழிச்சுப் பார்த்தா அவ
ஓடிப்போனா உச்சிமலக் காத்தா
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திகுச்சி இல்லாமலே காதல் தீயப் பத்தவெப்பா

அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்

கொஞ்சனாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா

பச்சைதாவணி பறக்க அங்கு தன்னையே இவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலையே மாமன் கண்ணு மூடல்லையே

என்னோடுதான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
காட்டாயம் என் காதல் ஆட்சி கைகொடுப்பா தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்துவந்து போனா அவ
சந்தனத்தில் செஞ்சுவெச்ச தேனா
என்னுடைய காதலியே ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா
வேரொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா

அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்

கொஞ்சனாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா

படம்: ஆசை
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: வாலி

Sunday, February 27, 2011

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ



வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

வெண்மேகம்…

மஞ்சள் வெயில் நீ..
மின்னல் ஒளி நீ..
உன்னைக் கண்டவரை
கண் கலங்க நிற்க வைக்கும் தீ…
பெண்ணே என்னடி.. உண்மை சொல்லடி..
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி…
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்­ரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும்
எங்கு சென்று படித்தாய்?
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில்
தூக்கி செல்ல கட்டலைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும்
வரம் ஒன்று கிடைக்க…
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ…
உன் பாதத்தில் மண்ணாகுமோ…

வெண்மேகம்…

படம்: யாரடி நீ மோகினி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரிஹரன்

Friday, February 18, 2011

வெண்ணிலவுக்கு ஆசைப்பட்டேன்

வெண்ணிலவுக்கு ஆசைப்பட்டேன் கிட்டுமோ கையில் கிட்டுமோ
வானவில்லுக்கு ஆசைப்பட்டேன் எட்டுமோ அது எட்டுமோ
ஏழையின் மனமே ஏங்குது தினமே
நல்லது நடக்கும் நாளும் மலரட்டுமே

வானத்து தாரகையோ யாரவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும் கலைவாணியின் மகளோ
வண்ணத்தில் தீட்டிடவோ எண்ணத்தை காட்டிடவோ
பார்த்தப்படிசொல்லிடத்தான் வார்த்தைகள் வருமோ
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
கனவில் தினமும் வந்து கண்ணடிப்பாள்
(வானத்து..)

சுட்டும் விழிச் சுடர் பார்த்து மனம் கெட்டதை சொல்லட்டுமா
கொட்டும் பனித் துளி கூட என்னை சுட்டதை சொல்லட்டுமா
கம்பனிடம் கடன் கேட்டு கொஞ்சம் கற்பனை வாங்கட்டுமா
காதல் கொண்ட முகம் பார்த்து நான் வர்ணனை செய்யட்டுமா
அவள் வாங்கி போனாள் என் தூக்கம்
முகம் கண்டாலும் தீராது என் ஏக்கம்
கண்டுப்பிடி யாரு கண்டுப்பிடி
பிரம்மனுக்கு ஒரு தந்தி அடி
அவள் பேச்சு மொழி அல்ல மகுடி
(வானத்து..)

மொட்டு விரித்ததை போலே அந்த பட்டுத் துளிர் மோகமோ
முத்துச் சிதறுதல் போலே சின்ன சின்ன சிரிப்பழகோ
தித்தித்திடும் தேன் சுவையை நான் சொல்வது எப்படியோ
பொங்கி வரும் மலர் வாசம் அதை அள்ளுவதெப்படியோ
ஸ்வரம் ஏழில் அடங்காத ராகம்
இது எல்லோர்க்கும் கிடைக்காத கீதம்
ராதை அவள் நானும் கண்ணன் இல்லை
ராணிக்கு நான் ஒரு மன்னன் இல்லை
அவளோடு பொருந்தாது என் அழகு
(வானத்து..)

படம்: பூந்தோட்டம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், இளையராஜா

Monday, February 14, 2011

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது


Get Your Own Hindi Songs Player at Music Plugin

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது (2)
கண்மணியே ஓ கண்மணியே..
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும்
நீ வேண்டும் என்னுயிரே ஓ.... என் உயிரே.. (நீ தூங்கும் )

பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போகுமே ஓஓ..
நீ தூங்கும் ஓ..கண்மணியே..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..
ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..

மடி மீது நீ இருந்தால்
சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ
நொடி நேரம் பிரிந்தாலும்
காலங்களும் நின்று போகாதோ
ஒரு மூச்சில் இரு தேகம்
வாழ்வது நாமன்றி வேறாரோ
நம் காதல் வெள்ளத்தில்
நடுவே நாம் இருந்தாலும்
என் நெஞ்சம் தாகம் கொள்ளுதே ஓஓ

(நீ தூங்கும்)

கண்ணோடும் நெஞ்சோடும்
உயிரால் உன்னை மூடிக் கொண்டேனே
கனவோடும் நினைவோடும்
நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே
மதி பறிக்கும் மதிமுகமே
உன் ஒளி அலை தன்னில் நான் இருப்பேனே
எங்கே நீ சென்றாலும்
அங்கே நான் வருவேனே
மனசெல்லாம் நீ தான் நீ தானே ஓஓ

(நீ தூங்கும் )
திரைப்படம்: மனசெல்லாம்
இசை:இளையராஜா
பாடியவர் : ஹரிஹரன்


Sunday, January 30, 2011

பூசு மஞ்சள் பூசு மஞ்சள் (ஆண்)



பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்னு
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
என் கண்கள் பொய் சொல்லுமா
வேரில்லாமல் பூப்பூக்குமா
கண்ணோடு ஆனந்தமா
நெஞ்சோடு பூகம்பமா
பிம்பமா உன் போலே பிம்பமா
நம்புமா என் உள்ளம் நம்புமா
(பூசு மஞ்சள்..)

உயிர் நீங்கி போனவளே
என் உயிர் வாங்கி போனவளே
என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுது
பாரம்மா என் வாழ்வை பாரம்மா
நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே
அழகான வாளொன்று அதை கீருதே
தாங்குமா என் உள்ளம் தாங்குமா
உன் போன்ற புன்னகையால் என் வாழ்வை குடிப்பது யார்
உன் போன்ற பார்வையினால் என் கண்ணை எரிப்பவள் யார்
ஒரு விடுகதையே இங்கு தொடர்கதையா
அந்த விடையின் முதல் எழுத்தை
எந்தன் விதி வந்து மறைத்ததே
பொங்குதே கண்ணீரும் பொங்குதே
கண்களில் உன் பிம்பம் தங்குதே
(பூசு மஞ்சள்..)

வடக்கே ஒரு அஷ்டமனம்
தெற்கே ஒரு சந்திரோதயம்
ஆகாயம் என்னோடு திசை மாறுதே
உண்மையா நான் என்ன பொம்மையா
ஒரு ஜென்மம் வாங்கி வந்து
இரு ஜென்மம் வாழுகின்றேன்
இது என்ன கதை என்று விதி கேட்குதே
மாறுமா என் கண்ணீர் மாறுமா
எங்கேயோ தொலைந்த விதை
இங்கே வந்து பூத்தன
முல்லைப்பூ என்றிருந்தேன்
முள்ளை பாய்கிறதே
நான் ஓட நினைக்க
நிழல் என்னை துரத்த
உயிர் தழைக்கும் பயணம்
எந்த திருப்பத்தில் முடியும்
ஓய்ந்ததே என் கால்கள் ஓய்ந்ததே
தீர்ந்ததே கண்ணீரும் தீர்ந்ததே
(பூசு மஞ்சள்..)

படம்: கனவே கலையாதே
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

Friday, January 28, 2011

ச்சா ச்சா ச்சா காதலிச்சா



ச்சா ச்சா ச்சா காதலிச்சா சம்மதிச்சா இந்த மோனலிசா
அட மெல்ல சிரிச்சா என்னை அள்ளி குடிச்சா
நான் கட்டிப்புடிச்சா மெல்ல மூச்சடைச்சா
கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா
முத்தம் கொடுத்து மொத்தமா நனச்சா
(ச்சா ச்சா..)

மடியிலே விழுந்ததே ஒரு நிலா ஹேய்
இளமைக்கு இன்று தான் திருவிழா ஹேய்
உறவில் விழுந்தாள் இதயம் கலந்தாள்
மயக்கம் வருமோ இங்கே
பருவ விருந்தாய் அருவியில் நனைந்தாய்
வெட்கம் போனது இங்கே
முத்தத்தில் கரையாமல் சொர்கத்தில் திரியாமல்
அம்மம்மா காதலுக்குள் இன்பம் இங்கு இல்லையே
(ச்சா ச்சா..)

நெருக்கமாய் இருக்கலாம் அணைக்கலாம் ஹேய்
உதட்டினால் உயிரையே நனைக்கலாம் ஏய்
கொதிக்கும் உடம்பும் தவிக்கும் மனசும்
எனக்கு தந்தாய் நீயே
குளிர குளிர குளிக்கும் பொழுதும்
எனக்குள் இருக்கும் தீயே
கண்ணோடு துயிலில்லை என்னோடு நான் இல்லை
இப்போதும் எனக்கென்று ஏதும் இங்கு இல்லையே
(ச்சா ச்சா..)

படம்: ஜானகி ராமன்
இசை: சிற்பி
பாடியவர்கள்: ஹரிஹரன், நிர்மலா

Monday, January 17, 2011

மீட்டாத ஒரு வீணை



மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆகாய பூக்கள் மழை தூவும் நேரம்
மனதின் ராகம்
(மீட்டாத..)

பளிங்கினால் ஒரு வீடு அமைக்க வா பொன்மானே
விழியினால் இரு தீபம் ஏற்றவா அது போலே
மறந்த அந்த பாடலுக்கு அடி எடுத்து கொடுக்க வா
பிரித்து என்னை பரிதவித்து புதுக்கவிதை படிக்க வா
எரிமலையும் பனிமலை என்றே மாறுது ஏ பைங்கிளி
(மீட்டாத..)

கனவிலே துயில் நீங்கி திரும்பினால் உன் உருவம்
முழு நிலா முகம் பார்க்க மலர்ந்ததே உன் வடிவம்
நடந்து செல்லும் வழி முழுதும் என் நிழலை அனுப்பவா
துணைக்கு வந்த நிழல் அதற்கு குடை எடுத்து பிடிக்கவா
ஒரு கணமும் பல யுகம் என்றே ஆகுது சொல் பைங்கிளி
(மீட்டாத..)

படம்: பூந்தோட்டம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், மகாலெட்சுமி ஐயர்

Last 25 songs posted in Thenkinnam