Friday, September 28, 2012

இடிச்ச பச்சரிசி புடிச்ச

கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு
பாருங்கடி பொண்ண பாருங்கடி
வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு

ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு
மேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு
மண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு

தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே
தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே

ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

ஏ நெனச்சக் கனவு ஒண்ணு நெஜமா நடந்துடுச்சு
உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு

விதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சிடுச்சு
பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு

கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
என் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு

ஏ கண்டாங்கி சேலைக் கட்டி என் கைய நீ புடிச்சு
நாம் சேரும் நாளு இங்கு வந்தாச்சு

தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே
தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே

இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

ஏ தாங்கும் மரக்கிளையா போற வழி நீ துணையா
கூட வர என்ன கொறை அது போதும்

ஏ ஆலமரத்து மேல கூவும் ஒருக்குயிலா
வீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும்

என்னோட நீ சிரிச்சா கண்ணீர நீ துடைச்சா
வேறேதும் வேணாமே அது போதும்

வீடு திரும்பையிலே வாசல் தொறக்கையிலே
மஞ்சள் முகம் சிரிச்சா அது போதும்

தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே
தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே

ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு
மேகம் கருத்திருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு
மண்ணில் மணம் ஏரிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு

தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே
தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே

படம் : உத்தமபுத்திரன் (2010)
இசை : விஜய் ஆண்டனி
பாடியர்கள் : ரஞ்சித், சங்கீதா, வினயா
வரிகள் : அண்ணாமலை

Monday, October 17, 2011

நிழல் என்றும் தூரமானதில்லை

நிழல் என்றும் தூரமானதில்லை
நிஜமென்றும் பாரமானதில்லை
மண்மீது நிலவு பூக்கும்
மாயையைப் போல
கண்முன்னே தோன்றும் காட்சி
நீ பாரு
கைக்கூடி வந்த காதல்
என்னாகும் கூறு
இதைக்கட்டிக்காக்கும் ஆளு
யார் பாரு

மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
கண்களைத் திறந்தே கனவுக்காணும் தான்
மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
வானவில்லில் அம்புகள் தொடுக்கும் தான்

என்றும் எங்கும் எப்பொழுதும்
உன் பேச்சே - அட
என்னுடலில் இருக்குது என்னாச்சே
நீயும் நானும் ஒன்றே என்று ஆயாச்சு -அட
வெய்யில் கூட வெண்பனிய போலாச்சு
அப்படியா தோன்றுது உனக்கு - அட
அப்படியே காட்டடி எனக்கு
இவ்வுலகம் முழுவதும் நமக்கு -அட
வேறுலகம் தேவைதானா எதுக்கு?

மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
நான்கு கண்கள் உள்ள ஜீவன் தான்
நோயே தான் நோயே தான்
காதல் என்றும் நோயே தான்
உடலில் புகுந்து உயிரை வாட்டும் தான்

காதல் கொண்டால் விந்தைகளும் நிகழும்
அட அவ்வப்போது அச்சங்களும் திரளும்
காதல் கொண்டால் இப்படித்தான் இருக்கும்
அதில் அச்சம் மடம் நாணம் கூட இனிக்கும்
இதயங்கள் செய்கின்ற கலகம்
அட எப்பொழுதும் அமைதியாய் விலகும்
இதைத்தான் விரும்புது உலகம்
தினம் இப்படித்தான் காதல் வந்து பழகும்

மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
உள்ளங்கையில் உலகைக் காட்டும் தான்
மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
உருவம் இன்றி உயிரும் வாழும் தான்

(நிழல்)

http://tamildot.com/K/Kumaran/Tamilmp3world.Com%20-%20Nizhal%20Endrum.mp3 இங்கே முழுதுமாகப் பாடலைக்கேட்கலாம்..

பாடலைப்பாடியவர்கள்: ராமு?, வினயா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
திரைப்படம் : குமரன்

Last 25 songs posted in Thenkinnam