Tuesday, November 20, 2012

துப்பாக்கி - அண்டார்ட்டிக்கா வெண்பனியிலே


அண்டார்ட்டிக்கா வெண்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ பெங்குயினா பெண் டால்பினா ஏன் குழம்புது கொஞ்சம்

ஏ நிஷா நிஷா நிஷா
 ஓ நிஷா நிஷா நிஷா

அடி பெண்ணே என் மனது எங்கே ரேடார் விளக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா
அடி பெண்ணே என் மனது எங்கே ரேடார் விளக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா

ஏ நிஷா நிஷா நிஷா
 ஓ நிஷா நிஷா நிஷா

அழகளந்திடும் கருவிகள் செயல் இழந்திடும் அவளிடம்
அணு இலக்கணம் அசைவதை பார்த்தேன்
அவள் புருவத்தின் குவியலில் மழை சரிவுகள் தோற்ப்பதால்
விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்
அவள் மேலே வெயில் விழுந்தால் நிலவொளியாய் மாறிப்போகும்
அவள் அசைந்தால் அந்த அசைவிழும் இசை பிறக்கும்

அண்டார்ட்டிக்கா வெண்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ பெங்குயினா பெண் டால்பினா ஏன் குழம்புது கொஞ்சம்

தட தடவென ராணுவம் புகுந்திடும் ஒரு சாலையாய்
அதில் உடன் நுழைந்தாயடி என்னில்
இரு விழிகளும் குழலிலலே பட படவென வெடித்திட
இருதரம் துடித்தாயடி கண்ணில்
உன்னை போலே ஒரு பெண்ணை காண்பேனா என்று வாழ்ந்தேன்
நீ கிடைத்தால் என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்

அண்டார்ட்டிக்கா வெண்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ பெங்குயினா பெண் டால்பினா ஏன் குழம்புது கொஞ்சம்

ஏ நிஷா நிஷா நிஷா
 ஓ நிஷா நிஷா நிஷா

அடி பெண்ணே என் மனது எங்கே ரேடார் விளக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா
அடி பெண்ணே என் மனது எங்கே ரேடார் விளக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா

படம் : துப்பாக்கி (2012)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : விஜய் பிரகாஷ், கிரீஷ், ராஜீவ், தேவன்
வரிகள் : மதன் கார்க்கி


Monday, November 19, 2012

துப்பாக்கி - குட்டி புலி கூட்டம்



குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம் 
பஃல்லே பஃல்லே பாட்டு போட்டோம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் 
சாலை எங்கும் சேலை தோட்டம்
    
குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம் 
பஃல்லே பஃல்லே பாட்டு போட்டோம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் 
சாலை எங்கும் சேலை தோட்டம்
ஹே நானும் இப்ப மும்பை வாலா நாளை முதல் தௌசண்ட் வாலா
மேல போற சிக்ஸர் வாலா சாலா சாலா 
நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு ஆசி வாங்கி ஃபிகர வெட்டு
ஃப்ரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு போடா போடா 

ஏலே மாப்புள்ள அட நட்டு பட்டு வாழும் நாட்கள் வேப்பில்லை
வா வா கேப்புல நீ வம்பு செஞ்சு திட்டு வாங்கு தப்பில்ல
எதை எதை உலகம் பதை பதைக்கிறதோ அதை அதை மனதும் விரும்புதே
கரைகளை தீண்டும் அலைகளை போல கனவுகள் தினமும் அரும்புதே
இத பிடி அத பிடி இருக்கட்டும் அடிதடி இளமையின் கத படி இறுதியில் சுகமடி

குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம் 
பஃல்லே பஃல்லே பாட்டு போட்டோம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் 
சாலை எங்கும் சேலை தோட்டம்
    
ஹைய்யோ நெஞ்சம் தான் 
அது பெண்ணை தாண்டி எண்ணும் எண்ணம் கொஞ்சம் தான் 
பெண்ணே இன்பம் தான்
அதை வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள் பஞ்சம் தான் 
அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து அதில் மிக அழகியை விரும்பலாம் 
யுவதிகள் தேடி அவதிகள் கோடி இருந்தும் அது தான் சுகமெல்லாம்  
துறு துறு துறுவென இருந்திடு இருந்திடு துரு பிடிக்காமலே இருந்திட பறந்திடு 

குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம் 
பஃல்லே பஃல்லே பாட்டு போட்டோம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் 
சாலை எங்கும் சேலை தோட்டம்
ஹே நானும் இப்ப மும்பை வாலா நாளை முதல் தௌசண்ட் வாலா
மேல போற சிக்ஸர் வாலா சாலா சாலா 
நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு ஆசி வாங்கி ஃபிகர வெட்டு
ஃப்ரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு போடா போடா 

படம் : துப்பாக்கி (2012)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன், திப்பு, நாராயணா, சத்யன், ரணினா ரெட்டி
வரிகள் : விவேகா

Sunday, November 18, 2012

துப்பாக்கி - மெல்ல விடை கொடு



மெல்ல விடை கொடு விடை கொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்
இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம்

ஒ ஒ ஹோ ஒ ஒ ஹோ என்னை விட்டு செல்லும் உறவுகளே
ஒ ஒ ஹோ ஒ ஒ ஹோ உயிர் தொட்டு செல்லும் உணர்வுகளே
போய் வரவா  

நண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும்
காதல் தென்றல் கூட கடந்து போகும்
இப்பயணத்தில் உன் நினைவுகள் நெஞ்சடைக்குமே
காடு மலை செல்ல துவங்கும் போதும்
நெஞ்சில் சொந்தங்களின் நினைவு மோதும்
கைக்குழந்தையை அணைக்கவே மெய் துடிக்குமே 
ஆயிரம் ஆயிரம் எண்ண அலைகள் அலைகள் அலைகள் நெஞ்சோடு
ஆயினும் ஞாபகம் உயிர் துடிப்பாய் துடிக்கும் எங்கள் மண்ணோடு
போய் வரவா

எங்கே மகன் என்று எவரும் கேட்க ராணுவத்தில் என தாயும் சொல்ல
அத்தருணம் போல் பொற்பதக்கங்கள் கை கிடைக்குமா
நாட்டுக்கேன்றே தன்னை கொடுத்த வீரம் ஆடை மட்டும் வந்து வீடு சேரும்
அப்பெருமை போல் இவ்வுலகிலே வேறு இருக்குமா
தேசமே தேசமே என் உயிரின் உயிரின் உயிரின் தவமாகும்
போரிலே தாயகம் என் உடலின் உடலின் உடலின் வரமாகும்
போய்  வரவா போய் வரவா

மெல்ல விடை கொடு விடை கொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்
இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம்

ஒ ஒ ஹோ ஒ ஒ ஹோ என்னை விட்டு செல்லும் உறவுகளே
ஒ ஒ ஹோ ஒ ஒ ஹோ உயிர் தொட்டு செல்லும் உணர்வுகளே
போய் வரவா போய் வரவா 

படம் : துப்பாக்கி (2012)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : கார்த்திக், சின்மயி
வரிகள் : பா. விஜய்

Saturday, November 17, 2012

துப்பாக்கி - வெண்ணிலவே தரையில்



வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

வெண்ணிலவே விழியில் பிடித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

அழகே நீ ஓர் பூகம்பம் தானா அருகே வந்தால் பூக்கம்பம் தானா
அழகே நீ ஓர் பூகம்பம் தானா அருகே வந்தால் பூகம்பம் தானா
தீயா நீரா தீராத மயக்கம்
தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்
அணைத்திட எறிந்திடும் பெண் தேகம் அதிசயம்

வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்

ஒரு நாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்
மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்
விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன்
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்
நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழை  வரும்

வெண்ணிலவே விழியில் பிடித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

படம் : துப்பாக்கி (2012)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன், பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள் : நா. முத்துக்குமார்

Friday, November 16, 2012

துப்பாக்கி - அலைக்கா லைக்கா



அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா
கன்னங்கள் ரெண்டும் ஸ்டாப்பேரி கேக்கா
அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா
கன்னங்கள் ரெண்டும் ஸ்டாப்பேரி கேக்கா
சனா சனா ஒ சாரா நீ சுவாசம் கொண்ட மூனா
கனா கனா நீ தானா கண்டாடும் கண்கள் நானா
பிலிம் காட்டியே பிலிம் காட்டியே பிலீங்க்ஸ் ஏத்தாதே
அனல் மூட்டியே தனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே 

மானே மானே ஹனிமூன்ம் எங்க மானே
ஜானே ஜானே அது கார்கில் பக்கம் தானே
தேனே தேனே தித்திப்பான தேனே
தீவே தீவே இனி முற்றும் இம்சை தானே

ஏ நெற்றி பொட்டில் முத்தம் போல உயிரை வைக்கின்றானே
நான் பிச்சு பிச்சு பேசும் தமிழை கவிதை என்கின்றானே
நீ மைனர் இல்லை மேஜர் என்று சொல்லும் உந்தன் நெஞ்சம்
நீ மேஜர் ஆனால் நானும் கூட மைனர் ஆவேன் கொஞ்சம்
இனி அவனே தான் அவனே தான் எனக்கான நண்பன்
முன் இருந்தாலும் முகம் காட்டி சிரிக்காத கள்வன்
ஏ காற்றுக்கேன்ன கஷ்டம் பனி பூவுக்கும் தான் இஷ்டம்
இதில் தேனுக்கில்லை நஷ்டம் சேர வா வா நீ வா

அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா
கன்னங்கள் ரெண்டும் ஸ்டாப்பேரி கேக்கா
சனா சனா ஒ சாரா நீ சுவாசம் கொண்ட மூனா
கனா கனா நீ தானா கண்டாடும் கண்கள் நானா
பிலிம் காட்டியே பிலிம் காட்டியே பிலீங்க்ஸ் ஏத்தாதே
அனல் மூட்டியே தனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே 

நீ தொட்டு பேசும் ஹார்ட்க்குள்ளே மைனஸ் டிகிரி வெப்பம்
நீ ஆக்ஸிஜினில் சுவாசித்தாலே வாசம் சேர்க்கும் நுட்பம்
என் பக்கம் வந்து நிற்கின்றது விண்ணை தொடும் வீரம்
அவன் பேரின் முன்னால் என் பேரை சேர இல்லை ரொம்ப தூரம்
நீ இனிப்பான உறைப்பான அகர்வாலு அல்வா
நீ இவள் பார்க்க இடம் சேர்க்க இதழ் சேர்த்து கொள்வா
என் மெத்தை அவன் தானே அவன் நெஞ்சில் ஒட்டிப்பேனே
இனி கொஞ்சி கொல்வானே முத்தத்தை நான் சேர்ப்பேன்

அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா
கன்னங்கள் ரெண்டும் ஸ்டாப்பேரி கேக்கா
சனா சனா ஒ சாரா நான் சுவாசம் கொண்ட மூனா
கனா கனா நீ தானா கண்டாடும் கண்கள் நானா
பிலிம் காட்டியே பிலிம் காட்டியே பிலீங்க்ஸ் ஏத்தாதே
அனல் மூட்டியே தனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே 

மானே மானே ஹனிமூன்ம் எங்க மானே
ஜானே ஜானே அது கார்கில் பக்கம் தானே
தேனே தேனே தித்திப்பான தேனே
தீவே தீவே இனி முற்றும் இம்சை தானே

படம் : துப்பாக்கி (2012)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹாவித் அலி, சயனோரா பிலிப், ஷர்மிளா
வரிகள் : பா. விஜய்

Thursday, November 15, 2012

துப்பாக்கி - கூகிள் கூகிள் பண்ணி


கூகிள் கூகிள் பண்ணி பாத்தேன் உலகத்துல
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்லை
யாஹு யாஹு பண்ணி பாத்தும் இவன போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்லை
நான் டேட்டிங் கேட்டா வாட்ச்சை பாத்து ஒகே சொன்னானே
ஷாப்பிங் கேட்டா இபே.காம் கூட்டி போனானே
மூவி கேட்டேன் யூடியு போட்டு பாப்கார்ன் தந்தானே
பாவமா நிக்குறான் ஊரையே விக்குறான்
Meet my meet my boyfriend My smart and sexy boyfriend
Meet my meet my boyfriend My smart and sexy boyfriend

கூகிள் கூகிள் பண்ணி பாத்தேன் உலகத்துல
இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்லை
யாஹு யாஹு பண்ணி பாத்தும்  இவள போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்லை
இவ டேட்டிங்காக டின்னர் போனா ஸ்டார்ட்டர் நான் தானே
ஷாப்பிங் போக கூட்டிப் போனா டிராலி நான் தானே
மூவி போனா சோக சீன்னில் கர்சீப் நான் தானே
பாக்க தான் இப்படி ஆளு தான் அப்படி
Meet my meet my girlfriend My hot and spicy girlfriend
Meet my meet my girlfriend My hot and spicy girlfriend

Hey join me guys  It’s intro time
இவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க
பஞ்சுன்னு நெனச்சா பஞ்ச் ஒண்ணு கொடுப்பா
மூஞ்சுல ஹெல்மட் மாட்டிக்க
ஹேய் சுகர் ப்ரீ சுகர் ப்ரீ பேச்சுல இனிப்பிருக்கு
இவ பேட் ப்ரீ உடம்புல கொழுப்பிருக்கு
சிரிப்புல சிண்டரல்லா கோபத்தில் டிராகுல்லா
அழகுக்கு இவதான் பார்முலா பார்முலா

Meet my meet my girlfriend My hot ‘n spicy girlfriend

Hey come on girls இது intro time
இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா
ஒரு ஹண்ட்ஷெக் செஞ்சிடபொண்ணுங்க வந்தா
ஸ்வொய்ங்குன்னு பறப்பான் புல்லட்டா
மிலிட்டரி கட்ல ஸ்டைல் இருக்கும்
ஒரு மில்லிமீட்டர் சைஸ்ல சிரிப்பிருக்கும்
அல்மோஸ்ட் ஆறடி ஊரில் யாரடி
இவன் போல் இவன் போல்
goody goody goody goody

Meet my meet my boyfriend My smart and sexy
Meet my meet my boyfriend My smart and sexy

என் பேஸ்புக் பிரண்ட்ஸ் யார் யாருன்னு கேட்டு கொல்ல மாட்டானே
என் ஸ்டேடஸ் மாத்த சொல்லி என்ன தொல்லை செய்ய மாட்டானே
கிட்ட வந்து நான் பேசும் போதோ டிவீட்டர்குள்ள மூழ்கிடுவான்
இச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்தா நச்சுன்னு ட்வீட்டா போட்டுடுவான்
ரொமான்ஸ் கொஞ்சம் திரில்லர் கொஞ்சம் காத்தில் பஞ்சாய் நெஞ்சம் நெஞ்சம்

அவ செல்போன் ரெண்டிலும் காலிருக்கும் பேக் அப் பாஸ் பிரண்டஸ் நாலிருக்கும்
நெஞ்சுல ஜெலஸ்யே வெதச்சுடுவா  என்வயித்துக்கு ஜெலுசில் கொடுத்திடுவா
பொண்ணுங்க நம்பர் என் போன்ல பாத்தா சத்தமில்லாம தூக்கிடுவா
ஓரக் கண்ணால சைட் அடிச்சாலும் நோக்குவர்மத்தில் தாக்கிடுவா
அளவா குடிப்பாஅழகா வெடிப்பா இதயத் துடிப்பா துடிப்பா துடிப்பா

Meet my meet my girlfriend My hot ‘n spicy girlfriend
Meet my meet my girlfriend My hot ‘n spicy girlfriend

கூகிள் கூகிள் பண்ணி பாத்தேன் உலகத்துல
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்லை
யாஹு யாஹு பண்ணி பாத்தும்  இவள போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்லைடா
நான் டேட்டிங் கேட்டா வாட்ச்சை பாத்து ஒகே சொன்னானே
ஷாப்பிங் கேட்டா இபே.காம் கூட்டி போனானே
மூவி கேட்டேன் யூடியு போட்டு பாப்கார்ன் தந்தானே
மூவி போனா சோக சீன்னில் கர்சீப் நான் தானே
பாக்க தான் இப்படி ஆளு தான் அப்படி

Meet my meet my boyfriend My smart and sexy boyfriend
Meet my meet my girlfriend My hot and spicy girlfriend

படம் : துப்பாக்கி (2012)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : விஜய், அண்ட்ரியா, ஜோ, கிருஷ்ணா ஐயர்
வரிகள் : மதன் கார்க்கி


Sunday, November 4, 2012

சிலு சிலு சிலுவென



சிலு சிலு சிலுவென தென்றல் சிரிக்குது
சுட சுட சுட சுட மழையும் பெய்யுது
பட பட படவென இதயம் பறக்குதம்மா
தொடு தொடு தொடு என மனசு துடிக்குது
விடு விடு விடுவென வயசு தடுக்குது
பிடி பிடி பிடியென பைத்தியம் பிடிக்குதம்மா
அடி எனக்கும் கருவறை உண்டு அதில் உன்னை சுமக்கிறேன் இன்று
உன்னை தொட்டதினாலே நான் பறந்து போனேன் மேலே மேலே
மேலே மேலே மேலே போய்புட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே மேலே போய்புட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்

என் உச்சந்தலையில் ஏறி நீ ஒற்றை காலில் நின்று
உள்ளங்காலின் ரேகை எல்லாம் பார்க்க சொல்லாதே
சிக்கி முக்கி கண்ணால் என்னை உரசி பார்க்காதே
என் தலையனை உரைகள் எல்லாம் உன் தாவணி போலே இருக்கு
உறங்கும் போதும் உருளும் போதும் உன் முகம் தெரியுதடி
கண்ணுல காதுல மூக்குல நாக்குல காதல் வழியுதடி
கொப்பரை தேங்காய் போலே நான் குப்புறப்படுத்து கிடந்தேன்
ஒரு கொப்பரை தேங்காய் போலே நான் குப்புறப்படுத்து கிடந்தேன்
நீ எனக்கென்று தெரிந்த பின்னே நான் கோபுரம் போலே எழுந்தேன்
நானும் மேலே மேலே மேலே போய்புட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே மேலே போய்புட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்

சிலு சிலு சிலுவென தென்றல் சிரிக்குது
சுட சுட சுட சுட மழையும் பெய்யுது
பட பட படவென இதயம் பறக்குதம்மா இதயம் பறக்குதம்மா
தொடு தொடு தொடு என மனசு துடிக்குது
விடு விடு விடுவென வயசு தடுக்குது
பிடி பிடி பிடியென பைத்தியம் பிடிக்குதம்மா பைத்தியம் பிடிக்குதம்மா

நான் கற்பூரம் போலே இருந்தேன்
நீ தொட்டதும் குப்புனு எரிஞ்சேன்
உசுர புடிங்கி உனக்கு கொடுத்து ரொம்ப நாளாச்சு
உணவை நிறுத்தி உடலை வருத்தி மனசும் இளைசாச்சு
உன் பார்வை தொட்டதினாலே நான் அழகாய் மாறினேனே
மூச்சு காத்து மோதியதாலே பேச்சு முட்டுதடி
பேச்சு நின்று போனதினாலே காய்ச்சல் அடிக்குதடி
வேப்பங்குளத்து கிளியே என் வயசை உடைச்ச உளியே
என் வேப்பங்குளத்து கிளியே என் வயசை உடைச்ச உளியே
பாரடி எந்தன் கதியை நீ ஓடி வாடி வெளியே
உன்னால் மேலே மேலே மேலே போய்புட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே மேலே போய்புட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்

சிலு சிலு சிலுவென தென்றல் சிரிக்குது
சுட சுட சுட சுட மழையும் பெய்யுது
பட பட படவென இதயம் பறக்குதம்மா
தொடு தொடு தொடு என மனசு துடிக்குது
விடு விடு விடுவென வயசு தடுக்குது
பிடி பிடி பிடியென பைத்தியம் பிடிக்குதம்மா
அடி எனக்கும் கருவறை உண்டு அதில் உன்னை சுமக்கிறேன் இன்று
உன்னை தொட்டதினாலே நான் பறந்து போனேன் மேலே மேலே
மேலே மேலே மேலே போய்புட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே மேலே போய்புட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்

படம் : கோவில் (2003)
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : திப்பு
வரிகள் : சினேகன்

Friday, November 2, 2012

காதல் பண்ண திமிரு



ஏய் ஊர விட்டு உறவை விட்டு சாதி விட்டு சாமி விட்டு
எல்லை விட்டு கொல்லை விட்டு மானம் விட்டு ஈரம் விட்டு
மனச மட்டும் பார்க்குமடா காதல்
நல்ல மனசை மட்டும் பார்க்குமடா காதல்

காதல் பண்ண திமிரு இருக்கா
கைய புடிக்க தெம்பு இருக்கா
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால்
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தால்
கள்ளத்தனமா காதல் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு

காதல் பண்ண திமிரு இருக்கா
கைய புடிக்க தெம்பு இருக்கா
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால்
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தால்
கள்ளத்தனமா காதல் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு

பேரா பேரா செல்ல பேரா
ஜோரா ஜோரா லவ் பண்ணு பேரா

பொண்ணுங்கள நம்புறது தப்பு
கவுந்துபுட்ட ஊரெல்லாம் கப்பு
காதல் ஒரு வாலிப மப்பு
இறங்கிபுட்டா ஒண்ணுமில்லை சப்பு
நெஞ்சுக்குள்ள வேணுமடா உப்பு
இல்லைனாக்க என் கதி தான் அப்பு
ஆத்தா ஆத்தா சொல்லு ஆத்தா
காதல் எல்லாம் என்ன பண்ணும் ஆத்தா

ஒழுக்கத்திலே ராமனா இருங்க
சீதைங்களை தேடி தான் புடிங்க
தேவதாஸ மறங்கடா மொதல்ல
மன்மதன நினைங்கடா அதிலே
கெட்டியான காதலை உடைக்க
கொம்பனாலும் முடியாது இங்கே

பேரா பேரா
என்ன கிழவி
செல்ல பேரா
சொல்லு சொல்லு
ஜோர ஜோரா லவ் பண்ணு பேரா

என்ன புடிச்ச பொண்ண நான் பார்த்தேன்
என் மனசை அவக்கிட்ட கொடுத்தேன்
என்ன புடிச்ச பொண்ண நான் பார்த்தேன்
என் மனசை அவக்கிட்ட கொடுத்தேன்
அவ அப்பன் கோவக்காரன்
அண்ணன் கூட அவசரக்காரன்
எப்படி நான் சரிக்கட்ட போறேன்
எப்ப நானும் ஜோடி சேர போறேன்
ஆத்தா ஆத்தா
சொல்லு ஆத்தா
என் காதலுக்கு வழி என்ன ஆத்தா

சந்தையில அப்பனோட பார்த்தால்
வேட்டிய தான் இறக்கி நீ விடுடா
கோயிலுல ஆத்தாவோட பார்த்த
பட்டுனு தான் காலுல விழுடா
பஸ்க்குள்ள பாட்டியோட பார்த்தால்
இடம் கொடுத்து டிக்கெடையும் எடு டா

பேரா பேரா
செல்ல பேரா
அவ அண்ணன் கிட்ட எடு நல்ல பேரா

காதல் பண்ண திமிரு இருக்கா
கைய புடிக்க தெம்பு இருக்கா
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால்
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தால்
கள்ளத்தனமா காதல் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு

படம் : கோவில் (2003)
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : கோவை கமலா, வடிவேலு, சிலம்பரசன்
வரிகள் : சினேகன்

Wednesday, October 31, 2012

அரளி விதையில் முளைச்ச



அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்

அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்
உறவை மனது வளர்க்குதே
உயிரை அறுத்து எடுக்குதே
கண்ணில் காதல் விதைக்குதே
கடைசியில் உசுரை கொல்லுதே

அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்

 உள்ளத்தில் காதலை சுமந்துக் கொண்டு உதட்டில் மறைச்சால் மறையாதே
உறவின் நிழலில் நின்றுக் கொண்டு வெயிலில் காதலை வீசாதே
மனதில் ஆசையை புதைத்து விட்டு மறைஞ்சு மறைஞ்சு வாழாதே
என்னை மறக்க நினைத்து விட்டு உன்னை நீயே இழக்காதே
யாரோட சதி
நீ வச்ச பொறி
நெஞ்சுக்குள் வலி
வலி வலி வலி வலி வலி வலி வலி வலியே

அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்
உறவை மனது வளர்க்குதே
உயிரை அறுத்து எடுக்குதே
கண்ணில் காதல் விதைக்குதே
கடைசியில் உசுரை கொல்லுதே
கடைசியில் உசுரை கொல்லுதே
கடைசியில் உசுரை கொல்லுதே

படம் : கோவில் (2003)
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : ஸ்ரீராம்
வரிகள் : சினேகன்

Thursday, October 4, 2012

நங்கை நிலாவின் தங்கை



வள்ளியே சக்கர வள்ளியே
மல்லியே சந்தன மல்லியே
பள்ளியே பங்கண பள்ளியே

நங்கை நிலாவின் தங்கை
மங்கை நீ தானே செங்காய்
பாவை என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்

மண்டாகினி மாங்கனனி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பெளர்ணமி வா ரதி நீ
ரூனாலினி நீ என் சொப்பராணி

நங்கை நிலாவின் தங்கை
மங்கை நீ தானே செங்காய்
பாவை என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்

உன்னை பார்த்ததும் ஊரை விட்டு ஆங்கிலம்
ஓடி போனதென்ன
சீலைட் செம்மொழி செந்தமிழ் தான் என் மொழி
என்றே ஆனதென்ன

முன்னாலே நான் ஜான்ஹாரி
உன்னாலே இப்போ முத்துமாரி
முன்னாலே நான் ஜான்ஹாரி
உன்னாலே இப்போ முத்துமாரி
உன்ன நான் உப்பு கண்டமா
தொட்டுக்க உப்பு குடுமா
உன்னால டம்மா துண்டம்மா உடைஞ்சேன்

நங்கை நிலாவின் தங்கை
மங்கை நீ தானே செங்காய்
பாவை என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்

சோழன் புத்திரி சுற்றும் விழிகள் கத்திரி
வெயில் போல காய
கம்பன் பிள்ளை தான் காதல் உள்ளம் வெள்ளை தான்
நாளும் வெந்து சாய

கண்ணம்மா நாம் ஒட்டலாமா
எங்கம்மா உன் அத்தைதாம்மா
கண்ணம்மா நாம் ஒட்டலாமா
எங்கம்மா உன் அத்தைதாம்மா

வள்ளியே சக்கர வள்ளியே
மல்லியே சந்தன மல்லியே
பள்ளியே பங்கண பள்ளியே
உன்னைத்தான்

நங்கை நிலாவின் தங்கை
மங்கை நீ தானே செங்காய்
பாவை என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்

மண்டாகினி மாங்கனனி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பெளர்ணமி மா ரதி நீ
மெர்னாலினி யு மை சொப்பராணி

படம் : எங்கேயும் காதல் (2011) 
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : ரிச்சர்ட், ராகுல் நம்பியார், நவீன் மாதவ்
வரிகள் : வாலி

Sunday, September 30, 2012

பிஞ்சு தென்றலே என்



பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு


பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு


அங்கும் இங்கும் அலைந்த தென்றலே
முள்ளில் மோதி கிழிந்த தென்றலே
கண்ணில் தூக்கம் தொலைந்த தென்றலே
தாலாட்டும் என் பாட்டில் துயில் கொள்ளவா


பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு


விழித்து கொண்டேதான் முதலைகள் உறங்கும்
அது போல் உறங்காதே
ஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு
அதை நீ மறவாதே
உறங்கும் வரை நான் இசைத்திருப்பேன்
நீ விழிக்கும் வரை நான் விழித்திருப்பேன்
உனது கனவில் நான் வீணை வாசிப்பேன்


பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு


முதல் முறை உந்தன் முகம் கண்டபோதே
முழுசாய தொலைந்துவிட்டேன்
வேர்களை மறைக்கும் தாவரம் போல
மனதை மறைத்து விட்டேன்
தென்றலின் வாசல் அடைத்து வைத்தேன்
புயல் வரும் வாசல் திறந்து வைத்தேன்
சரியா தவறா அட யாரை நான் கேட்பேன்

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
எந்தன் கானம் உண்ட கண்கள் உறங்கு
காதல் தேடி அலைந்த தென்றலே
கல்லில் மோதி உடைந்த தென்றலே
கண்ணீர் காட்டில் நனைந்த தென்றலே
தாலாட்டும் என் பாட்டு கேட்கின்றதா

படம்: மஜ்னு (2001)
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: MG ஸ்ரீகுமார், சந்தியா

வரிகள் : வைரமுத்து

Friday, September 21, 2012

வேணாம் மச்சான் வேணாம்




வஞ்சரம் மீனு வௌவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை இறாலு இறங்கி கலக்கு கோபாலு
வஞ்சரம் மீனு வௌவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை இறாலு இறங்கி கலக்கு கோபாலு

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி திறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டரு

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டரு
கடலை போல காதல் ஒரு சால்ட் வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டிடு
மம்மி சொன்ன பொண்ணை கட்டுனா டார்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டினா டவுசர் அவுளும்டா
மம்மி சொன்ன பொண்ணை கட்டுனா டார்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டுனா டவுசர் அவுளும்டா
கண்ணை கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும்டா

வஞ்சரம் மீனு வௌவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை இறாலு இறங்கி கலக்கு கோபாலு
வஞ்சரம் மீனு வௌவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை இறாலு இறங்கி கலக்கு கோபாலு

பைக்ல தினமும் ஒண்ணா போனோம் பேக்குல இப்ப அவளை காணாம்
பீச்ல சுகமா கடலை போட்டோம் கடலுக்கும் இப்ப கண்ணீர் முட்டும்
பைக்ல தினமும் ஒண்ணா போனோம் பேக்குல இப்ப அவளை காணாம்
பீச்ல சுகமா கடலை போட்டோம் கடலுக்கும் இப்ப கண்ணீர் முட்டும்

காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது
உன் கண்ணை முழிச்சுகிட்டா அந்த காதல் கிடையாது
அவ போறாளே போறா தண்ணீரை விட்டு மீனா
நான் காயப்பட்ட மைனா இப்ப பாடுறேன் கானா

பிகரு சுகரு மாதிரி ஜனக்கு ஜனக்கு வௌவ்வாலு
நட்பு தடுப்பு ஊசிடா ஜனக்கு ஜானு கோபாலு
பிகரு சுகரு மாதிரி பசங்க உடம்பை உருக்கிடும்
நட்பு தடுப்பு ஊசிடா உடைஞ்சா மனசை தேத்திடும்

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டரு
கடலை போல காதல் ஒரு சால்ட் வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டிடு

பாதியில் வந்த பொண்ணை நம்பி ஆதியில் வளர்ந்த நட்பை விட்டேன்
தேதியை போல கிழிச்சுப்புட்டா தேவதை அவளை நம்பி கெட்டேன்
தோலு மட்டும் வெள்ளை உன்னை கவுத்துப்புட்டா
மெல்ல என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன்
அவ போட்டாலே போட்டா நல்ல திண்டுக்கல்லு பூட்டா
ஒரு சாவி கொண்டு வாடா என்னை திறந்து விடேண்டா
கண்ணில மைய வைப்பாடா அதில பொய்ய வைப்பாடா
உதட்டில சாயம் வைப்பாடா உனக்கு காயம் வைப்பாடா
கண்ணில மைய வைப்பாடா அதில பொய்யோ பொய்யையோ
உதட்டில சாயம் வைப்பாடா உனக்கு கையோ கையையோ

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டரு
கடலை போல காதல் ஒரு சால்ட் வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டிடு
மம்மி சொன்ன பொண்ணை கட்டுனா டார்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டினா டவுசர் அவுளும்டா
மம்மி சொன்ன பொண்ணை கட்டுனா டார்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டுனா டவுசர் அவுளும்டா
கண்ணை கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும்டா

படம் : ஒரு கல் ஒரு கண்ணாடி 
இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 
பாடியவர்கள் : நரேஷ் ஐயர், வேல்முருகன் 
வரிகள் : நா. முத்துக்குமார்

Friday, November 4, 2011

ஏழாம் அறிவு - ஏலேலம்மா



ஏலேலம்மா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

அடி நியூட்டன் ஆப்பிள் விழ
புவி ஈர்ப்பை கண்டானடி
இன்று நானும் உன்னில் விழ
விழி ஈர்ப்பை கண்டேனடி
ஓசை கேட்காமலே இசை அமைத்தான் பீதோவனே
நீ என்னை கேட்காமலே எனை காதல் செய் நண்பனே

குத்துமதிப்பாய் என்னை பார்த்தவளும் நீதானே
குப்பைகூடை போல் நெஞ்ச கலைச்சவ நீதானே
மேலும் மேலும் அழகாய் மாறி போனனேன் நானே

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

சிறு நேரம் இல்லாமலே
துளி நீரும் இல்லாமலே
இள வெயிலும் படாமலே
பூ பூக்கும் இன்பம் தந்தாய்
தோளில் விழாமலே
கை சிறிதும் படாமலே
உன் நிழலும் தொடாமலே
நீ என்னை கொள்ளை இட்டாய்
இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா
இரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா
வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா வா

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

படம்: ஏழாம் அறிவு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், கார்த்திக், ஷாலினி, சுருதி ஹாசன்
வரிகள்: நா. முத்துக்குமார்

Thursday, November 3, 2011

ஏழாம் அறிவு - யம்மா யம்மா காதல் பொன்னம்மா



யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேகை போல
பெண்ணோட காதல் கைக்குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் மூச்சு காத்த வாங்கி போனாளே

பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்

அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முல்லுடா
அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை
ஓட்ட போட்ட முங்கில் அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்
வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போனேன் பாரு அவ பூவு இல்ல நாரு

என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல நெருடாதே
மனம் தாங்காதே தாங்காதே

வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்னை கண்ணைக்கட்டி கூட்டி போங்கடா

படம் : ஏழாம் அறிவு
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: கபிலன்

Wednesday, November 2, 2011

ஏழாம் அறிவு - இன்னும் என்ன தோழா



இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல இடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!

இன்னும் என்ன தோழா, , எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்!
தொடு வானம் இனி தொடும் தூரம்!
பலர் கைகளை சேர்க்கலாம்!

விதை விதைத்தால்
நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?

ஒரே பலம் ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம் அதே இடம்
அகம் புறம் நம் தேகத்தில்

கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிறோம்

பனி மூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவன் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா?

இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு!
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல இடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!

படம்: ஏழாம் அறிவு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: பல்ராம், நரேஷ் ஐயர், சுசித் சுரேசன்
வரிகள்: பா. விஜய்

Monday, October 17, 2011

நிழல் என்றும் தூரமானதில்லை

நிழல் என்றும் தூரமானதில்லை
நிஜமென்றும் பாரமானதில்லை
மண்மீது நிலவு பூக்கும்
மாயையைப் போல
கண்முன்னே தோன்றும் காட்சி
நீ பாரு
கைக்கூடி வந்த காதல்
என்னாகும் கூறு
இதைக்கட்டிக்காக்கும் ஆளு
யார் பாரு


மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
கண்களைத் திறந்தே கனவுக்காணும் தான்
மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
வானவில்லில் அம்புகள் தொடுக்கும் தான்

என்றும் எங்கும் எப்பொழுதும்
உன் பேச்சே - அட
என்னுடலில் இருக்குது என்னாச்சே
நீயும் நானும் ஒன்றே என்று ஆயாச்சு -அட
வெய்யில் கூட வெண்பனிய போலாச்சு
அப்படியா தோன்றுது உனக்கு - அட
அப்படியே காட்டடி எனக்கு
இவ்வுலகம் முழுவதும் நமக்கு -அட
வேறுலகம் தேவைதானா எதுக்கு?

மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
நான்கு கண்கள் உள்ள ஜீவன் தான்
நோயே தான் நோயே தான்
காதல் என்றும் நோயே தான்
உடலில் புகுந்து உயிரை வாட்டும் தான்

காதல் கொண்டால் விந்தைகளும் நிகழும்
அட அவ்வப்போது அச்சங்களும் திரளும்
காதல் கொண்டால் இப்படித்தான் இருக்கும்
அதில் அச்சம் மடம் நாணம் கூட இனிக்கும்
இதயங்கள் செய்கின்ற கலகம்
அட எப்பொழுதும் அமைதியாய் விலகும்
இதைத்தான் விரும்புது உலகம்
தினம் இப்படித்தான் காதல் வந்து பழகும்

மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
உள்ளங்கையில் உலகைக் காட்டும் தான்
மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
உருவம் இன்றி உயிரும் வாழும் தான்

(நிழல்)

http://tamildot.com/K/Kumaran/Tamilmp3world.Com%20-%20Nizhal%20Endrum.mp3 இங்கே முழுதுமாகப் பாடலைக்கேட்கலாம்..

பாடலைப்பாடியவர்கள்: ராமு?, வினயா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
திரைப்படம் : குமரன்

Thursday, October 6, 2011

முன் அந்திச் சாரல் நீ

முன் அந்திச் சாரல் நீ
முன் ஜென்மத் தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில்
தொலைதூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில்
விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..

ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல
வார்த்தைகள் கொஞ்சமே..
(முன் அந்திச்)

ஓ...அழகே ஓ...இமை அழகே
ஹே...கலைந்தாலும் உந்தன் கூந்தல்
ஓரழகே...
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே
அடி உன்னைத் தீண்டத்தானே
மேகம் தாகம் கொண்டு
மழையாய் தூவாதோ
வந்து உன்னைத் தொட்ட பின்னே
தாகம் தீர்ந்ததென்று
கடலில் சேராதோ ஒ..ஒ..
(ஹே ஹே பெண்ணே )



அதிகாலை ஒ.. அந்தி மாலை..
உனைத் தேடி பார்க்கச் சொல்லிப் போராடும்
உனைக் கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்
பெண்ணே பம்பரத்தைப் போலே, என்னைச் சுற்ற வைத்தாய்
எங்கும் நில்லாமல்..
தினம் அந்தரத்தின் மேலே, என்னைத் தொங்க வைத்தாய்
காதல் சொல்லாமல்
ஹே ஹே பெண்ணே

(முன் அந்திச் )
திரைப்படம் : ஏழாம் அறிவு
பாடியவர்கள்: கார்த்திக் , மேகா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : நா.முத்துக்குமார்

Saturday, September 3, 2011

கோ - என்னமோ ஏதோ



என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ அரைமனதாய் விடியுது என் காலை

என்னமோ ஏதோ
மின்னி மறையுது விழியில்
அண்டி அகலுது வழியில்
சிந்தி சிதறுது வெளியில்
என்னமோ ஏதோ
சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில்
விட்டி பறக்குது தொலைவில்

ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏதோ... ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ அரைமனதாய் விடியுது நாளை

நீயும் நானும் எந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா? பூவே

முத்தமிட்ட மூச்சு காற்றில்
பட்டு பட்டு கெட்டு போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது
திட்டமிட்டு எட்டி போனேன்
நெருங்காதே பெண்ணே எந்தன்
நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன்
அச்சங்கள் அச்சாகும்
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்

ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

நீயும் நானும் எந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா? பூவே

சுத்தி சுத்தி உன்னை தேடி
விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல்
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ
கனா காண தானே பெண்ணே
கண் கொண்டு வந்தேனோ
வினா காண விடையும் காண
கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ

ஏதோ.. எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
ஒ ஹோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ உருவமில்லா உருவமில்லா நாளை... ஏதோ
ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ அரைமனதாய் விடியுது என் காலை... ஏதோ

ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ அரைமனதாய் விடியுது என் காலை.. ஏதோ
....... ஏதோ

படம்: கோ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஆலாப் ராஜு, பிரஷாந்தினி, ஸ்ரீசரண், MC Jazz
பாடல் வரிகள் : மதன் கார்க்கி

விரும்பி கேட்டவர்: ரவி

Wednesday, May 11, 2011

திமு திமு தீம் தீம் தினம்

திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே தினம் நெஞ்சில் கூடும் மனம்
ஒ அன்பே! நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே! என் நாட்கள் என்றும் போலே போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே காதல் கனம் கொண்டேன்

திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே தினம் நெஞ்சில் கூடும் மணம்


உள்ளமே உள்ளமே உள்ளே உன்னைக் காண வந்தேனே
உண்டாகிறாய் துண்டாகிறாய் உன்னால் காயம் கொண்டேனே
காயத்தை நேசித்தேனே என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே என்னுடைய உலகம் தனி

கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
கண்ணைத் துண்டாக்கி துள்ளும் (கொஞ்சம்)

சந்தோசமும் சோகமும் சேர்ந்து வந்து தாக்கக் கண்டேனே
சந்தேகமாய் என்னையே நானும் பார்த்துக் கொண்டேனே
ஜாமத்தில் விழிக்கிறேன் ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஒ காய்ச்சலில் கொதிக்கிறேன் கண்ணுக்குள்ளே காதல் விழா விழா

திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே தினம் நெஞ்சில் கூடும் மணம்
ஒ! அன்பே! நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே! என் நாட்கள் என்றும் போலே போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே காதல் கனம் கொண்டேன்

கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
கண்ணை துண்டாக்கி துள்ளும்
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்



படம் : எங்கேயும் காதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : கார்த்திக்
பாடலாசிரியர் : ந.முத்துக்குமார்

தீயில்லை புகையில்லை




தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூவில்லை மடலில்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்..
ஒ... ஹோ... விலையாய் தந்தேனே என்னை
ஒ... ஹோ... வாங்கிக் கொண்டேனே உன்னை
ஒ... ஹோ... ஆடை கொண்டதோ தென்னை
ஒ... ஹோ... ஒ.. ஹோ....

வெகு நாளாய் கேட்டேன்
விழித் தூரல் போட்டாய்
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே ஒ.. ஒ...
விலகாத கையைத் தொட்டு
விழியோர மையைத் தொட்டு
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே
விலக்கிய கனியை விழுங்கியது
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது
இது ஒரு சாட்சி போதாதா?
கண்கள் மோதாதா? காதல் ஓதாதா?
-----------------------------------------------------

பாடல் வரிகளை எழுதியனுப்பிய கவிதாவிற்கு நன்றிகள்.

தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே

பூவில்லை மடலில்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்...

ஒ.. ஒ... புனல் மேலே வீற்று
பனி வாடை காற்று
புனைந்தது நமகொரு புது பாட்டு


கடற்கரை நாரைக் கூட்டம்
கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வர பார்த்து
சிலு சிலுவென்று குளிரடிக்க
தொடு தொடு என்று தளிர் துடிக்க
எனக்கொரு பார்வை நீதானே
என்னை எடுப்பாயா உன்னுள் ஒளிப்பாயா..

தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூவில்லை மடலில்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்...

ஒ... ஹோ... விலையாய் தந்தேனே என்னை
ஒ... ஹோ... வாங்கி கொண்டேனே உன்னை
ஒ... ஹோ... ஆடை கொண்டதோ தென்னை

படம் : எங்கேயும் காதல் (2011)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : நரேஷ் ஐயர், முகேஷ், கோபால் ராவ், மஹதி
பாடல் வரி : வாலி

Last 25 songs posted in Thenkinnam