திரைப்படம்: வண்ணக்கிளி
பாடியவர்: பி.சுசீலா
இசை: கே.வி.மஹாதேவன்
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத் தான் நல்ல பாப்பா
(சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா)
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரணுமா
சிலுக்கு சட்டை சீனப் பொம்மை பலூன் வேணுமா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரணுமா
சிலுக்கு சட்டை சீனப் பொம்மை பலூன் வேணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரணுமா
அப்போ..கலகலனு சிரிச்சுகிட்டு என்னைப் பாரம்மா
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத் தான் நல்ல பாப்பா
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு
நீ கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாத் தான் சாப்பிடுவாரு
கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு
நீ கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாத் தான் சாப்பிடுவாரு
கோழி மிதிச்சி குஞ்சு முடம் ஆகி விடாது ...குங்குமம்(?)
கோழி மிதிச்சி குஞ்சு முடம் ஆகி விடாது
உனக்கு கொய்யாப் பழம் பறிச்சுத் தாரேன் அழுகை கூடாது
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத் தான் நல்ல பாப்பா
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
Wednesday, August 4, 2010
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 1:47 PM
வகை KV மகாதேவன், P சுசீலா
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
எனக்கு பிடித்த பாடலை தேன் கிண்ணத்தில் வழங்கிய முத்து லெட்சுமிக்கு நன்றி.
திருவனந்தபுரத்தில் இந்த படப்பிடிப்பின் போது என் மாமாவுடன் சென்று பார்த்த நினைவும், நடிகர் மனோகர் அவர்களிடம் பேசியதும் நினைவுக்கு வருகிறது.
Post a Comment