Wednesday, February 13, 2013

ஏ ஆக்காட்டி ஆக்காட்டி




அந்த உருண்ட மலை ஓரத்துல...
உருண்ட மலை ஓரத்துல
உருண்ட மலை ஓரத்துல
உளுந்து காயப் போட்டிருந்தேன்...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே
இந்த சண்டாளச் சீமையிலே இன்னைக்கு
உருமிச்சத்தம் தான் கேட்டதென்ன...

ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே...?
நாங் கல்லத் தொளைச்சி
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்...

நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
ஐயா நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
அந்த மூனு குஞ்சுல
மூத்த குஞ்சிக்கெரை தேடி
மூனு மலை சுத்தி வந்தேன்
நடு குஞ்சிக்கெரை தேடி
நாலு மல சுத்தி வந்தேன்
இளைய குஞ்சிக்கெரை
தேடப் போகையிலே...போகையிலே...போகையிலே...

என்னை கானாங்குறத்தி மகன்,
ஐயா என்ன கானா...கானா...ங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்
என்னை கானாங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்

எங் காலு ரெண்டும் கண்ணிக்குள்ளே
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
நான் பெத்த மக்கா
நான் அழுத கண்ணீரு
ஆறாப் பெருகி ஆனை குளிப்பாட்ட
குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட
ஏரி பெருகி எருது குளிப்பாட்ட
பள்ளம் பெருகி பன்னி குளிப்பாட்ட
நான்... பெத்த... மக்கா...
நான் பெத்த மக்கா
உங்கள பாதியில விட்டு
நான் இப்போ பரலோகம்
போறேனே...போறேனே...போறேனே...

(வேகமாய்)
ஏ...ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக் கூடாது
கத்துங்குருவியே நீ கதறி அழக் கூடாது (2)

வலை என்ன பெருங்கனமா?
அதையறுக்க வழிகளும் இருக்குதம்மா (2)

சின்னக்குருவியே நீ சிணுங்கி அழக் கூடாது
நொய்க்குருவியே நீ நொந்து அழக் கூடாது (2)

அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்
அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்

வலியும் வேதனையும் வலையோடு போயிடுச்சி
வாழ்க்க என்னான்னு போராடி தெரிஞ்சிடுச்சி (2)

வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்

படம் : தவமாய் தவமிருந்து(2005)
பாடல் : சா.பெருமாள்
இசை : சபேஷ் - முரளி 
பாடியது : ஜெயமூர்த்தி

Thursday, February 16, 2012

நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே

நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே
காதல் நுழைந்த வழி கண்டறிவாய் காதலியே

விண்ணில் மழை துளிகள் மின்னலாய் நின்றுவிட
மண்ணில் எனது நிழல் உன்னைப்போல மாறி விட
விரலோரம் கவிதை ஊறியதே
விழியோரம் காதல் கசிகிறதே
நதி மேலே ஓற்றை காலில் மழை ஆடும் ஆனந்தமாய்
கனவு ஊறும் மனசுக்குள்ளே
காதல் வந்து ஓற்றை காலில் சுற்றி சுற்றி மூழ்கடிக்குதே

நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே

உன் இதயம் நான் படிக்க கள்வனாய் மாறி வந்தேன்
என்னைப் போல நீயும் ஓரு கள்ளி என கண்டு கொண்டேன்
என் விரலை உன் விரலாய் இரவினில் தீண்டுகிறேன்
முத்தமென்று தண்ணீரை முகத்தினில் ஊற்றுகிறேன்
உன் முகம் தேடி காலையில் வெயிலாகிறேன்
உன் குரல் தேடி சாலையில் குயிலாகிறேன்

தேர்வு அறை முழுதும் தேவதையே உன் நினைவு
நாளை விடுமுறையாம் காதல் வதை உன் பிரிவு

கண்கள் எனை மறந்து உன்னையே தேடியது
சுவாசம் உன் பெயரை என்னுள்ளே பாடியது
லேசாக சண்டை போடவா
பேசாமல் முத்தம் கேட்கவா
வெயில் காயும் சாலையிலே மழை தூவும் ஆனந்தமாய்
தனிமை நீங்கும் வேளையிலே
காதல் நம்மை காற்றைப் போல எங்கோ எங்கோ கொண்டு செல்லுதே...

திரைபடம்: தவமாய் தவமிருந்து
இசை: சபேஷ் முரளி
பாடியவர்: ப்ரசன்னா

Monday, August 9, 2010

கோரிப்பாளையம் - என்ன இந்த மாற்றமோ



என்ன இந்த மாற்றமோ
என் மனசு வலிக்குதே
கண்ணு ரெண்டும் காந்தமோ
என்ன கட்டி இழுக்குதே
உன் பூமுகத்தில்
என் தாய் முகத்தை
நான் பார்த்தேனே
உன் ஞாபகத்தை
என் ஆயுல் வரை நான் சேர்ப்பேனே
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ
(என்ன இந்த..)

உன் புன் சிரிப்பில்
என் உலகத்தையே
நான் பார்த்தேனே
உன் ஞாபகத்தை
என் ஆயுள் வரை
நான் சேர்ப்பேனே
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ

சின்ன சின்ன புன்னகையில்
என்னை பறித்தாய்
வண்ண வண்ண கனவுகள்
கண்ணில் கொடுத்தாய்
சிறிய இதயத்தில்
பெரிய காதலை
தந்தாய் அடி என் அன்பே
மெல்ல மெல்ல மனசுக்குள்
இடம் பிடித்தாய்
மின்மினிக்குள் மின்னல்போல்
ஒளி கொடுத்தாய்
உறங்கும் நேரத்தில்
நினைவின் ஓரத்தில்
வந்தாயடா என் அன்பே
ஒரு பார்வை பார்க்கும் போதிலே
என் பாதம் வானம் ஏறுதே
மறு பார்வை பார்க்கும் போதிலே
எந்தன் ஜென்ம சாபம் தீருதே
என் கால் கொலுசு
உன் பேரை சொல்ல
நான் கேட்டேனே
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ
(என்ன இந்த..)

சுற்றி உந்தன் முகமன்றி
ஏதும் இல்லையே
மற்றபடி வேற ஒன்னும்
தோணவில்லையே
உயிரை எடுக்கிறாய்
திரும்ப கொடுக்கிறாய்
திண்டாடுதே என் நெஞ்சம்
நெற்றி பொட்டில் நேற்று வரை
காய்ச்சல் இல்லையே
நட்சத்திரம் பார்த்து நானும்
பேசவில்லையே
உயிரில் குதிக்கிறாய்
நீச்சல் அடிக்கிறாய்
கொண்டாடுதே என் நெஞ்சம்
உன்னை பார்த்து கொஞ்சி பேச தான்
எந்தன் ஆசை தாவி ஓடுதே
உனை பார்த்து பேசும் நேரத்தில்
எந்தன் வார்த்தை ஊமை ஆகுதே
கண் பார்வை ரெண்டும்
சொல்லாதையா
உன் இதழ்கள் சொல்லு
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ
(என்ன இந்த..)

படம்: கோரிப்பாளையம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: கார்த்திக், மதுமிதா
வரிகள்: நா. முத்துக்குமார்

Tuesday, April 6, 2010

அட கொண்டை சேவல் ஒலிக்க


Get Your Own Hindi Songs Player at Music Plugin

அட கொண்டை சேவல் ஒலிக்க
இளம் கூட்டு குருவி முளிக்க
அட புத்தம் புதிய சத்தம் கேட்குதே..

அட கொண்டை சேவல் ஒலிக்க
இளம் கூட்டு குருவி முளிக்க
அட புத்தம் புதிய சத்தம் கேட்க வா
கொடி பூவில் திறக்கும் சத்தம் கேட்க வா
அட சோம்பல் முறிக்கும் கிழக்கு
இன்னும் உறக்கம் எதுக்கு உனக்கு
(அட சோம்பல்..)
அட வாசல் தெளிக்கும் ஒலியில்
புது வாழ்வின் துடக்கம் இருக்கு
(அடக்கொண்ட..)

கன்னுக்குட்டி முளிச்சு மணிமுத்து மொழியில்
மலடிக்கெல்லாம் பால் ஊரும்
குன்றுகளில் இருந்து கோவில் மணி ஒலித்தால்
காற்று வழி தேன் ஊரும்
அந்த ஆற்றில் எழும் பாட்டில் ஒலி கரையின் உரிமை
வயல் காட்டில் எழும் பாட்டில் ஒலி நாற்றின் உரிமை
உந்தன் இதழ் ஆடும் சிரிப்போசை என்றென்றும் என் உரிமை
(அடக்கொண்ட..)

இது வரை கேட்ட இசைகளில் எல்லாம்
மிக இனிது தாலாட்டு
மறுப்படி என்னை கருவரை தாங்கி
மாற்றவே தாலாட்டு
இந்த பிறவி என்ந்த மகனாய்
வந்து பிறந்தாய் மகனே
மறுபிறவி உந்தன் மகளாய்
வந்து பிறப்பேன் மகனே
தாய் அண்ணன் இருவரையும்
இயற்கையாய் பெறுவேனே
(அடக்கொண்ட..)

படம்: அடைக்களம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: சுஜாதா, மது பாலகிருஷ்ணன்

Monday, April 5, 2010

உயிரே பிரியாதே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

உயிரே பிரியாதே
உறவே விலகாதே

உயிரே பிரியாதே
உறவே விலகாதே
பிறந்தது தானே தாய் தந்த வாழ்க்கை
பிறவியில் மீதம் நீ த்ந்த வாழ்க்கை
உலகம் உடைகிண்ற போதும்
உயிரே அருகில் இரு போதும்
(உயிரே..)

உச்சி முதல் பாதம் வரை உதடுகள் நடத்தி
உணர்ச்சியின் அணைகளை உடைத்து விட்டாயே
என்ன இது என்று உன்னை விணவிட வந்தேன்
இதழ்களை இதழ்களை அடைத்து விட்டாயே
மொத்த மனித குலம்
கண்ட சுகம் முழுதும்
ஒத்த இரவில் முடிப்போம்
அண்டம் முடியும் வரை
இன்று கொண்ட சுகம்
கண்டு கண்டு களிப்போம் ஓ..
(உயிரே..)

படுக்கையில் சுமந்ததால் பத்து மாதம் சுமந்தாஉ
பாவையே நீ கொண்ட பொறுமைக்கு வணக்கம்
நாம் கொண்ட குடும்பம் ஒரு கோவில் என்று
குல தெய்வம் வந்து வணங்கும்
என் மூச்சு பேச்சு இந்த வாழ்க்கை யாவும்
இந்த மூன்று பேரில் அடங்கும்
(உயிரே..)

படம்: அடைக்களம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: ஹரிஹரன், சாதனா சர்கம்

Monday, November 30, 2009

பொக்கிஷம் - உலகம் நினைவில் இல்லை


Get Your Own Hindi Songs Player at Music Plugin

உலகம் நினைவில் இல்லை
உறங்க மனமும் இல்லை
முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன்
மதியவெயில் அடித்தும் மனதில் மழைப்பொழிந்த
இனிய மணித்துளியில் குளிக்கிறேன்
கண்ணை மோதும் காற்றில் அவள் முகம்
நெஞ்சை மேயும் பாட்டில் அவள் முகம்
பல கோடி பூக்கள் சேர்ந்துப் பூக்கும் அனுபவம்

இது காதலின் அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா
இது காதலின் அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா

எனது மனக்குகையில் புதிய ஒளிப்ப்ரவ
புவியில் மறுப்படியும் பிறக்கிறேன்

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: பிரசன்னா, மஹதி

Sunday, November 29, 2009

பொக்கிஷம் - சிறு புன்னகை ஒருவரின் முகவரி


Get Your Own Hindi Songs Player at Music Plugin

சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி

உறவைத் தொடர்ந்து வரும் உயிர்கள் பழகவரும்
இனிய கவிதை என நினைக்கிறேன்
அவளின் அணுகுமுறை பழகும் இயல்பு நிலை
கலந்த நிமிடங்களை இரசிக்கிறேன்
சில நாட்கள் தீண்டும் நினைவிலே
பள்ளி வாழ்க்கை மீண்டும் மனதிலே
அவள் பேசும் பேச்சைக் கேட்கக் கேட்கப் புதுமையே
அந்த நேரம் மீண்டும் வாய்த்திடாத இனிமையே
(சிறு புன்னகை..)

வரவு செலவுகளில் குறையும் பொழுதுகளை
புதிய உறவுகளில் நிறைகிறேன்
அறிவு வெளியுலகில் அடையும்
அவஸ்தைகளைப் பொழியும்
நிலவொளியில் பொசுக்கினேன்
இன்பம் யாவும் காட்டும் மனதிரை
நம்மை மாற்றும் காலம் வகுப்பறை
இதில் பாடம் கேட்கும்
நீயும் நானும் ஒருவனே
நமைப்பேச்சில் யார்க்கும் தோழன் யாரு
இறைவனே..
(சிறு புன்னகை..)

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: பிரசன்னா

Saturday, November 28, 2009

பொக்கிஷம் - ஓஹோஹோ தீர்ந்ததே பெருங்கடல்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஹோ
ஓஹோஹோ
நானா நானனா நானனா
ஓஹோஹோ தீர்ந்ததே பெருங்கடல் தாகமே
ஓஹோஹோ சேர்ந்ததே மழைத்துளி மேகமே
அட மின்னல் இங்குத் தன்னைவிட்டுப் போகுமே
இந்த மண்ணில் இனி ஒளிப்பஞ்சம் தீருமே
ஓஹோஹோ மின்மினி பூச்சிகள் பூக்களாய்
ஓஹோஹோ வெண்ணிலா பார்வைகள் கூச்சமா

நான் சந்தோஷங்கள் பெற்றெடுத்தப் பிள்ளையே
இந்த நட்புக்குள்ளேத் தப்பு ஒன்றும் இல்லையே
ஓஹோஹோ என்னிடம் சிறகில்லை பறக்கிறேன்
ஓஹோஹோ நெல்மணி போல நான் உழைக்கிறேன்

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்

Friday, November 27, 2009

பொக்கிஷம் - மொழி இல்லாமலே

மொழி இல்லாமலே இதை சொல்வார் இனி
உயிர் இல்லாமலே இதைக் காண்பான் இனி
வாசமே போனப்பின் பூக்களேப் பூப்பதேன்
சுவாசமே வந்தபின் மூச்சிலே காற்று ஏன்
ஒரு கண்ணாடிப் போல் நான் உடைந்தால் என்ன

வழி இல்லாமலே எங்கு செல்வான் இனி
உயிர் இல்லாமலே என்ன செய்வான் இனி
ஓடையே காய்ந்தப்பின் நீங்களே
வானமே வீழ்ந்தப்பின் உடல் ஏன் வாழ்வதேன்
அட பூலோகமே இனி அழிந்தால் என்ன

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்

Thursday, November 26, 2009

பொக்கிஷம் - மூன்று நாள் ஆகுமே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மூன்று நாள் ஆகுமே பேசவே உன்னிடம்
அதுவரை ஆவலை தாங்குமா என் மனம்
என் நினைவோடு நீ துணை இருப்பாயடி
உன் அருகாமையில் வலிதொடராதடி
குரல் கேட்கும் வரை புவி சுழலாதடி

காலை நீ மாலை நீ காண்கிற காட்சி நீ
வேலை நீ வேழ்வி நீ வீட்டிலே யாவும் நீ
நீ பேசாமலே மொழிப் பகையானதே
குறையில்லாமலே மனம் இசைப்பாடுதேன்
ஒரு யுகமாயினும் இதை இரசிப்பேனடி

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: கார்த்திக்

Wednesday, November 25, 2009

பொக்கிஷம் - கனவு சில சமயம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

கனவு சில சமயம்
கலையும் நிலையும் உண்டு
முடிவு தெரியும் வரைப் பொருத்திரு
அதுவும் சில சமயம் ஜெயிக்க வழிகள் உண்டு
விடியும் பொழுதுவரை விழித்திரு
இது யூகிக்க முடியாகக் கணிதமே
ஒரு போருக்குப் போகும் பயணமே
இன்பம் தேடும் காதல் ஏற்றிடாத உலகுடா
துன்பம் நீங்கிப் போகும் தோல்விகூட அழகுடா
ஒரு மெல்லிய கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே

தவிப்பு ஒரு புறமும் துடிப்பு மறு புறமும்
தொடங்கும் இதுவும் ஒரு யாத்திரை
இரவு துயிலிருக்க அலையில் புரல்கிறது ஆண்கரை
இந்த வாழ்வில் ஏதும் நேரலாம்
அந்த ஈசன் தீர்ப்பைக் கூறலாம்
இன்றுப்போல நாளை இல்லை என்றும் ஆகலாம்
நல்ல நாளும் நேற்று போனதென்று ஏங்கலாம்
ஒரு மெல்லிய கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: பிரசன்னா

Thursday, November 19, 2009

பொக்கிஷம் - அஞ்சல் பெட்டியை கண்டதுமே



அஞ்சல் பெட்டியை கண்டதுமே கண்கள் சிரிப்பதேன்
என் நெஞ்சுக்குள்ளேப் பட்டாம் பூச்சி இரக்கை விரிப்பதேன்
துள்ளித்திரிந்த எந்தன் நாட்கள் தயங்கி நடப்பதேன்
என் தோளுக்குமேலே தூரிகைத்தீண்டும் உணர்வு உழைப்பதேன்
இராட்டிணங்கள் மூளைக்குள்ளே சுற்றி சுழல்வதேன்
என் நாடித்துடிப்பு நூறு மடங்காய் நொடியும் உயர்வதேன்
பம்பரங்கள் காலில் சுழலும் பரப்பரப்பு ஏன்
என் அங்கம் எங்கும் புதுப்புது மின்னல் உருவெடுப்பதேன்
(அஞ்சல்..)

கொஞ்ச நாளும் மனமே உனக்கு ஏன் நடந்தது
நான் ஓய்வில்லாமல் தத்தித்தாவ உலகம் மறந்தது
உச்சந்தலையய் வானவில்லும் துவட்டுகின்றது
என் உள்ளங்கையில் ரேகைப் பூவாய் மலருகின்றது
உள்ளத்துணையை வாசக்காற்றில் சலவை செய்தது
நான் ஒவ்வொரு நொடியும் பிறப்பது போல கவிதை சொன்னது
கனவில் மிதந்து நடனம் ஆட கால் நினைத்தது
நான் கரையக் கரைய மேலேப் போக வால் முளைத்தது
என்னை நானே இரசித்துக்கொள்ளும் நிலமையானது
இது மின்னல் மிகடும் ஆனால் கூட புதுமையானது

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: கார்த்திக்

Friday, September 4, 2009

வரும் வழியெங்குமே என் முகம் தோன்றலாம்

வரும் வழியெங்குமே
என் முகம் தோன்றலாம்
இந்த நிலச்சூட்டிலே
என் மனம் காணலாம்
நீ வரும் சாலையில்
சாரலாய் வீசவா
ஆசையை தாங்கியே
தோழனே நேரில் வா
உன்னை வரவேற்கவே
காற்றில் மரமாகவா
உந்தன் தலை கோதவே
பூக்கும் இலையாகவா

என் கண் பேசினால்
உன் துயர் தீருமே
உன் முகம் பார்ப்பதால்
அது உயிர்வாழுமே
சேர்ந்திடும் நினைப்பிலே
அமைதி கொள் தோழனே
சாய்ந்துகொள் களைப்பிலே
தோள்களும் ஏங்குமே
நீ வரும் சேதியை
கடல் அலை கூறவே
உந்தன் நிலை போலவே
மனம் கொண்டாடுதே
எழுதியவர்: யுகபாரதி
பாடியவர் : ரஞ்சனி
இசை : சபேஷ் முரளி
திரைப்படம்: பொக்கிஷம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Tuesday, June 16, 2009

பொக்கிஷம் - நிலா நீ வானம் காற்று



நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்
(நிலா..)

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் பிரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
(நிலா..)

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், சின்மயி

Friday, February 13, 2009

945. கண்டுபிடி கண்டுபிடி





கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி

கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி
சேலை நூலையே கொண்டு இந்த சீன சுவரை இழுத்தாயே
திருடனைத் திருடிக் கொண்டு நீ காதல் ஊடல் செய்தாயே
தினசரி தவனை முறையில் வந்து செலவு செய் என்னை
(கண்டுபிடி..)

கண்ணில் தூண்டில்கள் மாட்டி
சின்ன இடுப்பில் மதுக் கடையை காட்டி
சுக கண் காட்சி நீ காட்டுறியே
சுடும் சூரியனை அடி ஆக்குறியே
புத்தகம் இடையில் வாசி
இந்த புயலை பூட்ட வழி யோசி
நீ உடும்பாகி என்னை உரசேற்று
தினம் உலை யேற்று
மேகம் மழை சிந்தும் போது
ஜலதோஷம் பூமிக்கு ஏது?
மன்மத நாட்டு புதயல்கள் உந்தன் புடவைக்குள் உள்ளது
(கண்டுபிடி..)

அம்பு மாற்று முறை போல
முத்த மாற்று முறை செய்தாய்
இந்த வீணைக்குள் புயல் வீசும்
அது உன் விரலை விலைப்பேசும்
கண்ணில் உன் அழகு ஊறும்
என் இதயம் தலைகீழாய் மாறும்
அடி உன்னை தொட்டால் அட வேர்க்கும்
குளிர் ஜுரம் தாக்கும்
கட்டில் மேல் தேர்தல் வைத்து
அட இணைந்து இருவரும் வெல்வோம்
காமனின் நாட்டு தேசிய கீதம் கண்களால் எழுதுவோம்
(கண்டுபிடி..)

படம்: சமுத்திரம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி

Friday, January 30, 2009

916. விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்





விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே
விடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கலாம்
நமக்கும் தெரியாமலே
என் ஜீவன் என்னை விட்டு பிரிந்துதான் போகுமே
உன் அன்பு இல்லையென்றால்
உன் ஜீவன் தங்கியுள்ள வீடுதான் என் மனம்
எப்படி பிரிந்து செல்வாய்
(விடிய விடிய..)

வாரத்தில் ஏழு நாளும் உன்னைப் பற்றி
நினைத்தால் வாழ்க்கை இனிக்காது
உன்னாலே ஏப்ரல் மாத வெயில் கூட
என் மேல் நீர் அள்ளி தெளிக்குது
காகித பூவிலும் வாசங்கள் தோன்றிடும்
காதலி பார்வை பட்டால்
ஸ்வாசமும் பாதியில் சொல்லாமல் போய்விடும்
நீ என்னை நீங்கி விட்டால்
நீ வேர்வை ஓற்றிட கையை வைத்திடும்
கர்சீவ்-ஆக வேண்டும்
பின் கொஞ்சம் கொஞ்சமாய் கச்சையாக
நான் கட்சி மாற வேண்டும்
டும் டும் டும் எப்போது?
(விடிய விடிய..)

பாசாங்கு செய்யும் உந்தன் கண்கள் ரெண்டை பார்த்து
என் பெண்மை சிலிக்கிறது
கன்னிப் பெண் போல எந்தன் கை படாது
நோட்டு உன்னால் நிரம்பியது
வேடிக்கை அல்ல விபரீதம் என்று
காதலை புரியவைத்தாய்
வேடனின் எதிரில் தடுமாறும் புலியாய்
நீ என்னை தவிக்க வைத்தாய்
நம் காதல் என்பது செய்தி ஆனதும்
நாடி மாறி ஆச்சு
நம் காதல் ஆசையை பூர்த்தி செய்ய
தேஐ இல்லையே வெட்டிப்பேச்சு
கிச்சு கிச்சு மூட்டாதே
(விடிய விடிய..)

படம்: சமுத்திரம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: உதித் நாராயணன், சாதனா சர்கம்

Thursday, January 29, 2009

914. பைனாப்பிள் வண்ணத்தோடு





பைனாப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான் சிக்கென்றுதான் என் ஏஞ்சல் போகிறாள்

பைனாப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான் சிக்கென்றுதான் என் ஏஞ்சல் போகிறாள்

அன்பே உன் ஹார்மோன்கள் எல்லாம்
ஒவ்வொன்றும் காமோயங்கள்
ஸ்வீட்டி உன் அங்கங்களெல்லாம்
சத்துள்ள A வைட்டமின்கள்
உன் கண்கள் லேசர் பொட்டு
என்னை மட்டும் பார்க்குதே
(பைனாப்பிள்..)

கேரளத்து பெண்கள் ஸ்பெஷல் என்ன என்றால்
மையூறும் கண் அழகுதான்
ஆந்திராவின் பெண்கள் ஸ்பெஷல் என்ன என்றால்
சீரான கூர் மூக்குதான்
பஞ்சாபி பெண்களின் ஸ்பெஷல் நான் சொல்லவா?
பாதாமின் வண்ணமே
தமிழ் நாட்டு பெண்களில் ஸ்பெஷல்கள் சொல்லவா?
ரோஜாப்பூ வெட்கமும் மின்சார பேச்சும் தான்
அன்பே உன் ஸ்பெஷல் என்ன நானும் இங்கு சொல்லவா?
அனைத்து மானிலங்கள் ஒன்று சேர்ந்ததல்லவா
(பைனாப்பிள்..)

பூக்கள் 20KG திராட்சை 20KG
மிக்ஸ் ஆன உன் மேனியோ
தங்கம் 30KG சிங்கம் 30KG
மிக்ஸ் ஆன உன் ரூபமோ
ஐஸ்க்ரீம் தான் உன் இதழ்
டீ ஸ்பூந்தான் என் இதழ்
உண்ணாமல் கரையுதே
கீட்டாரும் என் உடல் சித்தாரும் என் உடல்
நீ கொஞ்சம் தீண்டினால்
லைக்ட் மியூசிக் கேட்கலாம்
பூந்தோட்டம் உன்னை பார்த்து ஆட்டோகிராஃபும் கேட்குதே
யே யே யே .. மிஸ் வோர்ல்டின் கண்கள் கூட
உன்னை தானே தேடுதே..
(பைனாப்பிள்..)

படம்: சமுத்திரம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன்,சுஜாதா

Tuesday, January 27, 2009

911. சந்தோஷ சாரல் தினம்





சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
(சந்தோஷ சாரல்..)

அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்
சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்
(சந்தோஷ சாரல்..)

நம்மை கண்டு ஊரின் கண்கள் பட்டதாலே
நட்சத்திர கூட்டம் திருஷ்டி சுத்தி போடும்
தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை
நாங்கள் இங்கு அழித்திடுவோமே
வந்து வந்து மோதும்
சின்ன சின்ன சோகம் எல்லாம்
ஒன்று சேர்ந்து நாங்கள் ஓட்டும்போது ஓடிப்போகும்
எங்களுக்குள் நாங்கள் செல்ல பேரை வைத்துக்கொண்டு
செல்லமாக நாளும் சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு
அள்ளி அள்ளி அன்பை தந்து
மெல்ல மெல்ல உள்ளம் திருடும்
கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ
(சந்தோஷ சாரல்..)

கோடை வெயில் நேர இளநீரை போல
இதமாக தானே நாங்கள் பேசுவோம்
சுமைகளை சுகமாய் ஏற்போம்
சுகங்களை சமமாய் பிரிப்போம்
விட்டு தந்து வாழ
நம்மை போல யாரு யாரு?
வண்டிக்கட்டிக் கொண்டு
எட்டு திக்கும் தேடு தேடு
தூங்கும் போது கூட
புன்னகைகள் மின்ன மின்ன
தங்கை தொட்டு தந்தால்
தண்ணீர் கூட தீர்த்தமாகும்
இன்னும் சொல்ல வார்த்தை இல்லை
ஆக மொத்தம் இந்த வாழ்க்கை
அர்த்தமுள்ள வாழ்க்கைதானல்லோ
(சந்தோஷ சாரல்..)
(அழகான சின்ன..)

படம்: சமுத்திரம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், கங்கா

Tuesday, July 22, 2008

580. அட கொண்டை சேவல் ஒலிக்க




அட கொண்டை சேவல் ஒலிக்க
இளம் கூட்டு குருவி முழிக்க
அட புத்தம் புதிய சத்தம் கேட்குதே

அட கொண்டை சேவல் ஒலிக்க
இளம் கூட்டு குருவி முழிக்க
அட புத்தம் புதிய சத்தம் கேட்க வா
கோடி பூவில் திறக்கும் சத்தம் கேட்க வா
அட சோம்பல் முறிக்கும் கிழக்கு
இன்னும் உறக்கம் எதுக்கு உனக்கு
அட சோம்பல் முறிக்கும் கிழக்கு
இன்னும் உறக்கம் எதுக்கு உனக்கு
அட வாசல் தெளிக்கும் ஒலியில்
புது வாழ்வின் தொடக்கம் இருக்கு
(அட கொண்டை..)

கன்னுக்குட்டி முழிச்சு
மணிமுட்டு மொழியில்
மலடிக்கெல்லாம் பால் ஊரும்
குன்றுகளில் இருந்து
கோவில் மணி ஒலித்தால்
காற்று வழி தேன் ஊரும்
அந்த ஆற்றில் எழும் பாட்டில்
ஒலி கரையின் உரிமை
வயல்களில் எழும் பாட்டில்
ஒலி நாற்றின் உரிமை
உந்தன் இதழ் ஆடும் சிரிப்போசை
என்றென்றும் என் உரிமை
(அட கொண்டை..)

இது வரை கேட்ட
இசைகளில் எல்லாம்
மிக இனிது தாலாட்டு
மறுப்படி என்னை
கருவரை தாங்கி
மாதாவே தாலாட்டு
இந்த பிறவி
எந்தன் மகனாய்
வந்து பிறந்தாய் மகனே
மறு பிறவி
உந்தன் மகளாய்
வந்து பிறப்பேன் மகனே
தாய் அண்ணன் இருவரையும்
இயற்கையாய் பெறுவேனே

அட கொண்டை சேவல் அடங்க
இளம் கூட்டு குருவி முடங்க
அட சுட்டு ஒலிக்கும் சத்தம் ஓயட்டும்
என் கானம் கேட்டு கண்கள் சாயட்டும்
நம்ம ஊரும் கொஞ்சம் உறங்கும்
அந்த ஆறும் மெல்ல உறங்கும்
நம்ம ஊரும் கொஞ்சம் உறங்கும்
அந்த ஆறும் மெல்ல உறங்கும்
பல விண்மீண் காவல் இருக்க
அந்த வெண்ணிலாவும் உறங்க..

படம்: அடைக்கலம்
இசை: சபேஷ் முரளி
பாடியவர்கள்: சுஜாதா, மது பாலகிருஷ்ணன்

Friday, April 18, 2008

372. பொய்க்கால் குதிரையில் போருக்கு போகும் ஐய்யனாரு...

இன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்க கிண்ணத்து சிங்கம் @ சின்ன கைப்புள்ள @ மதுரை வீரன் அழகப்பன் இராம்-க்கு இந்த பாடல் சமர்ப்பணம்..



லலலலலலலலலலலல...

பொய்க்கால் குதிரையில் போருக்கு போகும் ஐய்யனாரு நான்தான்
மைய தொட்டு மீசை வரைஞ்ச மதுரை வீரன் நான்தான்
(பொய்க்கால்..)

வாடகை சைக்கிளில் உலகை சுற்றும் வடிவேல் முருகன் நானடா
வத்திக் குச்சியில் கம்பு சுழற்றும் வீரன்டா சூரன்டா தீரன்டா
அட வீரன் சூரன் தீரன் என்றும் நானடா

அழகப்பா நா அழகப்பா.. அழகப்பா...
அழகப்பா நா அழகப்பா..


மாசத்தில் ஒரு நாள் குளிப்பவன் நான்
மாமியார் புடவையை துவைப்பவன் நான்
(மாசத்தில்..)
அட்டைக் கத்தில் வெட்டிய அந்த
ஆலமரத்தை சாய்ப்பவன்
நெல்லு குத்துற உலக்கை எடுத்து
பல்லைக் குத்தியே காட்டுவேன்
(அழகப்பா..)

மூட்டை பூச்சிய ஒத்த விரலால
ரத்தம் கக்க வைப்பேன்டா
ஓட்டை விழுந்த உளுந்து வடையை
சிமேண்ட் பூசி அடைப்பேன்டா
நெருப்புக்கு வேகாத பருப்புடா

அடேங்கப்பா அடேங்கப்பா
(அழகப்பா..)

கள்ளி பாலுல காப்பி போடுவேன்
எல்லா கட்சிக்கும் ஓட்டு போடுவேன்
நல்லி எலும்புல நாதஸ்வரம் வாசிப்பேன்டா

ஏய் அழகப்பா..

பாயை சுத்தி காது கொடைபவன்
கால மடக்கி கபடி ஆடுவேன்
ஓசி சோத்துல உடம்பை வளர்க்கும் உத்தமன்டா

அழகப்பா..

சோலைக்காட்டு பொம்மைய போல சொந்த காலில் நிப்பவன்டா
குப்புற விழுந்தா மண்ணு ஒட்டும்ன்னு
மீசையை வைக்காமல் வாழ்பவ்ண்டா
தலைமுடியை தலையில் தாங்கும் சிங்கம்டா

அடேங்கப்பா அடேங்கப்பா..
(அழகப்பா..)

செய் செய்யுன்னு சொன்னாலும் எனக்கு
செய்வினை செஞ்சவன் யாரடா?
நான் இறும்பு மழுஷன்னு சொன்னதும்
நேத்து என்னை எடைக்கு போட்டவன் யாரடா?
செறுப்பு கடித்தாலும் திருப்பி கடிக்காத
மன்னிக்கும் பக்குவம் உடையவன்டா
(அழகப்பா..)

பிச்சைக்காரனிடம் கடனை வாங்குவேன்
ஆட்டு சாணியில் அல்வா கிண்டுவேன்டா
ஊரே துரத்தினாலும் எவன் கையிலும் மாட்டாத
ஓட்டப் பந்தயன் வீரன்டா..

அடேங்கப்பா.....

படம்: இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: திப்பு

விரும்பி கேட்டவர்: தேன்கிண்ணம் தேனீகள்

Last 25 songs posted in Thenkinnam