Friday, June 28, 2013

நிமிர்ந்து நில் - சரோஜா




நிமிர்ந்து நில்
துணிந்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்ததை நடத்திடு
நினைப்புதான் உன் பலம்
தடைகளை உடைத்திடு
தாமதம் அதைவிடு
கடமைகள் புதியது
கண்களை விழித்திடு
போன வழி மாறி போனாலே வாராது
போ உந்தன் புதுப்பாதையில் போராடிடு
காலம் ஒருநாளும் உனக்காக மாறாது
காலத்தை நீ மாற்றி கரையேறி முன்னேறு

நேற்றும் இல்லை நாளை இல்லை
இன்று மட்டும் என்றும் உண்டு
மாற்றமெல்லாம் மாற்றமில்லை
மாறவேண்டும் நீயும் இன்று
முட்டி மோதி கால்கள் ஓய்ந்து
தேடித்தேடி கண்கள் சாய்ந்து போவதேனோ
வீரனென்று பிறப்பதில்லை வீரனாக ஆவதுண்டு
கோழையென்று எவனுமில்லை
கோபம் கொண்டால் கோழையில்லை
இங்கு உன் வாழ்வு உன் கையில்
உன் வேகம் உன் நெஞ்சில்
இங்கே உன் ஆண்மைக்கு இப்போதுதான் சோதனை

விழுவதென்றால் அருவி போல
எழுவதென்றால் இமயம் போல
அழுவதென்றால் அன்பு காட்ட
அனைத்துமிங்கே நட்புக்காக
ஓய்ந்துபோனால் சாய்ந்துபோனால்
உந்தன் வாழ்வில் ஏதுமில்லை
ஓய்ந்திடாது மோதிப் பாரு
முயன்று ஏறு
முடிவில் உந்தன் படைகள் வெல்லும்
வாழ்ந்து போவார் கோடி பேர்கள்
வாழ்ந்தவர் யாரு உலகம் சொல்லும்
நீயும் முன்னாலே ஜீரோ
இப்போதுதான் ஹீரோ
நில்லாதே எப்போதும் உன் முன்னே தடைகள் இல்லை


படம்: சரோஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்: சங்கர் மகாதேவன்

Sunday, February 27, 2011

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ



வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

வெண்மேகம்…

மஞ்சள் வெயில் நீ..
மின்னல் ஒளி நீ..
உன்னைக் கண்டவரை
கண் கலங்க நிற்க வைக்கும் தீ…
பெண்ணே என்னடி.. உண்மை சொல்லடி..
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி…
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்­ரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும்
எங்கு சென்று படித்தாய்?
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில்
தூக்கி செல்ல கட்டலைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும்
வரம் ஒன்று கிடைக்க…
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ…
உன் பாதத்தில் மண்ணாகுமோ…

வெண்மேகம்…

படம்: யாரடி நீ மோகினி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரிஹரன்

Saturday, February 26, 2011

எங்கேயோ பார்த்த மயக்கம்



எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்…
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ… ஏதானதோ…
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க

எங்கேயோ பார்த்த…

ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து…

படம்: யாரடி நீ மோகினி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
படியவர்: உதித் நாராயன்

Tuesday, January 25, 2011

காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை



காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை
தீயின் புடுவையில் அடைத்தாள் கண்ணை
(காதல்..)

கனவுகளில் விழுந்த என்னை கவலையிட மனப்புகிறாள்
இலமை என்னும் கருவரி ந்ன்னும் எறித்தாழாய் கொளுத்துகிறாள்

உயிர் உதிரும்போது உரவுஅக்ளும் வீனோ
உலகம் இதுதானோ!

கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை
ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்ப்பில்லை
புழுதியிலே ரத்தினமாய் இருந்ததொரு தொல்லை
பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை
சேவை பூமியடி தேனாக்கும்
கோபம் துயரங்களை சேர்க்கும்
(கனவுகளில்..)

அவளுடைய கற்பனையை எழுத வழி இல்லை
கூண்டு கிளி நான் ஆனேன் வெளி வரவும் வாய்ப்பு இல்லை
இவனுடைய உண்மைகளை உளர வழி இல்லை
தோல்விகளின் வீடானேன் துணைவரவும் ஆளில்லை
வாழும் மானிடரின் சுமைகள் தீராது
காலம் உறவுகளின் தீர்வோ
(கனவுகளில்..)

படம்: சுப்ரமணியபுரம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

Friday, January 21, 2011

கனவிலே கனவிலே பல நாள் கண்டது



கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலை
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை
அவள் என் வாசமே என்னும் சங்கதியாய்
எட்டு திசைகளும் அதிருமே

சிறு புன்னகையில் எனை வென்றுவிடும் அவள் தென்றலை
இரு கண்களையும் எழில் செய்துவிடும் அவள் மின்னலை

காலை மாலை யாவுமே
காதல் கொள்ள வேணுமே
தினம் பேசி போகிற ஜாடைகள்
பல நூறு கவி சொல்லுதே

இரவே பகலே இரவாய் தோன்றிடு
நிலவே நிலவே பகலை நீங்கிடு
மூச்சுக் குழலிலே மோகம் விரியுதே
கூச்சம் தொலையவே தேகம் சரியுதே
(கனவிலே..)

உடை தொட்ட இடம் விரல் தொட்டுவிட்ட உயிர் கெஞ்சுமே
அடைப்பட்ட நதி உடைப்பட்டுவிட அலை பொங்குமே
வேகம் வீசும் பூவிலே நாளும் உந்தன் வாசனை
மிதமான சூரிய தீபமாய் இமை நாங்கும் ஒளி சிந்துமே

எது நீ எது நான் இனிமேல் தேடுவோம்
நதி நீ கரை நான் கலைந்தே ஓடுவோம்
பூக்கள் முழுவதும் மீண்டும் விரியுமே
கூட்டம் நடத்துமே பூக்கும் அழகிலே
(கனவிலே..)

படம்: நேபாளி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள்: சத்யன், ஷ்வேதா, கிரேஷ்
வரிகள்: யுகபாரதி

Sunday, January 2, 2011

சுத்துதே சுத்துதே பொண்ணு ஒன்னு சுத்துதே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

சுத்துதே சுத்துதே பொண்ணு ஒன்னு சுத்துதே
சொக்குதே சொக்குதே ஹேய் கண்ணு ரெண்டும் சொக்குதே
அண்ணனோட தோழி கிட்ட அக்கம் பக்கம் ஆண்டி கிட்ட
தம் அடிச்சி மாட்டிக்கிட்டா கெஞ்ச வேணாம்
தங்க பஸ்பம் நான் இருக்க
தாகம் கொண்டு வாட்டம் என்ன
என்னை வந்து அள்ளி தின்ன அஞ்ச வேணாம்
லேப்டாப் யுவதியே காஸ்ட்லி கவிதையே
லைஃப் லாங் ரசிகையே வா வா நெருங்கியே
(சுத்துதே..)

நீரோவின் நகல் நான் ஆழ்வார்கள் குழல் நான்
ஆள் காட்டி விரலால் மை போடும் மதன் நான்
வேதாள கதை நான் தாராள யுவன் நான்
ஒரு பாதி பிழை நான் ஆனாளும் கலை நான்
கேய் கிமு முதல் அட கிபி வரை
காதலுக்கு கிராம்மர் இல்லையே
அட நின்றுக்கொண்டே தினம் எண்ணிக்கிடும்
உயர் நட்சத்திரம் நொம்ப இல்லையே
ஜீரோ டிக்ரீ கனவோடு திரியும் அழகன் நானடி
டாலர் கணக்கில் முத்தங்கள் கேட்கும் கலைஞன் நானடி
ஆல் க்ளாஸ் ரசிகன் நான் பச்சை தமிழன் நான்
பிறவி கலைஞன் நான் வான் அண்ட் ஆன்லி நான்
(சுத்துதே..)

ஒரு கோடி கிடைத்தால்
சரி பாதி கொடுப்பேன்
சரி ஜோடி கிடைத்தால்
சளிக்காமல் சுகிர்ப்பேன்
விழுந்தாலும் மழையாய் பெண் மீது விழுவேன்
எரிந்தாலும் மெழுகாய் அவள் வீட்டில் எரிவேன்
இரு கண்ணை கட்டி இருள் காட்டில் விட்டால்
பல கைகள் ரெண்டும் பென்ணை தேடுதே
அட கொட்டும் மழை அது வற்றும் வரை
சில எல்லை மீற நெஞ்சம் துள்ளுதே
கனவில் திரியும் பெண்ணோடு இணைந்து உலகை சுற்றவா
உலகை சுற்றும் நிமிடங்கள் தோறும் கனவை தேடவா
டேக்கோ இரவு நான் தான்சன் விளக்கு நான்
மூன்லைக்ட் நிகழ்ச்சி நான் ஸ்விஸ் பேங்க் கர்ரன்ஸி நான்
(சுத்துதே..)

படம்: நேபாளி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள்: யுகேந்திரன், விஜய்

Saturday, October 2, 2010

நான் எப்போது பென்ணானேன்



என் இதயம் கண்களில் வந்து
இமையாய் துடித்தது ஏனோ
நான் எப்போது

நான் எப்போது பென்ணானேன்
நான் எப்போது பென்ணானேன்
நான் எப்போது பென்ணானேன்
நான் எப்போது பென்ணானேன்

முதல் புன்னகை பூத்ததே அப்போதா
முதல் வார்த்தை பேசிய அப்போதா
அகல் விளக்குகள் ஏற்றிய திருநாளில்
உன்னை தேவதை என்றால் அப்போதா
என் உறக்கத்தில் நடுவே சின்ன பயம்
வந்து முழு உடல் வேர்த்ததே அப்போதா
நீ எங்கோ நின்று பார்ப்பது போல் நான்
மனசுக்குள் உணர்ந்தேன் அப்போதா
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

அட யாரும் இல்லா கடற்கரையில்
மணல் வீடாய் நானும் காத்திருந்தேன்
ஒரு அலையாய் நீயும் வந்து விடு
என்னை உன்னில் கொண்டு சென்று விடு

நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

உன் பார்வை காய்ந்தது அப்போதா
உன் பேர் மட்டும் தெரிந்ததே அப்போதா
என் விழிகளை மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டேனே அப்போதா
என் விழிகளை மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டேனே அப்போதா
உன் மெல்லிய மீசை படுவது போல்
நான் குளிக்கையில் உணர்ந்தேன் அப்போதா

நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

படம்: சக்கரக்கட்டி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ரீனா பரத்வாஜ்

Saturday, June 19, 2010

மதுரைக்கு போகாதடி



கற்பூர கன்னிகையே வாராய்
அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராஇ
நீ மங்கள மஹராணியே
வலது கால் எடுத்து வாராய் நீயே
நீ வந்த இடம் வளமாக
சென்ற இடம் வளமாக
சேர்ந்த இடம் சுகமாக
வாழ போற

மதுரைக்கு போகாதடி
அங்க மல்லி பூ கண்ணை வைக்கும்
தஞ்சாவூர் போகாதடி
தல ஆட்டாம பொம்மை நிக்கும்
தூத்துக்குடி போனா சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனா அங்க மேகம் உன்னை சுத்தும்

அசருதே அசருதே ஊர் மொத்தமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
அசருதே அசருதே ஊர் மொத்தமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
(கற்பூர..)

அடி ஒத்தயிலே தனியாக
மெத்தையிலே தூங்காத
அத்த மகன் வாராண்டி
வலைச்சுப்போட
(மதுரைக்கு..)

சித்திரைன்னா வெயிலடிக்கும்
கார்த்திகைன்னா மழையடிக்கும்
அடால் குடால் தடால் புடால்
மாப்பிள்ளைதான் தங்கம்
ஆடியினா காத்தடிக்கும்
மாழ்கழின்னா ஹஹஹஹா
டமால் டமால் கபால் கபால்
மாப்பிள்ளை தான் சிங்கம்

மறுதாணி தோட்டத்துக்கே
அட மறுதாணி யாரு வச்சா
ஓ தேரா தேரா
இவ வாரா வாரா

காட்டு குயிலும் கட்டிக்க தான்
தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே
ஜோய் ஜோரா ஜோரா
வரும் வீரா வீரா
நான் அக்கரையில் இருந்தாலும்
இக்கரையில் இருந்தாலும்
சக்கரையா இருப்பாளே ஆசையாலே
(மதுரைக்கு..)

மருமக மருமக வந்தாச்சம்மா
இனி மாமியார் பதவி தான் உனக்காச்சம்மா

தமிழ்நாட்டு மன்மதனே வாராய்
பெண் மயங்க மயங்க நடந்து நடந்து வாராய்
நீ இந்திர மஹராஜனே
வெற்றி வாலுக்கென பிறந்தவனே
நீ தொட்டதெல்லாம் ஜெயமாஅ
சொன்னதெல்லாம் நிஜமாக
கன்னி நிலா வந்துடுச்சு கனவு காண

கெட்டி மேளம் நாதஸ்வரம்
அட சேர்ந்து கேட்கும் நேரம் சுகம்
டும் டும் டும் டும்
டு டு டு டு டு
டும் டும் டும் டும்

மஞ்சள் குங்கும தாலியின் சிறப்பு
பெண்களுக்கெல்லாம் இன்னொரு பொறுப்பு

டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் டும்

சந்திரனில் ஒரு பாதி
இந்திரனில் ஒரு பாதி
சுந்தரனே என் ஜோடி ஆனதென்ன
(மதுரைக்கு..)

படம்: அழகிய தமிழ் மகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: அர்ஜித், பென்னி தயால், தர்ஷனா
வரிகள்: பா. விஜய்

Tuesday, June 8, 2010

பனி விழும் காலமா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பனி விழும் காலமா
எல்லோரும் பறவைகள் ஆவோமா
எந்நாளும் மலைகளில் போவோமா
எப்போதும் மழலைகள் ஆவோம்
வா வா வா வா
(பனி..)

அதிகாளை சூரியன் எழுப்புது
இலை கூட்டங்கள் சோம்பலை முறுக்குது
தொடுவானமும் எங்கே கையால் தொடுவோம்
ஒரு காலினில் தவங்கள் செய்யுது
மடஞ்ச உன்னை மழை வர கேட்குது
முகில் ஓடுது அங்கே தூது செல்வோம்

சின்ன பார்வை நாம் பார்க்கும்போது
வெறும் துண்டு வானம்தான் தெரியுமே
ஒரு மின்னல் பார்வை நாம் பார்க்கும்போது
இந்த பூமி யாவும் நமது சொந்தமே
தத்தி தத்தி தாவியே இளம் தென்றல் வந்து வீசுமே
தினம் இதயம் உன்னிடம் பேசுமே
காற்றில் பயணம் போகவே
ஒரு கேட்டும் சிக்னலும் இல்லையே
அட குயில்கள் பாடும் பாட்டுக்கு
ஒரு ரிங்டோன் கட்டணம் இல்லையே
நேற்றோ கடந்தோம்
வரும் நாளை வெகு தூரம்
கண்ணெதிரில் நிகழ்காலம்
அதை வென்றால் நலம் ஆகும் யே
(பனி..)

டென்ஷன் வாழ்க்கை அதை தாண்டி வந்து
மலை பள்ள தாக்கில் நாம் பயணிப்போம்
புகை டீசல் வாசம் அதை தூக்கி போட்டு
இளம் பூக்கள் வாசம் நாம் சுவாசிப்போம்
மலையில் செல்லும் பாதைகள்
அவை எல்லாம் வாழ்க்கை பாடங்கள்
வரும் மலர்கள் என்றும் உள்ளங்கள்
அது செல்லும் என்றும் உயரங்கள்
அதில் மறைந்தே தடுத்து தாருங்கள்
அதில் தானே பாரும் ஞானங்கள்
அதை கற்றுக்கொள்ள வாருங்கள்
அது யாரும் சொல்லும் பாடங்கள்
(நேற்றோ..)

படம்: பட்டாளம்
இசை: ஜேஸ்ஸி கிஃப்ட்
பாடியவர்கள்: வில்லியம் இசாக், சயந்திரா, ஹிஷாம்

Friday, May 28, 2010

யாரோ மனதிலே



வலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசுறியே

யாரோ மனதிலே ஏனோ கனவிலே
நீயா உயிரிலே தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ?
(வலியே..)

மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயா முழுமையாய்
நானோ வெறுமயாய்
நாமோ இனி சேருமா
(யாரோ..)

மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்ததுன் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்ததுன் வார்த்தை தான்
கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா
வெண்ணீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா
நானும் வெறும் காணலா
(யாரோ..)
(வலியே..)

படம்: தாம் தூம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ, க்ரீஷ்

Friday, May 21, 2010

சேவல் - துளசி செடிய



துளசி செடிய அரலிப்பூவு தூரமா தான் பார்க்கணும்
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேட்கணும்
(துளசி..)
ஓ பட்டப்பகல் வெட்ட வெயில் நம்மை எப்ப சேர்க்கணும்
நாலு நாளா உன் நினைப்பில் நானும் ரொம்ப வேர்க்கணும்
என் உசிரே நீ உதிராமா நான் புடிப்பேன்
நெல்லுகதிரே நீ கருகாம வாழவைப்பேன்
எம்மனசே உம் பின்னால சுத்துதுடா
உன் நினப்பே எங்கண்ணால குத்துதுடா குத்துதுடா
(துளசி..)

ஓ வேப்பங்குச்சா இருந்த என்ன வெட்டிவேரா மாத்தின
சேவலைப்போல் திரிஞ்ச என்ன ஊர்க்கோழியா ஆக்குன
கட்டுத்தரி காளை போல காலம் பூரா சுத்துன
வெட்டுத்தரி போல உந்தன் காலடியில் சிக்குனேன்
ஒத்த வார்த்த சொன்னவுடன் ஓரங்கட்டி போனியே
மொத்தமாதான் என் நெனப்ப மூடிவச்சி நின்னியே
சொடலைமாட சாமிமேல சத்தியமா சொல்லுறேன்
ஒம்மனசு காயப்படக்கூடாதுன்னு தள்ளுனேன்
என் வயசு உன்னை பார்க்காமே குறைஞ்சிருமே
என் உசுரு நீ இல்லேன்னா மறைஞ்சிடுமே மறைஞ்சிடுமே
(துளசி..)

பாரிஜாத பூவும் நீயும் பார்வையால தாக்குன
பம்பரமா சுத்தி என்ன தந்திரமா மாத்துன
கத்திக்கம்பு அருவா எல்லாம் நீயும் தூக்கி வீசுன
உன் கள்ளத்தனம் அத்தனையும் காதலாத்தான் மாத்துன
முக்குளத்து தோட்டத்துல நான் பறிச்சேன் முள்ளைதான்
சாய்புறம் சந்தையில வாங்கிவந்தேன் மோதிரம்
சாயங்கால நேரம் வந்தா உன்னுடைய ஞாபகம்
என் உயிரே உன்னை ஒரு நாளும் மறக்கலையே
இளம்பயிரே உன்னை ஒரு நாளும் வெறுக்கலையே
(துளசி..)

படம்: சேவல்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தீபா மரியம்

Tuesday, April 27, 2010

தென்றலுக்கு நீ சாரல் மழை


Get Your Own Hindi Songs Player at Music Plugin

தென்றலுக்கு நீ சாரல் மழை
வெயிலுக்கு நீ நீர் குவளை
அம்புலிக்கு நீ பால் சோறு
கம்பளிக்கு நீ கார் காலம்

முற்றத்துக்கு நீ வேப்பமரம்
முத்தத்துக்கு நீ ஆசை முகம்
உச்சவத்தில் நீ சாமி சிலை
திக்கு மொழிக்கு நீ தூது வளை
(தென்றலுக்கு..)

அங்கம் எங்கும் உன்னால் நானே
வைத்து கொண்டால் தவர் ஏது
சிங்கம் வந்து நிற்க்கும் போது
செல்லம் கொஞ்ச முடியாது
(அங்கம்..)

தோழி நானும் தோளிலே மாலையாக மாறவோ
வால் இல்லாத பூச்சிப்போல் ஆள சேதி கூரவா
இடைவெளி நமக்குள்ளே எதற்காக
இடையினில் குழப்பம் அதற்க்காக அதற்க்காக
(தென்றலுக்கு..)

கொள்ளை கொண்ட பெண்ணுக்குள்ளே
கத்தில் சண்டை சரிதானா
எல்லை தாண்டும் பயங்கரவாதாம்
அன்பே அன்பே இதுதானா
(கொள்ளை..)

காடு தூங்கும் போதிலும் தூங்கிடாத காதலே
மூடி மூடி பேசியும் தூர்ந்திடாது ஆவலே
உலகினில் கொடியது பெண் தனிமை
அதை விட கொடியது என் நிலமை என் நிலமை
(தென்றலுக்கு..)

படம்: அறை எண் 305-இல் கடவுள்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: ஷ்வேதா, கார்த்திக்
வரிகள்: யுகபாரதி

Saturday, April 24, 2010

போகாதே போகாதே நீ இருந்தால்



போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி
யார் என்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி
(போகாதே..)

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதுக்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதுக்கு
உனக்காக காத்திருப்பேன் ஓ
உயிரோடு பார்த்திருப்பேன் ஓ
(போகாதே..)

அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்று தாங்கவில்லையே
பெண்ணை நீ இல்லாமல்
பூலோகம் இருட்டிடுதே
(போகாதே..)

படம்: தீபாவளி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா

Wednesday, April 21, 2010

கண்ணன் வரும் வேளை



கண்ணன் வரும் வேளை அந்தி மாலை
நான் காத்திருந்தேன்
சின்ன சின்ன தயக்கம் சில மயக்கம்
அதை ஏற்று நின்றேன்
கட்டு கடங்கா எண்ண அலைகள்
இரக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடு பாயும் குறும்பு காரன் அவனே
(கண்ணன்..)

வான் கோழி கொள்ளும் ஆசை ஆடி தோற்பது
தை மாசம் கொள்ளும் ஆசை கூடி பார்ப்பது
தேர் கால்கள் கொள்ளும் ஆசை வீதி சேர்வது
ஒர் ஈசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது
கூராவ இங்கு எனது ஆசையை
தோழனே வந்து உளறு மீதியை
கோடி கோடி ஆசை தீறும் மாலை
(கண்ணன்..)

பூவாசம் தென்றலோடு சேற வேணுமே
ஆண் வாசம் தோடிராத தேகம் மூலமே
தாய் பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்ச பாரம் காதல் ஏந்துமே
நீ தினம் கண்ட கனவு தீரவே
தீண்டுவேன் உன்னை இளமை ஊரவே
நீ இல்லாமல் நிழலும் எனக்கு தொலைவே
(கண்ணன்..)

படம்: தீபாவளி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், மதுஸ்ரீ

Monday, March 1, 2010

நெஞ்சை கசக்கி பிழிந்து



நெஞ்சை கசக்கி பிழிந்து போற பெண்ணே ரதியே ரதியே
வந்து தீ மூட்டிவிட்டு போறவளே கிளியே கிளியே
அடி மயிலே மா மயிலே மதி மயக்கும் பூங்குயிலே
(நெஞ்சை..)

கம்மங்காட்டில் கொளத்து மேட்டில்
வண்டி ஓட்டும் ஆசை மாமா
கூச்சத்த தூக்கி குப்பையில் போடு
ஓ பார்க்க பார்க்க மனசு ஏங்கும்
பழகி பார்க்க வயசு வேண்டும்
இதயத்தில் இடம் இங்கு இல்லையே
அதைஅ எடுக்கவும் கொடுக்கவும் இல்லையே
காதல் எனாக்கு வேண்டாமே
கவலை மறந்து வா மாமா
கைய பிடிச்சு கன்னம் தேச்சு
கதைகள் பேச வா வா
உள்ளம் கொடுப்பது ஒரு முறைதான்
இனி வாழ்வோ சாவோ அவளோடுதான்
வாஇப்புகள் வருவது ஒரு முறைதான்
நீ இலக்கணம் பார்த்தால் தலை வலிதான்
(நெஞ்சை..)

பார்வை பார்த்து மயக்கி போனால் பாவி நெஞ்சை
ஆண்களின் ஜென்மம் என்றுமே துன்பம்
நெருங்கி வந்தால் விலகி போகும்
விலகி போனால் நெருங்கி வருவோம்
பெண்களின் மனதில் என்னவோ
அது பெண்ணுக்கு புரிவது இல்லையோ
ஆசைய வைத்தேன் உன் மேல் தான்
வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன் தான்
வாழ்க்கை தெரிந்தால் பயணம் புரிந்தால்
பாறை இடுக்கில் ஒரு பூ தான்
கனவுகள் காண்பது உன் உரிமை
அடு கலைந்தால் தெரியும் என் நிலமை
இரவும் பகலும் உன் மடியில்
கண்மூடி கிடப்பேன் உன் அருகில்
(நெஞ்சை கசக்கி..)

படம்: யாரடி நீ மோகினி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: உதித் நாராயணன்

Thursday, February 18, 2010

மீண்டும் மீண்டும் ஓயாமல்



மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்
நீயே எந்தன் சுக வாசல்
கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும்
உன்னில் நானே கண்ட வேதம்
பனிப்பூவாய் என் மேல் விழுந்தாய் உயிரே உரையுதடி
இதற்கு மேலாக ஆசைகள் வந்து கவிதையில் சேறுதடி
என் கவிதையில் சேறுதடி
(மீண்டும்..)

உண்மை காதல் மறையாது
பாதை கூட தவறாமல் ஜீவன் ஒன்றே எண்ணி வாழும்
எந்த காலம் பிறந்தாலும் காலம் சொல்லும் பதிலாக
தெய்வீகமே இந்த காதல்
தாயை போலே நான் அள்ளிக்கொள்வேன்
உன்னை உன்னை நெஞ்சுக்குள்ளே
விடுமுறை காணாமல் தொடர்ந்திட கூடாதா
நானும் நீயும் வாழ்க்கை தோறும்
(மீண்டும்..)

மின்னல் ஒன்று கரை வீச நெஞ்சம் ஒன்றூ குடை சாய
மின்னல் நீயே நெஞ்சம் நானே
தென்றல் வந்து முத்தம் இட
கோர தீயும் பூவாய் மாற
தீயும் நானே தென்றல் நீயே
ஆசை எல்லாம் நான் அள்ளிக்கொண்டு
வந்தேண் வந்தேண் உந்தன் வாசல்
புயலென்ன மழை என்னவோ கடந்திட வேண்டாமா
நானும் நீயும் வாழ்க்கை தோறும்
(மீண்டும்..)

ஆல்பம்: மீண்டும் மீண்டும்
இசை: திலீப் வர்மன்
பாடியவர்: திலீப் வர்மன், கார்த்திக்

Sunday, February 14, 2010

அறியாத வயசு புரியாத மனசு



அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
அடியாத்தி ரெண்டும் பறக்குதே
செடிபோல ஆசை மொளைக்குதே

வெட்டவெளிப் பொட்டலிலே மழைவந்தா
இனி கொட்டாங்குச்சி கூரையாக மாறிடும்
தட்டாம்பூச்சி வண்டியிலே சீர்வந்தா
இங்கே பட்டாம்பூச்சி வண்டியிலே ஊர்வரும்
ஓஹோ
(அறியாத வயசு..)

பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல
யாரும் மெனக்கெட்டுப் படிக்கல
எந்தக் கெழவியும் சொன்ன கதையில
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது
ஒறவுக்கு இதுதான் தலைமை
இதை உசுரா நெனைக்கும் இளமை
காதலே கடவுளின் ஆணை
அவன் பூமிக்குத் தொட்டுவச்ச சேனை
ஒடைமாத்தி நடைமாத்தி அடியாத்தி இந்த வயசுல
அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

கறந்தபாலையே காம்பில் புகுத்திட
கணக்குப் போடுதே ரெண்டுந்தான்
கோரைப்புல்லிலே மெட்டி செஞ்சுதான்
காலுல மாட்டுது தோளுல சாயுது
ஊரையும் ஒறவயும் மறந்து
நடுக்காட்டுல நடக்குது விருந்து
நத்தைக்கூட்டுல புகுந்து
இனி குடித்தனம் நடத்துமோ சேர்ந்து
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி இந்த வயசுல
(அறியாத வயசு..)

படம்: பருத்திவீரன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: இளையராஜா

Saturday, February 13, 2010

காதலுக்கு கண்கள் இல்லை



காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே
ஆனா இப்போ ம்ம்ம்...
காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே
காதல் பூவே சுத்தாதென்று சொன்னேன் நானே
ஆனா இப்போ ம்ம்ம்....
லூசு ரெண்டு சேர்ந்தாலே சும்மா பேசிக் கொண்டாலே
காதல் வரும் தன்னாலே என்றேன் நானே
பீச்சில் வந்து சுண்டல் தீர்ந்து போச்சு என்றாலே
காதல் கூட தீரும் என்றேன் நானே
ஒ ஒ ஒ என்ன ஆனதோ ஹார்மோன்கள் கொஞ்சம் மாறுதோ
ஒ ஒ ஒ எந்தன் நாள் முதல் என் காதல் அவள் ராகத்தில்
(காதலுக்கு...)

அப்பன் காசெல்லாம் செல் போன் பில்லுக்கே
காலி ஆச்சு என்று சொன்னால் கேலி செய்தேனே
ஆனா இப்போ ம்ம்ம்...
தன்னந் தனிமையிலே தானே பேசையிலே
நைட் அடிச்ச மப்பு இன்னும் இறங்கல என்றேனே
ஆனா இப்போ ம்ம்ம்...
காதல் என்னை என்ன செய்யும்
ஓவர் திமிரில் அழைந்தேன் நானே
நானும் இன்று கியூவில் நின்று
இதயத்தை பலி கொடுத்தேனே
(ஒ ஒ ஒ...)
(காதலுக்கு..)

ஓ கண்ணில் நுழைவாளாம் நெஞ்சில் நுழைவாளாம்
ஏண்டா இந்த பிள்ளர் எந்து கூலா கேட்டேனே
ஆனா இப்போ ம்ம்ம்...
ஆதாம் முட்டாளா ஏவாள் முட்டாளா
பட்டி மன்றம் வைத்து பார்க்க ஆசை பட்டேனே
ஆனா இப்போ ம்ம்ம்,,,
ஓடி பொய்கள் கட்டிய முட்டை காதல் என்று சொன்னேன் நானே
பொய்கள் எல்லாம் பொய்யாய் போக
மெய்யினில் உணர்ந்து கொண்டேனே
(ஒ ஒ ஒ...)
(காதலுக்கு...)

படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: தேவிஸ்ரீ பிரசாத்

Sunday, November 8, 2009

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு



ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகின்ற பொழுது
ஒரு வானத்தை தொடுகிற உணர்வு
ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும் வரும் ஒடுக்கம்
நின்றாலும் கால்கள் மிதக்கும்
(ஒரு நாளுக்குள்..)

நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்
நீ காதலா இல்லை கடவுளா
புரியாமல் திணறி போனேன்
யாரேனும் அழைத்தால் ஒரு முறைதான்
நீ தானோ என்றோ திரும்பிடுவேன்
தினம் இரவினில் உன் அருகினில்
உறங்காமல் உறங்கி போவேன்
இது ஏதோ புரியா உணர்வு
இதை புரிந்திட முயன்றிடும் பொழுது
ஒரு பனி மலை ஒரு எறிமலை
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்
(ஒரு நாளுக்குள்..)

நதியாலே பூக்கும் மரங்களுக்கும்
நதி மீது இருக்கும் காதல் இல்லை
நதி அறியுமா நெஞ்சம் புரியுமா
கரையோர கனவுகள் எல்லாம்
உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டாள்
நீ பார்க்காமல் உன்னை மறக்கலாம்
இனி காதல் கனவுகள் பிறக்கும்
தன் வாசனை பூ அறியாது
கண்ணாடிக்கு கண் தெரியாது
அது புரியலாம் பின்பு தெரியலாம்
அதுவரையில் நடப்பது நடக்கும்
( ஒரு நாளுக்குள்..)

படம்: யாரடி நீ மோகினி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்

Wednesday, October 7, 2009

பட்டாளம் - திசையெட்டும் திரும்ப வைக்கும்



திசையெட்டும் திரும்ப வைக்கும்
இந்த அழகான வம்புக்கொரு அளவேயில்லை
கலை கட்டும் கலகலக்கும்
எங்க விளையாட்டு அத்தனைக்கும் அளவேயில்லை
(திசையெட்டும்..)

என் காலு சக்கரம்ங்க
தன்னை மறந்து சுத்துதுங்க
இத புரிஞ்சிக்காம ஏனோ எங்கள ஊரு திட்டுதுங்க

வேறு மொழியில வர படம் எடுப்போங்க
சிக்காமலே தப்புப்பண்ணி நாங்க
அத வகுப்பறையில சொல்லி சிரிப்போங்க

கள்ளம் இல்ல கபடம் இல்ல
ம்ம்.. அதனால..
உலகையே வெல்வோம் நாங்க

ஏதும் தப்பு இல்லை
இங்க எதுவும் தப்பு இல்ல
எங்க பறந்த மனசப் பழகிப்போகும் பாதை தப்பு இல்ல
எதுவும் தப்பு இல்ல
எங்க கனவும் தப்பு இல்ல
இந்த குறும்பு வயசு அறும்பும்போது
ஆசை தப்பு இல்ல

எங்க மேல தப்பு ஒன்னும் இல்ல
இளம் வயசு அப்படி கலங்கத் தேவையில்ல
சுத்தும் பூமியும் நின்னுப்போவதில்லை
பூமி ஈர்ப்பு அப்படி நிறுத்த யாருமில்ல
இல்லை இல்ல எதிரி இல்ல
அதனால அவதியும் படவே இல்ல
(திசையெட்டும்..)

படம்: பட்டாளம்
இசை: ஜாஸ்ஸி கிஃப்ட்
பாடியவர்கள்:

Last 25 songs posted in Thenkinnam