Thursday, March 28, 2013
ஞாயிறு என்பது கண்ணாக
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 11:24 AM 4 பின்னூட்டங்கள்
வகை 1960's, KV மகாதேவன், P சுசீலா, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன்
Thursday, January 17, 2013
எம்.ஜி.ஆர் - போயும் போயும் மனிதனுக்கிந்த
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே
இறைவன் புத்தியை குடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்
பாயும் புலியின் கொடுமையை இறைவன் பார்வையில் வைத்தானே
புலியின் பார்வையில் வைத்தானே
இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே
இதய போர்வையில் மறைத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே
கைகளை தோளில் போடுகிறான்
அதை கருணை என்று அவன் கூறுகிறான்
கைகளை தோளில் போடுகிறான்
அதை கருணை என்று அவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே
இறைவன் புத்தியை குடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே
படம் : தாய் சொல்லை தட்டாதே (1961)
இசை : மகாதேவன்
பாடியவர் : செளந்தர்ராஜன்
வரிகள் : கண்ணதாசன்
பதிந்தவர் நாகை சிவா @ 9:30 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1960's, KV மகாதேவன், MGR, MS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன்
Monday, December 24, 2012
எம்.ஜி.ஆர் - உண்டாக்கி விட்டவர்கள்
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
கொண்டாடும் போது ஒரு நூறு பேர்
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
கொண்டாடும் போது ஒரு நூறு பேர்
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்
இவன் தேறாத வைத்தியத்தை சேர்ந்து படித்தான்
படித்தான் முடித்தான் ஹோய்
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்
இவன் தேறாத வைத்தியத்தை சேர்ந்து படித்தான்
படித்தான் முடித்தான்
பிறர் நோய் தீர்க்கும் வைத்தியசன்
நோய் தீர்க்க மாட்டாமல்
பாய் போட்டு தூங்குதப்பா
உயிரும் பேயோடு சேர்ந்தப்பா
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார்
எந்த காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார்
கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார்
எந்த காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார்
நல்ல சேதி சொல்லும் ஜோசியர்க்கும்
நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து விட்டதடியோ
கணக்கில் மீதி வைக்கவில்லை அடியோ
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டது போல வேலி எடுத்தான்
எடுத்தான் முடித்தான் ஹோய்
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டது போல வேலி எடுத்தான்
அதில் எட்டு அடுக்கு மாடி வைத்து
கட்டிடத்தை கட்டி விட்டு
எட்டு அடிக்குள் வந்து படுத்தான்
மண்ணை கொட்டியவன் வேலி எடுத்தான்
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
கொண்டாடும் போது ஒரு நூறு பேர்
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
கொண்டாடும் போது ஒரு நூறு பேர்
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
படம் : முகராசி
இசை : மகாதேவன்
பாடியவர் : செளந்தர்ராஜன்
வரிகள் : கண்ணதாசன்
பதிந்தவர் நாகை சிவா @ 9:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1960's, KV மகாதேவன், MGR, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன்
Tuesday, October 23, 2012
கல்வியா செல்வமா வீரமா
கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா
கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா
கல்வியா செல்வமா வீரமா
படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா
பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா
படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா
பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா
படித்தவன் படைத்தவன் யாராயினும்
படித்தவன் படைத்தவன் யாராயினும்
பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா
பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா
கல்வியா செல்வமா வீரமா
ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது
அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது
ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது
அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது
மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது
மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது
கல்வியா செல்வமா வீரமா
மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா
காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா
மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா
காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா
தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா
தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா
இவை மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா
இவை மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா
கல்வியா செல்வமா வீரமா
படம் : சரஸ்வதி சபதம்
இசை : மகாதேவன்
பாடியவர் : செளந்தர்ராஜன்
வரிகள் : கண்ணதாசன்
பதிந்தவர் நாகை சிவா @ 4:00 PM 3 பின்னூட்டங்கள்
Monday, May 16, 2011
வாடா... மச்சான் வாடா



தேன்கிண்ண நேயர்களே நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ளேன் இனிமையான பாடலுடன். கேட்டு மகிழுங்கள்.
படம்: அன்று கண்ட முகம்
பாடியவர்கள்: டி.எம்.எஸ், ஏ.எல்.ராகவன்
இசை: கே.வி.மகாதேவன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
வாடா... மச்சான் வாடா
வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா
ஆசை மட்டும் பெரிசா இருந்தா
அதிர்ஷ்டம் வருமாடா ஓ ஓ ஹோஒ
மீசை மட்டும் பெரிசா இருந்தா
வீரம் வருமாடா ஆஆஆஆ ஓஓஓஓ
ஆசை மட்டும் பெரிசா இருந்தா
அதிர்ஷ்டம் வருமாடா
மீசை மட்டும் பெரிசா இருந்தா
வீரம் வருமாடா
காசுக்காக காரியம் செஞ்சா கருணை வருமாடா
வெறும் காசுக்காக காரியம் செஞ்சா கருணை வருமாடா
கைக்கு கையா சண்டை போட தைரியம் உண்டோடா
ஏண்டா டோய் ஏண்டா டோய் ஏண்டா டோய் டேய் டேய்
வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
வாடா மச்சான் வாடா
தண்டனைக்கு தப்பிய திருடன் தரணியில் உண்டோடா டா
தப்பிப் போன திருடனை கூட தர்மம் விடுமாடா
தண்டனைக்கு தப்பிய திருடன் தரணியில் உண்டோடா டா
தப்பிப் போன திருடனை கூட தர்மம் விடுமாடா
அந்தப் புகழும் கொலையும் கூட அகப்பட்டுக் கொண்டாண்டா டா டா
அவனே அப்படி ஆனா நீயே அப்பன் மகனோடா போடா
வாடா மச்சான் வாடா.. பயப்படாமா வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா
சொந்தப் புத்தி இருந்தா நல்ல சோத்துக்கு வழியுண்டு
இந்த புத்தி இருந்தா அங்கே கம்பிக் கதவு உண்டு
அம்மா இருந்தா அவளை தேடும் பாசம் என்னென்று
எங்கம்மா இருந்தா அவளை தேடும் பாசம் என்னென்று ஹெஹே
அடுத்தவன் சொல்லை கேட்டு கெட்டவன் ஆயிரம் பேருண்டு
ஏண்டா டோய் ஏண்டா டோய் ஏண்டா டோய் டேய் டேய்
வாடா மச்சான் வாடா.. பயப்படாமா வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா
|
பதிந்தவர் Anonymous @ 11:03 AM 0 பின்னூட்டங்கள்
Thursday, December 16, 2010
நதிக்கரை ஓரத்து நாணல்களே
நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகன் புகழை கேளுங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்களே
நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாருங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்களே
நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாருங்களே
தரையை தொடாத தென்றலைப் போல்
உன் தாமரை பாதங்கள் நடப்பதென்ன
கல்யாண செய்தியைக் கேட்டவுடன்
என் கால்கள் தரையைத் தொடவில்லையே
கரையைத் தொடாத அலைகளைப்போல்
உன் கருங்குழல் கைகளில் விழுவதென்ன
காதலன் கையினில் சுகம் பெறவே
என் கூந்தல் சரிந்து விழுந்ததய்யா
நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகன் புகழை கேளுங்களே
கங்கையின் சங்கமம் கடலிடத்தில்
எந்தன் கன்னியின் சங்கமம் என்னிடத்தில்
ஜென்மம் பூமியில் விழும் போதே
என் சிந்தை கலந்தது உன்னிடத்தில்
உதடுகளாலே கதை எழுதி
உள்ளத்தை மயக்கிட நான் வரவா
மாலையும் மேளமும் வரும் வரைக்கும்
உன் மனதை அடக்கவும் முடியாதா
நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாருங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்களே
பாடியவர்கள்.: ஷைலஜா, ஜேஸுதாஸ்
திரைப்படம்: காதல்கிளிகள்
வரிகள் : முத்துலிங்கம்
இசை: கே. வி . மகாதேவன்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 12:04 PM 0 பின்னூட்டங்கள்
Thursday, October 28, 2010
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மயக்கம் என்ன...... இந்த மௌனம் என்ன
மணி மாளிகைதான் கண்ணே
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே
கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா
தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட
மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்
இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
மணி மாளிகைதான் கண்ணே
பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர
ஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர
மல்லிகை காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட
வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்து வண்ண இதழ் உன்னை நீராட்ட
மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்
இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
மணி மாளிகைதான் கண்ணே
அன்னத்தை தொட்ட கைகளினால்
மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
மதுவருந்தாமல் விட மாட்டேன்
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொட மாட்டேன்
உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை
உயிர் போனாலும் தரமாட்டேன்
மயக்கமென்ன.. ஆ ஆ ஆஅ ஆஅ
இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன..ஆ ஆ ஆ
இந்த சலனமென்ன....ஆ ஆ ஆஆ
அன்பு காணிக்கைதான் கண்ணே
ஆ ஆ ஆ ஆ ஆஅ
அன்பு காணிக்கைதான் கண்ணே
படம்: வசந்த மாளிகை
இசை: KV மகாதேவன்
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
பதிந்தவர் MyFriend @ 1:02 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1970's, KV மகாதேவன், P சுசீலா, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன்
Tuesday, October 26, 2010
மெதுவா மெதுவா தொடலாமா
Get Your Own Hindi Songs Player at Music Plugin
மெதுவா மெதுவா தொடலாமா -
என்மேனியிலே கை படலாமா.. படலாமா ?
ஓ...ஓஹோ.ஹோ..
வெட்கம் இப்போது வரலாமா -
நீவிலகிச் செல்வதும் சரிதானா.. சரிதானா ?
வேட்டைக்கு வந்தது நினைவில்லையா நினைவில்லையா -
இங்குவேறொரு புள்ளிமான் கிடைக்கலையா கிடைக்கலையா
காட்டுக்குள்ளே இந்த நாடகமா
காதலென்றால் இந்த அவசரமா..அவசரமா ?
(வெட்கம்)
குளிர்ந்த காற்றாய் மாறட்டுமா மாறட்டுமா -
உன்கூந்தலில் நடனம் ஆடட்டுமா ஆடட்டுமா
கொல்லும் கண்களை வெல்லட்டுமா
கோடிக் கதைகள் சொல்லட்டுமா.. சொல்லட்டுமா
(மெதுவா)
இதயம் முழுவதும் எனக்கில்லையா எனக்கில்லையா
இன்பமும் துன்பமும் உனக்கில்லையா உனக்கில்லையா
நாளை மணமக்கள் நாமில்லையா -
அதுநடக்கும் வரையில் பொறுக்கலையா
(மெதுவா)
படம்: வேட்டைக்காரன்
இசை: KV மகாதேவன்
பதிந்தவர் MyFriend @ 1:18 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1960's, KV மகாதேவன்
Saturday, August 7, 2010
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
சுவாமி
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா இந்தச்
சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன (2)
நவரசமும்
முகத்தில் நவரசமும்
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்
செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனிரசமும் (2)
கண்டு
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்
உன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார் (2)
பாவை என் பதம் காண நாணமா (2)
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா (2)
மாலவா வேலவா மாயவா சண்முகா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன் (2)
மோகத்திலே என்னை மொழ்க வைத்து (2)
ஒரு ஓரத்திலே நின்று கள்வனைப் போல் (2)
மாலவா வேலவா மாயவா சண்முகா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
மானாட மலராட மதியாட நதியாட
மங்கை இவள் நடனமாட
வானாட மண்ணாட கொடியாட இடையாட
வஞ்சி இவள் கைகளாட
சுவையோடு நானாட எனை நாடி இது வேளை
விரைவினில் துணையாக ஓடி வருவாய்
தூயனே மாலவா மாயனே வேலவா
எனையாளும் சண்முகா வா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா இந்தச்
சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
படம் : தில்லானா மோகனாம்பாள் (1968)
இசை : கே.வி. மகாதேவன்
பாடியவர் : பி. சுசீலா
வரிகள் : கண்ணதாசன்
பதிந்தவர் நாகை சிவா @ 10:46 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1960's, KV மகாதேவன், P சுசீலா, கண்ணதாசன்
நலந்தானா நலந்தானா
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா (3)
நலம் பெற வேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இலைமறைகாய் போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா
கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன்
இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா
நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
நடப்பதையே நினைத்திருப்போம் (2)
கஷ்டமெல்லாம் பொறுத்திருப்போம்
காலம் மாறும் சந்திப்போம்
படம் : தில்லானா மோகனாம்பாள் (1968)
பாடியவர் : பி. சுசீலா
இசை : கே.வி. மகாதேவன்
வரிகள் : கண்ணதாசன்
பதிந்தவர் நாகை சிவா @ 1:14 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1960's, KV மகாதேவன், P சுசீலா, கண்ணதாசன்
Wednesday, August 4, 2010
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
திரைப்படம்: வண்ணக்கிளி
பாடியவர்: பி.சுசீலா
இசை: கே.வி.மஹாதேவன்
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத் தான் நல்ல பாப்பா
(சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா)
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரணுமா
சிலுக்கு சட்டை சீனப் பொம்மை பலூன் வேணுமா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரணுமா
சிலுக்கு சட்டை சீனப் பொம்மை பலூன் வேணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரணுமா
அப்போ..கலகலனு சிரிச்சுகிட்டு என்னைப் பாரம்மா
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத் தான் நல்ல பாப்பா
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு
நீ கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாத் தான் சாப்பிடுவாரு
கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு
நீ கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாத் தான் சாப்பிடுவாரு
கோழி மிதிச்சி குஞ்சு முடம் ஆகி விடாது ...குங்குமம்(?)
கோழி மிதிச்சி குஞ்சு முடம் ஆகி விடாது
உனக்கு கொய்யாப் பழம் பறிச்சுத் தாரேன் அழுகை கூடாது
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத் தான் நல்ல பாப்பா
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
chinna pApA enga chella pApA - Vannakkilli-ORIGINAL | Music Codes
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 1:47 PM 1 பின்னூட்டங்கள்
வகை KV மகாதேவன், P சுசீலா
Friday, June 26, 2009
பேசும் தெய்வம் - நூறாண்டு காலம் வாழ்க
பாடலை கேட்க இங்கே செல்லுங்கள்
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குன்றாத நவநிதியாக
குன்றாத நவநிதியாக
துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக
நீ வாழ்க.. நீ வாழ்க..
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
விளையாத மண்ணில் தளிராக
மலராத கொடியில் கனியாக
விளையாத மண்ணில் தளிராக
மலராத கொடியில் கனியாக
மலடென்ற பேரும் பொய்யாக
மலடென்ற பேரும் பொய்யாக
வந்த மகனே உன் வாழ்வு நிறைவாக
நீ வாழ்க... நீ வாழ்க..
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
படம் : பேசும் தெய்வம்
இசை : KV மகாதேவன்
பாடியவர் : சூலமங்களம் ராஜலக்ஷ்மி
பதிந்தவர் G3 @ 2:28 PM 3 பின்னூட்டங்கள்
Wednesday, June 24, 2009
ரத்த திலகம் - ஒரு கோப்பையிலே
பாடலை கேட்க
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
(ஒரு...)
காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
நான் காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனிமனிதன்
நான் படைப்பதனால் என்பேர் இறைவன்
(ஒரு...)
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன்
நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
(ஒரு...)
படம் : ரத்த திலகம்
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை : KV மகாதேவன்
பதிந்தவர் G3 @ 10:00 AM 3 பின்னூட்டங்கள்
Monday, December 8, 2008
823. கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக்கொஞ்சி................
நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்(நஞ்சை)
உண்மை இதை உணர்ந்து
நன்மை பெறப் படித்து
உலகினில் பெரும் புகழ் சேர்த்திடடா
பள்ளியில் சென்று கல்வி பயின்று
பலரும் போற்ற புகழ் பெறுவேன்
சபாஷ்....
(கொஞ்சிக்கொஞ்சி)
அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது( அக்கம்)
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு
அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டின் வீரன் ஆவேன்
சபாஷ்..
(கொஞ்சிக்கொஞ்சி)
தன்னந்தனிமையில் நீ இருந்தால்
துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால்
கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா
கண்மணி எனக்கதை சொல்லிடு நீ
புயலைக் கண்டு நடுங்க மாட்டேன்
முயன்று நானே வெற்றி கொள்வேன்
சபாஷ்...
(கொஞ்சிக்கொஞ்சி)
திரைப்படம் : கைதி கண்ணாயிரம்
பாடியவர் : சுசீலா
பாடல் இயற்றியவர் : மருதகாசி
இசையமைத்தவர்: கே.வி மகாதேவன்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 4:16 PM 10 பின்னூட்டங்கள்
வகை KV மகாதேவன், P சுசீலா, மருதகாசி
Monday, August 25, 2008
660.ஆகா நம் ஆசை நிறைவேறுமா.....
ஆகா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையைப்போல மறைந்து போக நேருமா
அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தலின்றிப் போகுமா
ஈடில்லா இருபறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போது பகை வல்லூறாகத் தோன்றுமோ(ஈடில்லா)
வல்லூறானதை வனத்தில் வாழும் வேடன்
ஆகி நான் (வல்லூறானதை)
வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால் -
வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்
ஆஆ
(ஆகா நம் ஆசை )
அருமை மொழி காதில் அமுதாக பாய்வதால்
அகமே மகிழ்ந்தேன் அத்தானே
(உன்)அழகே நீரோடை அதில் நீந்தும் மீனைப்போல
ஆனந்தமானேன் என் கண்ணே (அருமை மொழி)
ஆஆஆஆ
உமது ஆனந்தமே அழியாச்செல்வமே(2)
ஆருயிரே நானுனக்கே சொந்தமே(2)-என்
ஆஆஆஆஆ
ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை
ஆளுவோம்- நாம் (ஈருடல் )
திரைப்படம் : தாய்க்குப்பின் தாரம்
பாடலைப்பாடியவர்கள்: டி.எம். எஸ். P.பானுமதி
இசையமைத்தவர்: கே.வி .மகாதேவன்
பாடல்வரிகள் : சி.ஏ.லக்ஷ்மணதாஸ்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 6:15 PM 0 பின்னூட்டங்கள்
வகை C.A.லக்ஷ்மணதாஸ், KV மகாதேவன், P.பானுமதி, TM சௌந்தர்ராஜன்
Tuesday, July 8, 2008
547. காவியமா நெஞ்சின் ஓவியமா
படம் : பாவை விளக்கு
குரல் : சிதம்பரம் ஜெயராமன், சுசீலா
பாடல் : மருதகாசி
இசை : கே.வி.எம்.
நடிகர்கள் : சிவாஜி, எம்.என்.ராஜம்
விரும்பிக் கேட்டவர் : நீல் மணி (Neel Mani )
காவியமா நெஞ்சின் ஓவியமா - அதன்
ஜீவியமா தெய்வீகக் காதல் சின்னமா
(காவியமா)
மொகலாய சாம்ராஜ்ய தீபமே - சிரித்த
முகத்தோடு நினைவில் பொங்கும் ரூபமே
மும்தாஜே....ஏ...
மும்தாஜே முத்தே என் பேகமே - பேசும்
முழுமதியே என் இதய கீதமே
என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே
என்னைச் சொந்தம் கொண்ட தெய்வமே
அன்பின் அமுதமே அழகின் சிகரமே
ஆசை வடிவமே உலகின் அதிசயமே
(காவியமா)
என்னாளும் அழியாத நிலையிலே - காதல்
ஒன்றேதான் வாழும் இந்த உலகிலே
கண்முன்னே தோன்றும் அந்தக் கனவிலே
உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே
கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்
இனிமை தருவதுண்மைக் காதலே
காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
(காவியமா)
பதிந்தவர் Iyappan Krishnan @ 3:31 PM 2 பின்னூட்டங்கள்
வகை 1960's, CS ஜெயராமன், KV மகாதேவன், P சுசீலா, மருதகாசி
Tuesday, May 20, 2008
450. பாட்டும் நானே பாவமும் நானே
ஆ...ஞா ஆ...ஞா ஆ...ஞா
பாட்டும் நானே பாவமும் நானே...
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
(பாட்டும் நானே..)
அசையும்..பொருளில்..இசையும் நானே
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே..ஏ..
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
ஆலவாயனொடு பாடவந்தவனின்
பாடும்வாயை இனி மூடவந்ததொரு
(பாட்டும் நானே..)
படம்: திருவிளையாடல்
இசை: KV மகாதேவன்
பாடியவர்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்
விரும்பி கேட்டவர்: சுவேக்
பதிந்தவர் MyFriend @ 6:00 PM 3 பின்னூட்டங்கள்
வகை 1960's, KV மகாதேவன், TM சௌந்தர்ராஜன்
Sunday, May 11, 2008
421. ஒரு நாள் போதுமா?
ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?
நான் பாட இன்றொரு நாள் போதுமா?
நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா?
புதுநாதமா சங்கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா?
ராகமா சுகராகமா கானமா தேவகானமா
என் கலைக்கு இந்த திருநாடு சமமாகுமா?
நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா ?
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்டப் பின்னாலே அவர் மாறுவார்
அழியாத கலையென்று எனைப் பாடுவார்
எனையறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ
எழுந்தோடி வருவாரன்றோ
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ..
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ
கலையாத மோகனச் சுவை நானன்றோ
மோகனச் சுவை நானன்றோ
கலையாத மோகனச் சுவை நானன்றோ
கானடா என் பாட்டுத் தேனடா
இசை தெய்வம் நானடா
படம்: திருவிளையாடல்
இசை: கே.வி. மகாதேவன்
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: பாலமுரளி கிருஷ்ணா
**
விரும்பிக் கேட்டவர்: சுவேக்
பதிந்தவர் கப்பி | Kappi @ 4:46 AM 0 பின்னூட்டங்கள்
Saturday, May 10, 2008
420. பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அசல்:
ரீமிக்ஸ்:
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல்
ஒரு அம்மாண்டி ராஜா
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல்
ஒரு அம்மாண்டி ராஜா
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா
பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு அப்பாவி ராணி
அவள் சேலை கட்ட பார்த்தா போதும்
ஒரு அம்மாண்டி ராணி
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா
பாலிருக்கும் பழமிருக்கும் பள்ளியறையிலே
அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும் சாந்தி முகூர்த்தம்
சாந்தியென்றால் என்னவென்று ராணியை கேட்டாராம்
ராணி தானும் அந்த கேள்வியையே ராசாவை கேட்டாளாம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
அவர் படித்த புத்தகத்தில் சாந்தி இல்லையே
இந்த அனுபவத்தை சொல்லித்தர பள்ளியில்லையே
கவிதையெனும் கலைகளிலும் பழக்கம் இல்லையே
அவர் காதலிக்க நேற்று வரை ஒருத்தி இல்லையே
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
பூக்களிலே வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம்
தேவி பூஜையிலே ஈஸ்வரனின் பள்ளியை கண்டாராம்
மரக்கிளையில் அணில் இறங்க ஆடிட கண்டாராம்
ராஜா மனதுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான்
அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால்கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தான்
ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தான்
யாரம்மா அது நானம்மா
யாரம்மா அது நானம்மா
(பாலக்காடு..)
படம்: வியட்னாம் வீடு
இசை: KV மகாதேவன்
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
விரும்பி கேட்டவர்: அபி அப்பா
பதிந்தவர் MyFriend @ 5:54 AM 5 பின்னூட்டங்கள்
வகை 1950's, KV மகாதேவன், P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
Thursday, April 3, 2008
353.நீ போகுமிடமெலாம் நானும்வருவேன் போபோ போ!
ஆண்:போ போ போ..ஓஓ ஓ..
பெண்: வாவா வா ஆஆஆ
ஆண்: நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ
பெண்: நீ வாழுமிடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா
ஆண்: பச்சைக்கிளியாய் மாறலாம் பறந்து வானில் ஓடலாம்
நான் இச்சைக்கிளியாய் மாறுவேன் என்றும் உன்னை நாடுவேன் -நீ (பச்சைக்கிளியாய்)
போபோ போ
பெண்: உள்ளம் உள்ளது என்னிடம் உரிமை உள்ளது உன்னிடம்
இனி நான் போவது எவ்விடம் எது சொன்னாலும் சம்மதம்
வா வா வா
ஆண் : போ போ போ
ஆண்: காலம் உன்னிடம் ஆடலாம் கவிஞர் உன்னைப்பாடலாம்
மாதர் உன்னைப் போற்றலாம் மனதில் என்னைக்காணலாம் (காலம்)
போ போ போ
பெண்: பொங்கும் மஞ்சள் குங்குமம் பூவும் உன்னிடம் சங்கமம்
எதுவும் இல்லை என்னிடம் என்னைத்தந்தேன் உன்னிடம்
வா வா வா
ஆண்: நீ போகுமிடமெலாம் நானும் வருவேன் போ போ போ
பெண் : நீ வாழுமிடமெலாம் நானும் வருவேன் வா வா வா
|
படம்: இதயக்கமலம்
பாடல்வரிகள் :கண்ணதாசன்
இசை: கேவி.மகாதேவன்
பாடியவர்கள்: பி.சுசீலா ,PB.ஸ்ரீநிவாஸ்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 8:30 AM 2 பின்னூட்டங்கள்
வகை 1960's, KV மகாதேவன், P சுசீலா, PB ஸ்ரீநிவாஸ்