Saturday, January 26, 2013

பரதேசி - யாத்தே கால



யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே காடும் அழுதாச்சே
ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை
தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை
யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே

தாழ் போன வீடு கால் போன ஆடு
ஒன்னோட ஒன்னா துணையானது ஏன்
தாய் போல நெஞ்சு தாளாத அன்பு
மழை தண்ணியோடு மாசு இல்லையே
வழி சொல்லவே இல்லையே வாய்மொழி
கண்ணீர் தான் ஏழையின் தாய்மொழி
எங்கோ தவிக்கும் உன் பிள்ளையே
இங்கே உறவு என் பிள்ளையே

கை கொண்ட நெல்லு உமியாகும் போது
கத்தாலை சோறும் சோறாகுமே
உண்டான சொந்தம் உடைகின்ற போது
இல்லாத சொந்தம் உறவாகுமே

ஒரு ஜீ(சீ)வனோ உறவிலே சேருதே
இரு ஜீ(சீ)வனோ ஒத்தையில் வாடுதே
கண்ணீர் துடைக்க ஆளில்லையே
காலம் நடக்கும் காலில்லையே

யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே காடும் அழுதாச்சே
ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை
தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை

படம் : பரதேசி (2013)
இசை : பிரகாஷ் குமார்
பாடியவர்கள் : ப்ரகதி, பிரசன்னா
வரிகள் : வைரமுத்து

Monday, January 7, 2013

நீர்ப்பறவை - தேவன் மகளே



தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

தேவன் மகனே தேவன் மகனே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

என்றோ அடி என்றோ உன் உயிரில் உரிமை தந்தாய்
இன்றே அடி இன்றே உடல் உரிமை தந்தாய்

நுனியில் விரல் நுனியில் ஒரு நுதன தீண்டல் செய்தாய்
அடியில் உயிர் அடியில் ஓர் அற்புதம் செய்தாய்

உன் ஆசை பாசை எல்லாம் பூட்டி கொண்டே
நான் முத்த சாவி போட்டு திறப்பேன்

தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

கண்ணீர் என் கண்ணீர் என் கன்னம் காயும் முன்னே
பன்னீர் உன் பன்னீர் உயிர் பரவ கண்டேன்

கொடியில் ஒரு கொடியில் இரு இளநீர் காய்க்கும் பெண்ணே
மடியில் உன் மடியில் சிறு மரணம் கொண்டேன்

என் கர்தரங்கள் படைத்த வேற்ற பாண்டம் நான்
அதில் உன்னை ஊற்றி என்னை நிறத்தாய்

தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

தேவன் மகனே தேவன் மகனே
சிலுவை காடு பூத்தது போலே
சின்னவள் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

படம் : நீர்ப்பறவை (2012)
இசை : ரகுநந்தன்
பாடியவர்கள் : பிரசன்னா, சைந்தவி
வரிகள் : வைரமுத்து

Saturday, September 17, 2011

வேலாயுதம் - மொளச்சு மூணு



மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

வயசோ பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு
பாவம் என் நெஞ்சு என்ன பார்த்து நீ கொஞ்சு
பார்வை திருபாச்சி உன் தீண்டல் நெருபாச்சு
உன்ன பார்த்தாலே என் பாலம் மேருவாச்சு
ஹே கன்னாபின்னான்னு நீ அழகா இருக்குறியே
கண்கள் ரெண்டும் மாடவெயில் என்ன போரிகிரியே
இமைகள் மூடாமல் கொஞ்சம் பார்வை பகுறியே
அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில் என்ன பொதைகிரியே
ஒடம்பெல்லாம் மச்ச காரி உசுபேத்தும் கச்சைகாரி
இதமா மொத்தக்காரி மோசக்காரி
ஒடம்பெல்லாம் மச்ச காரா உசுபேத்தும் கச்சகாரா
இதமா மொத்தக்காரா மீசைக்காரா

மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா

சிரிப்பு கல்கண்டு உன் சிணுங்கள் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதை கண்டு
உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி
அலறும் நாள் தேடி என் ஆவல் திருக்காச்சு
ஹே தினுசு தினுசாக தெனம் கனவில் தோனுறியே
உடைய திருப்பி உசுர வருத்தி படுத்தி எடுகுறியே
முழுசு முழுசாக என்ன முழுங்க நெனைகிறியே
ஒடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி கதைய முடிகிரியே
மெடன பள்ளதாகே மிதமான சூறை காற்றே
புரியாத என்ன கொன்ன ஒத்தத சூடே
காதோரம் காதல் பேசி அழகான அரிவாள் வீசி
உயராதோ உயிரின் பேச்சே ஏதோ ஆச்சே..

மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

படம்: வேலாயுதம்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: பிரசன்னா, சுப்ரியா ஜோஷி
வரிகள்: விவேகா

Saturday, October 9, 2010

கண்ணாமூச்சி ஆட்டம் ஆடித்தான்



கண் ஊஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை
மனமகிழ்ந்தாள்
கண் ஊஞ்சல் ஆடி இருந்தாள்

கண்ணாமூச்சி ஆட்டம் ஆடித்தான்
இவன் அவளை வென்றானோ
இணை ஆக்கி கொண்டானோ

கண்ணாமூச்சி ஆட்டம் ஆடித்தான்
யார் யாரை வென்றாரோ
நாம் கேட்டால் சொல்வாரோ

அடடா அடடா கண் படும் ஜோடித்தானே
பிரிக்கும் வலிமை கொண்டதந்த ஆடி தானே

Baby if you wanna play hide and seek
Better be at your best, so don't be a freak
Do you wanna play it, do you feel the heat
Just a freaky game of hide and seek

இந்திரனோ ஈசன் தானோ
சந்திரனோ சாகச வரனோ
மந்திரத்தில் மாங்கையை வீழ்த்திடுவானோ

கம்பீரத்தில் கம்சன் தானோ
தந்திரத்தில் கண்ணனும் இவனோ
அர்ஜுனனின் அழகெல்லாம் வாரி வந்தானோ

மாலை இட்டு கூட்டி செல்ல வந்தோமடா
இந்தக் காட்சி கண் பார்க்க தாங்காதடா
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணித்தலும் என்ன


Baby if you wanna play hide and seek
Better be at your best, so don't be a freak
Do you wanna play it, do you feel the heat
Just a freaky game of hide and seek

துப்பாக்கியை துடைச்சு வச்சேன்
லத்திக் கம்பை சுத்தம் செஞ்சேன்
கெட்டப் பையன் வாசத்தை
நான் மோப்பம் பிடிச்சேன்

உள்ளங்கைகள் அறிக்கும் அறிக்கும்
விட்டா தோளை உறிக்கும் உறிக்கும்
ஐயாவோட ஒரு பார்வை
அத்தனையும் எறிக்கும்

பட்சி ஒன்னு சொல்லி போச்சு கச்சேரிக்கே
கட்டுப் போட போலேட புத்தூருக்கே
(கண்ணாமூச்சி..)

படம்: கண்ணாமூச்சி ஏனடா
இசை: யுவன் ஷஙக்ர் ராஜா
பாடியவர்கள்: Dr. நாராயணன், பாலக்காட்டு ஸ்ரீராம், பிரசன்னா, சைந்தவி
வரிகள்: தாமரை

Friday, December 18, 2009

காவலர் குடியிருப்பு - அப்பன் போலிசுடா

சொன்னதை கேட்டிட மாட்டோம்
கேட்டத சொல்லிடமாட்டோம்
வீட்டுலத் தங்கிடமாட்டோம்
போட்டதெல்லாம் திண்ணுட மாட்டோம்
(சொன்னதை..)

நாம இரெட்டை வாலு தானடா
நமக்கு கெட்டப்பேரு வாங்கடா
தாமரைக்கோழி தானடா
ஊரல புடிச்ச எடம் பாருடா
(நாம..)

அப்பன் போலிசுடா உள்ள பாலீசுடா
அழகா திருடுவதில் மன்னனடா
அடடா ஆண்டவனோ வெண்ணை எடுத்து வந்தான்
அதனால் எம்பேரும் கண்ணனடா

காலையில் பெட்டிக்கட தம்மு அடிப்போம்
மாலையில் புட்டியில இரம்மு அடிப்போம்
வேல வெட்டியில்ல ரௌண்டு அடிப்போம்
வாலை புல்லட்டுல ஸ்பீடா நாம் போவோம்
(காலையில்..)
(அப்பன்..)

நைட்டு ஷோவுக்கொரு டிக்கெட் எடுப்போம்
ஃபைட்டு சீனு வந்தா பிகிலும் அடிப்போம்
சைட்டு அடிக்கத்தானே சங்கம் அமைப்போம்
லைட்டா லுக்கு விட்டா ஹீரோவா ஆவோம்
(நைட்டு..)

அப்பன் போலிசுடா உள்ள பாலிசுடா
இரெக்கை இல்லாம கால் பறக்கும்
தப்பும் தப்பு இல்ல ரைட்டும் ரைட்டு இல்ல
நம்மல ஒரு நாளு ஊர் மதிக்கும்
(சொன்னதை..)

படம்: காவலர் குடியிருப்பு
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: பரணி, பத்மநாதன், பிரசன்னா, ஸ்ரீநிவாசன்

Monday, November 30, 2009

பொக்கிஷம் - உலகம் நினைவில் இல்லை


Get Your Own Hindi Songs Player at Music Plugin

உலகம் நினைவில் இல்லை
உறங்க மனமும் இல்லை
முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன்
மதியவெயில் அடித்தும் மனதில் மழைப்பொழிந்த
இனிய மணித்துளியில் குளிக்கிறேன்
கண்ணை மோதும் காற்றில் அவள் முகம்
நெஞ்சை மேயும் பாட்டில் அவள் முகம்
பல கோடி பூக்கள் சேர்ந்துப் பூக்கும் அனுபவம்

இது காதலின் அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா
இது காதலின் அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா

எனது மனக்குகையில் புதிய ஒளிப்ப்ரவ
புவியில் மறுப்படியும் பிறக்கிறேன்

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: பிரசன்னா, மஹதி

Sunday, November 29, 2009

பொக்கிஷம் - சிறு புன்னகை ஒருவரின் முகவரி


Get Your Own Hindi Songs Player at Music Plugin

சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி

உறவைத் தொடர்ந்து வரும் உயிர்கள் பழகவரும்
இனிய கவிதை என நினைக்கிறேன்
அவளின் அணுகுமுறை பழகும் இயல்பு நிலை
கலந்த நிமிடங்களை இரசிக்கிறேன்
சில நாட்கள் தீண்டும் நினைவிலே
பள்ளி வாழ்க்கை மீண்டும் மனதிலே
அவள் பேசும் பேச்சைக் கேட்கக் கேட்கப் புதுமையே
அந்த நேரம் மீண்டும் வாய்த்திடாத இனிமையே
(சிறு புன்னகை..)

வரவு செலவுகளில் குறையும் பொழுதுகளை
புதிய உறவுகளில் நிறைகிறேன்
அறிவு வெளியுலகில் அடையும்
அவஸ்தைகளைப் பொழியும்
நிலவொளியில் பொசுக்கினேன்
இன்பம் யாவும் காட்டும் மனதிரை
நம்மை மாற்றும் காலம் வகுப்பறை
இதில் பாடம் கேட்கும்
நீயும் நானும் ஒருவனே
நமைப்பேச்சில் யார்க்கும் தோழன் யாரு
இறைவனே..
(சிறு புன்னகை..)

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: பிரசன்னா

Wednesday, November 25, 2009

பொக்கிஷம் - கனவு சில சமயம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

கனவு சில சமயம்
கலையும் நிலையும் உண்டு
முடிவு தெரியும் வரைப் பொருத்திரு
அதுவும் சில சமயம் ஜெயிக்க வழிகள் உண்டு
விடியும் பொழுதுவரை விழித்திரு
இது யூகிக்க முடியாகக் கணிதமே
ஒரு போருக்குப் போகும் பயணமே
இன்பம் தேடும் காதல் ஏற்றிடாத உலகுடா
துன்பம் நீங்கிப் போகும் தோல்விகூட அழகுடா
ஒரு மெல்லிய கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே

தவிப்பு ஒரு புறமும் துடிப்பு மறு புறமும்
தொடங்கும் இதுவும் ஒரு யாத்திரை
இரவு துயிலிருக்க அலையில் புரல்கிறது ஆண்கரை
இந்த வாழ்வில் ஏதும் நேரலாம்
அந்த ஈசன் தீர்ப்பைக் கூறலாம்
இன்றுப்போல நாளை இல்லை என்றும் ஆகலாம்
நல்ல நாளும் நேற்று போனதென்று ஏங்கலாம்
ஒரு மெல்லிய கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: பிரசன்னா

Friday, August 21, 2009

நினைத்தாலே இனிக்கும் - அழகாய் பூக்குதே



அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
(அழகாய்..)

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை
கண்ணில் ஈரம்
(அழகாய்..)

கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே ஓஹோ
கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே ஓஹோஹோ

இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோஹோ
ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே ஓஹோஹோ

சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன் உன்னாலே
(அழகாய்..)

ஒரு முறை நினைத்தேன்
உயிர் வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன்
மனதினை வதைத்தாயே ஓஹோஹோ

சிறு துளி விழுந்து
நிறை குடம் ஆனாயே ஓஹோஹோ
அறை கணம் பிரிவில்
வரைவிட செய்தாயே ஓஹோஹோ

நீ இல்லா நொடி முதல்
உயிர் எல்லாம் ஜடத்தை போல் ஆவேனே
(அழகாய்..)

படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: பிரசன்னா, ஜானகி ஐயர்

Friday, May 29, 2009

அங்காடித் தெரு - அவள் அப்படி ஒன்றும் அழகில்லை


அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
(அவள்..)

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
(அவள்..)

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

படம்: அங்காடித் தெரு
இசை: GV பிரகாஷ்/ விஜய் அந்தோணி
பாடியவர்: பிரசன்னா

Thursday, May 28, 2009

TN 07 AL 4777 - கண்ணீரை போலே




கண்ணீரை போலே வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே பாடம் இல்லை
உன் நெஞ்சின் சோகம் எல்லாம் கேட்டுக்கொள்ளு
உனக்கு இங்கே உன்னை தவிற யாரும் இல்லை
பணம் ஒன்றே எப்போதும் வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில் துயரம் இல்லை
(கண்ணீரை..)

ஒரு அலைமீது போகும் இலை போலத்தானே
உலகில் மனிதன் வாழ்க்கை போகும்வரை போவோம் நாமே
அதில் அகங்காரம் என்ன அதிகாரம் என்ன
அன்பின் வழியில் சென்றால் கரை சென்று சேர்வோம் நாமே
கவலையின்றி உலகத்திலே மனிதன் யாரும் கிடையாது
கவலை தாங்கி போவதினால் தாமரைப் பூக்கள் உடையாது
காலம் ஓட காயம் என்ன மாயமாய் மறையும் பார்
(கண்ணீரை..)

தாய் கருவோடு வாழ்ந்த அந்நாளில் தானே
கவலை எதுவும் இன்றி கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே
பின் காசோடு கொஞ்சம் கனவோடு கொஞ்சம்
நம்மை நாமே இன்று தேடித்தான் தொலைகின்றோமே
வாழ்வில் நீயும் வலையாமல் மலையில் ஏற முடியாதே
வலிகள் ஏதும் இல்லாமல் வாழ்க்கை கண்ணில் தெரியாதே
காசும் பணமும் எப்போதும் கானல் நீராய் மறைந்திடுமே
(கண்ணீரை..)

படம்: TN 07 AL 4777
இசை: விஜய் அந்தோனி
பாடியவர்: பிரசன்னா

Monday, September 29, 2008

729. வாரணம் ஆயிரம் - நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை


<p><a href="undefined?e">undefined</a></p>

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே உன் காஞ்சலை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..
(நெஞ்சுக்குள்...)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..
வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதில் இல்லா

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
(நெஞ்சுக்குள்..)

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவன், பிரசன்னா
வரிகள்: தாமரை

Sunday, July 20, 2008

567. பேரின்ப பேச்சுக்காரன் - குசேலன்




பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூடச் சொல்லும் சூப்பர்ஸ்டாரு தானப்பா
ஆனந்த மூச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்காம நாடே சொல்லும் சூப்பர்ஸ்டாரு தேனப்பா

பார் போற்றும் பாசக்காரன்
அவர் போல யாரைச் சொல்ல
பாராட்ட வார்த்தையில்ல
அவர் தோழனே
உனைப் பாடவே சுகம் கூடுதே
இதைவிடப் பெருமை கிடையாதே

(பேரின்ப பேச்சுக்காரன்)

தலையில் ஊரைக் காக்கும் சிவனை
தெய்வம் என்று சொல்வோமே
பூமி தலையைக் காக்கும் இவனை
என்றும் நெஞ்சில் வைப்போமே

இறைவன் காலில் முடியை வைத்து
வேண்டிக் கொள்ள எல்லோரும்
இவனின் கையை முதலில் தேடிப்
போகின்றோமே எந்நாளும்

இவன் கையை நம்பி
வாழ்வை வெல்லும் வாழ்வின் அத்தாட்சி
இவன் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் காளி அண்ணாச்சி
பிறர் தலையின் கனமெல்லாம்
இவனாலே குறையாதோ
இவன் கருப்புத் தங்கம் வெட்டி எடுக்கும்
கலைஞன் தெரியாதோ

(பேரின்ப பேச்சுக்காரன்)

அடுத்த மனிதன் வளர்ச்சிக் கண்டு
மகிழும் மனிதன் உன் போலே
எவரும் இல்லை உலகில் இன்று
தலையும் தருவார் தன்னாலே
கொடுத்த தலையைக் குறையில்லாமல்
செதுக்கும் கலையைப் பெற்றாயே
உதிர்ந்த முடியை அழகாய் மாற்றி
வறுமை போக்கக் கற்றாயே


நீ கத்திரிக்கோலை செங்கோலாக்க வேலை செய்பவன்
நீ சோப்பு போட்டு செய்யும் தொழிலால்
வாழ்வை வெல்பவன்
அழகாகும் முகமெல்லாம்
உன் கையின் பரிசாகும்
உன் அழகு நிலையம்
ஆண்கள் மட்டும் ஆளும் அரசாங்கம்

(பேரின்ப பேச்சுக்காரன்)


படம்: குசேலன்
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடல்: யுகபாரதி
பாடியவர்: கைலாஷ் கெர், ப்ரசன்னா

Sunday, June 22, 2008

524.முதல் மழை எனை நனைத்ததே...

முதல் மழை எனை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ம்ம்ம்...முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ம்ம் இதமாய் மிதந்ததே


கனவோடு தான் அடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்

என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம்நின்று உணர்ந்தேன்

எதுவும் புரியாப் புது கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்

கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடு தான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடு தான் நானும் பறந்தேன்


முதல் மழை எனை நனைத்ததே
ல ல லலா
முதன் முறை ஜன்னல் திறந்ததே
ல ல லலா

பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ஓர் நாள் உன்னை நானும் காணா விட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை

ஓ ஓ ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை

இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்

உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்


பெயரே தெரியாத பறவை அழைத்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

மேஹுல்மேஹூல் மாஹியாஹியோ ?? :-) பாட்டில் இடையில் வருவது இது தானா

muthan mazai.mp3 -
பாடல்வரிகள்: நா.முத்துக்குமார்
திரைப்படம்: பீமா
பாடியவர்: ஹரிஹரன் , மஹதி, ஆர்.ப்ரசன்னா
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்

விரும்பிக்கேட்டவர் : எஸ்வி ரங்கன்

Tuesday, December 4, 2007

60. வெயிலோடு விளையாடி.. வெயிலோடு உறவாடி..





வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே

நண்டூரும் நரி ஊரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே

பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை
புழுதி தான் நம்ம சட்டை


(வெயிலோடு)


வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்

அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்

பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்


(வெயிலோடு)


வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
பொன்வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்
காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டனோம்

ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்
எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்

தொப்புள்கொடியைப் போலத்தான்
இந்த ஊரை உணர்ந்தோம்
வெயிலைத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்

(வெயிலோடு)


படம்: வெயில்
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடல்: நா. முத்துக்குமார்
பாடியவர்: திப்பு, பிரசன்னா, ஜாஸி கிஃப்ட், கைலாஷ் கெர்

Last 25 songs posted in Thenkinnam