Saturday, September 29, 2012

உன் பேரை நான் சொல்லும் வேளை



(1) உன் பேரை நான் சொல்லும் வேளை
உதடும் இனிக்கின்றதே

ஆஹா ஆஹா

ஏ கள்ள கலர் மைனா
நீ பேசும் மொழி தேனா
அடி இத்தாலியின் வைனா
என் பக்கம் வாடி குவினா

ஆஹா ஆஹா

நீ சொல்லும் வார்த்தை சாட்டை
அது செய்யும் ரொம்ப சேட்டை
உனக்கு இப்ப நல்ல வேட்டை
என்னை தூக்கு உப்பு மூட்டை

ஆஹா ஆஹா

நீ வைகை நதியானா
நான் நீந்திடுவேன் மீனா
நீ வஞ்சித்து போனா
கருவாடு ஆகுவேனா

ஆஹா ஆஹா

ஆஹா ஆஹா

நீ சீட்டுக்கட்டு ராணி
நான் உன்னை சுத்தும் தேனீ
அட பட்டர் போல மேனி
நான் உன்னை அணைக்க வா நீ

ஆஹா ஆஹா

ஏ உனக்கு பிடிச்ச கிறுக்கு
அது எனக்கும் புடிச்சு இருக்கு
நான் கார வடை முறுக்கு
நீ இஷ்டம் போல நொறுக்கு

அடி நிலவு பெத்த மகளே
நீ நடக்கும் இரவு பகலே
பனி மலையில் செய்த சிலையே
என் வாழ்க்கை உனக்கு விலையே
ஆஹா ஆஹா ஆஹா

(2) ஏ பெண்ணே ஒரு கோடி கொலுசு ஒலியில்
அறிவேன் உன் கொலுசு ஒலியே

பேபி
உன் சீனி சக்கரை பேச்சு
மன மந்திரிச்சு போச்சு
எனை மயக்கும் உன் மூச்சு
அது மகுடி ஆகி போச்சு

அடி கூடு விட்டு கூடு
நான் பாயும் சேர்ந்து ஆடு
நீ நின்னுக்கிட்டே ஓடு
அட எனக்குள் உன்னை தேடு

நீ பேசுகிற பாஷை
அது நூறு வயலின் ஓசை
உன் மேல கொள்ள ஆசை
அடி துள்ளுது பார் மீசை

ஆஹா ஆஹா

ஆஹா ஆஹா

நான் குட்டிக்கரணம் போட்டு
அடி உனக்கு போட்டேன் ரூட்டு
நீ கொஞ்சம் கருணை காட்டு
உன் மனசில் என்ன பூட்டு

ஆஹா ஆஹா

நீ விஷயம் உள்ள ஆளு
அட உனக்கு ரொம்ப லொள்ளு
நீ போடும் ஆட்டம் தூளு
அட எங்கு போச்சு வாலு

நான் காதலிச்சேன் பாபி
அடி அடிமையாச்சு ஆவி
நீ மறுத்துவிட்டால் தேவி
உடையாகி போகும் காவி
ஆஹா ஆஹா

(3) ஏ பெண்ணே என் கண்ணை மயக்காமல்
உன்னை பார்த்திருப்பேனே

ஆஹா ஆஹா

ஏ ஜன் ஜனக்கா ஜிக்கா
நான் ஜொள்ளு விடும் கொக்கா
நீ சிரிக்கும் பூசணிக்கா
என் கண்ணை பறிக்கும் அழகா

ஆஹா ஆஹா

ஏ ஜன் ஜனக்கா ஜிக்கா
உன் கண்ணில் குண்டு இருக்கா
நீ கண் அடிச்சாக்கா
என் உள்ளம் சிதறு தேங்கா

உன் மடிப்பு இடை சரக்கா
அதில் சறுக்கட்டுமா சோக்கா
உன்னை அணைக்க வேணும் ஒருக்கா
அந்த மச்சம் எனக்கு இருக்கா

இருக்கா
இருக்கா
ஆஹா ஆஹா

ஆஹா ஆஹா

உனக்கு ஏத்த ஜோடி
இந்த சூரியன் தான் வாடி
அந்த வட்ட நிலா வெட்டி
நான் போடடுமா மெட்டி

நீ பார்க்கும் பார்வை ஆத்தி
அது பட்டாளத்தான் கத்தி
உன் கண்ணு ரெண்டும் குத்தி
அட மயங்கி போச்சு புத்தி

ஒரு உலக அழகி போட்டி
உன் ஒருத்தி அழகில் காட்டி
நீ ஓரக் கண்ணில் வெட்டி
அட பரந்து போச்சு மெட்டி

படம்: 123 (2002)
இசை: தேவா
பாடியவர்கள்: (1) கார்த்திக், (2) சுரேஷ் பீட்டர்ஸ் (3) உன்னி மேனன், மாதங்கி

வரிகள் : 

Thursday, November 10, 2011

சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்




சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்
புள்ளி வைத்தாய்
யாரைக்கேட்டு என்வாசலிலே
கோலம்போட்டாய்
வீட்டுக்குள் விடச்சொல்லிக்
கேட்டுப்பார்த்தாய்
மறுத்ததும் இடி என்று திட்டித்தீர்த்தாய்
ஹூலாலா ஹூலாலா ஹூலா ஹூலா

வானத்தின் தீபாவளிகள் பார்த்தேன் பார்த்தேனே
ஈரத்தின் தேம்பாவனிகள் கேட்டேன் கேட்டேனே
கேட்டேனே
(சொட்டு சொட்டு சொட்டாய்)

மரங்களின் கதகளி
மரகத வயல்வெளி
பார்த்தேனின்று
பார்த்தேனின்று

அலைகளை தாயமாய்
உருட்டிடும்
கடலிடம்
கண்டேன் கண்டேன் கவிதை ஒன்று
பூவின் மீது
தாழ்ப்பாள் போட்டு
தூங்கும் தேனை திருடிட வா
வாயை வாயை மூடித்திறந்தே பேசும்
மீனே பதில் தரவா

தையாரே தையாரே
தைய்யா தையயா
தையாரே
மயில்தோகை மயில்தோகை
பட்டுச்சேலை முந்தானை
முந்தானை
(சொட்டு சொட்டு சொட்டாய்)

வானமே வாயிலே
பருகிடும் ஆசையிலே
தூக்கம் இன்றி
தூக்க்ம் இன்றி
வானவில் பாலமா
தரை வரை நீளுமா
ஏக்கம் கொண்டேன்
ஏக்கம் கொண்டேன்

விண்மீன் கிண்ணம்
பொங்கும் வண்ணம்

வானில் வழியும் வெண்ணிலவே
காலை நேரம் காற்றில் ஈரம்
சோம்பல் முறிக்கும் சூரியனே
ஓ தையாரே தையாரே
தைய்யா தைய்யா
தையாரே

தீராத தீராத இன்பமெல்லாம் கண்டேனே
இயற்கையிலே

(சொட்டுசொட்டாய்)

திரைப்படம் : வர்ணஜாலம்
இசை : வித்யாசாகர்
வரிகள் : தாமரை
பாடியவர் : மாதங்கி

Sunday, May 2, 2010

ஜனவரி மாதம் ஒரு பனிவிழும் நேரம்



ஜனவரி மாதம் ஒரு பனிவிழும் நேரம்
கண்ணும் கண்ணும் மோதும்
பெண்மய் எங்கு மாறும்
என் பின்னங்கழுத்திலே உன் உதடுகள் மேய
என் உள்ளே உள்ளே உள்ளே
புது மின்சாரங்கள் பாய
என் அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கிக்கொண்டு சாக
(ஜனவரி..)

மெய்யா பொய்யா என் தேகம் இங்கே
பையா பையா உன் வீரம் எங்கே
கட்டில் கட்டில் அது தேஐயில்லை
கண்ணால் தொட்டால் நீ கன்னி இல்லை
காமம் இல்லா காதல் அது காதல் இல்லை
கையை கட்டி நிற்க இது கோயில் இல்லை
வண்டு வர பூக்கள் அது பூக்கள் இல்லை
ஆதிவாசி ஆணும் பெண்ணும் வெட்கப்படவில்லை
மார்கழி மாதம் ஓ மையல் கொள்ளும் நேரம்
மூடு பனிக்குள்ளே நிலவுகள் சூடும்
முதல் முறை இங்கே ஒரு காயம் பிடிக்கும்
முகத்திலே வெட்கம் ஒரு கோலம் கிறுக்கும்
ஒரு விழி உன்னை வேண்டாமென்றால்
மறு விழி உன்னை வேண்டும்
ஒரு கை உன்னை தள்ள பார்த்திடும்
மறு கை உன்னை தேடும்
என் ஈர கூந்தல் உள்ளே
உன் விரல் வந்து தேட
என் காத்து மடல் எல்லாம்
உன் உஷ்ண முத்தம் கேட்க
என் அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கொண்டு சாக

மார்கழி மாதம் ஓ மையல் கொல்லும் நேரம்
மூடு பனிக்குள்ளே நிலவுகள் சூடும்
என் பின்னங்கழுத்திலே உன் உதடுகள் மேய
என் உள்ளே உள்ளே உள்ளே
புது மின்சாரங்கள் பாய
அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கிக்கொண்டு சாக
(ஜனவரி..)

படம்: 7ஜி ரெயின்போ காலணி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: மாதங்கி, குணால்
வரிகள்: நா. முத்துக்குமார்

Last 25 songs posted in Thenkinnam