Tuesday, November 27, 2012

போடா போடி - உன் பார்வையிலே



உன் பார்வையிலே நான் மோதிக் கொண்டேனே
உன் பேச்சினிலே நான் பாடிக் கொண்டேனே
உன் போல் எவனையும் நான் இது வரை கண்டதே இல்லை
உன் பார்வையாலே நான் காதல் கொண்டேனே
உன் பேச்சின் மீது போதை கொண்டேனே
உன் போல் எவரையும் நான் இது வரை கண்டதே இல்லை

உன் மூஞ்சி மேலே நான் காதல் கொண்டேனே
உன் கண்ணை பாத்து நான் பீவர் கொண்டேனே
உன் போல் எவளையும் நான் இது வரை கண்டதே இல்லை

படம் : போடா போடி (2012)
இசை : தரண்
பாடியவர்கள் : சிந்து, பிரதீப், மோனிசா 
வரிகள் : விக்னேஷ் சிவன்

Monday, November 12, 2012

பீட்சா - மோகத்திரை



உன் உயிர் அதன் இசை
தேன் தரும் பூவின் நிழலோ

மோகத்திரை மூன்றாம் பிறை
மூங்கில் மரம் முத்தம் தரும்
மோகத்திரை மூன்றாம் பிறை
மூங்கில் மரம் முத்தம் தரும்

இமை விரல்களில் காற்றாய் கை வீசு
மலர் படுக்கையில் மெளனம் நீ பேசு காதலே
தனிமையில் ஒரு காதல் தாழ் போட்டு
இடைவெளியினில் என்னை நீ பூட்டு காதலே

தீண்டும் தினம் தென்றல் மணம்
கூந்தல் இழை வெந்நீர் மழை
உன் காதலால் என்னுள் நூறு கனா

உன் உயிர் அதன் இசை
தேன் தரும் பூவின் நிழலோ

மோகத்திரை மூன்றாம் பிறை
மூங்கில் மரம் முத்தம் தரும்
மோகத்திரை மூன்றாம் பிறை
மூங்கில் மரம் முத்தம் தரும்

மேகம் இவன் தூரல் இவள்
நாட்கள் இவன் நேரம் இவள்
காற்று இவன் வாசம் இவள்
வார்த்தை இவன் அர்த்தம் இவள்


படம் : பீட்சா (2012)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர் : பிரதீப் விஜய்
வரிகள் :கபிலன்

Sunday, October 21, 2012

அட்டகத்தி - வழி பார்த்திருந்தேன்



வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றுமென்றே
என் விழி மூடவில்லை பார்வை இடம் மாறவில்லை
பல யுகம் தாண்டி வந்தேன் உன் முகம் காட்டு பெண்ணே
வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றுமென்றே

நொடி ஒவ்வொன்றும் உன்னை தேடி வாழ்கிறதே
சில்லென்ற காற்று என்னை கடிக்கின்றதே
காத்திருக்கும் நேரம் மிகவும் சுடுகின்றதே
என் இமை மூடா கண்கள் உன் நிழல் பார்க்க துடிக்கின்றதே


படம் : அட்டகத்தி (2012) 
இசை : சந்தோஷ் நாராயணன்  
பாடியவர் : பிரதீப் 
வரிகள் : கபிலன்

Thursday, September 20, 2012

அட்டகத்தி - ஆசை ஒரு புல்வெளி



ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி
பூ மீது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே
ஓ ரிங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்குமே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்

யார் உயிர் யாரோடு
யார் உடல் யாரோடு போனது
மர்மம் ஆனது இன்பம்
காற்றுக்கு எல்லை இல்லையே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்

இளமை தூக்கதில் இரண்டு ஏக்கங்கள்
விழித்து பார்த்ததும் வண்ணங்கள்
விரல்கள் கோர்த்து தான் திசைகள் மீறலாம்
காற்றுக்கு எல்லை இல்லையே

மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே

படம் : அட்டகத்தி (2012) 
இசை : சந்தோஷ் நாராயணன் 
பாடியவர்கள் : பிரதீப், கல்யாணி நாயர் 
வரிகள் : கபிலன்

Last 25 songs posted in Thenkinnam