யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேகை போல
பெண்ணோட காதல் கைக்குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் மூச்சு காத்த வாங்கி போனாளே
பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்
அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முல்லுடா
அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை
ஓட்ட போட்ட முங்கில் அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்
வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போனேன் பாரு அவ பூவு இல்ல நாரு
என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல நெருடாதே
மனம் தாங்காதே தாங்காதே
வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்னை கண்ணைக்கட்டி கூட்டி போங்கடா
படம் : ஏழாம் அறிவு
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: கபிலன்
Thursday, November 3, 2011
ஏழாம் அறிவு - யம்மா யம்மா காதல் பொன்னம்மா
பதிந்தவர் MyFriend @ 9:14 AM
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
கலக்கல் பாடல். இந்த படத்தில் சூரியாவிற்க்கு பாலுஜியின் குரல் சரியாக பொருந்தவில்லையோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.
நன்றாக பொருந்தியுள்ளது
எஸ்.பி.பி.யின் குரல் எல்லாருக்கும் பொருந்தும் வண்ணம் குரலை மாற்றி பாடுவார்
கோவை ரவி உன்னக்கு எஸ் .பி.பி. குரலைப்பற்றி என்ன தெரியும் ? எம்.ஜி ஆர்.,ஜெமினி ,சிவகுமார் , முத்துராமன்.கமலஹாசன் ,ரஜனி ,மோகன், அஜித் ,விஜய்,தனுஷ் ,சிம்பு ,ஜெயம் ரவி உள்பட பலருக்கும் பொருத்தமாக பாடிஉள்ளர்.அந்த இசை மேதை போல் பாட உனக்கு வருமா?
எத்தனை மொழிகளில் பாடி வருகிறார். அவருக்கு வயது எழுவது குரல் இருபது
எஸ்.பி.பி. தன் குரலை அஜித் ,சூர்யா விற்கு நன்றாக பொருந்தும் வண்ணம் மாற்றி பாடுவார்
அமர்க்களம் பாடல்களை நன்றாக அவதானிக்கவும் .நந்தா படத்தில் சூர்யாவிற்கு நன்றாக பொருந்தியுள்ளது . சூர்யாவின் அப்பா சிவக்குமாருக்கும் நன்றாக பொருந்தும் வண்ணம் பாடியுள்ளார்
டேன் சிந்து வானம் ... பாடலும் உச்சி வகுன்எடுத்து பாடலும் ... எப்படி எஸ்.பி.பி தன் குரலை மாற்றி பாடுகிறார். இது தவிர ராதாரவிக்கு அப்பன் பேச்சா என்ற பாடலுக்கு எப்படி மாற்றி பாடுகிறார் . எஸ்.பி.பி.
பாடலை உன்னிப்பாக கவனிக்கவும்
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி யவள் பேரழகை ..... என்ற பாடலுக்கு நடிகர் பிரபுவுக்கு
எப்படி அந்த எஸ்.பி.பி.யின் ஆரம்ப சிரிப்பும் பாடலும் பொருந்திப்போகிறது.
இது தவிர நடிகர் சிவாஜிக்கு பொட்டு வைத்த முகமோ ....... என்ற எஸ்.பி.பி.யின் குரலும் மற்றும்
அன்புள்ள அப்பா என்ற படத்தில் அன்புள்ள அப்பா என்னப்பா ......என்ற பாடலில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
நடிகர் சிவாஜிக்கு ஏற்ற மாதிரி தன் குரலால் மாற்றி நடித்து பாடிஇருபார். இந்த பாடலை நன்றாக கவனிக்கவும்
நன்றி பாஸ்கர்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற இசை மேதை யின் குரல் எத்தனை பேருக்கு ஏற்ற மாதிரி பயன் படுத்தி யுள்ளார்கள்
நடிகர் சிவாஜிக்கும் அவரது மகன் பிரபுவுக்கு
நடிகர் முத்துராமன் அவரது மகன் கார்த்திக்
நடிகர் சிவகுமார் அவரது மகன் சூர்யா
நடிகர் தியாகராஜன் அவரது மகன் பிரசாந்த்
நடிகர் டி .ராஜேந்திரர் அவரது மகன் சிம்பு
நடிகர் ரஜனிகாந்த் அவரது மருமகன் தனுஷ்
இப்படி தெலுங்கிலும் கன்னடமும் அப்பா , மகனுக்கும் பாடியுள்ளார் எஸ். பி.பி.
இப்படி பல வுண்டு
Post a Comment