நான் கண்டேன்
கண்கள் பேசும்போது
காலம் நகராது
இதயம் அது விட்டுவிட்டு
துடிக்கிறதே
நான் கண்டேன்
நேற்று இல்லா ஒன்று
மீண்டெதென்று இங்கு
மின்னலைகள் என்னைத்தாக்கிடுதே
மழை நின்றும் நான் நனைகிறேன்
துளி துளியாய் உடைகின்றேன்
சிறகில்லை நான் பறக்கின்றேன்
என்னை ஏனோ மறக்கின்றேன்
நான் கண்டேன்
கண்கள் பேசும்போது
காலம் நகராது
இதயம் அது விட்டுவிட்டு
துடிக்கிறதே
நான் கண்டேன்
மௌனமாய் நெஞ்சிலே காயங்கள்
சேர்க்கிறாய்
ஆறுதல் நானாகவா
உன்னை நீ உன்னையே ஏனடி
புதைக்கிறாய்
வான்வெளி நான் காட்டவா
என் காதோரம் ஏதேதோ சொன்னாய்
கண் காணாத தூரம் நின்று
என் மூச்சுக்கு காற்றாய் வந்தாய்
என் ஆதாரம் நீயே என்று
நான் கண்டேன்
கண்கள் பேசும்போது
காலம் நகராது
இதயம் அது விட்டுவிட்டு
துடிக்கிறதே
நான் கண்டேன்
பயணங்கள் போகப்போக நெடும்பாதை
நீளும் ஜாலம் கண்டேன்
விரல்களை கோர்த்துப்போக நீ பக்கம் வேண்டும்
என்பேனே
வழியினில் நானுமே மழையுதிர்காலமே
உலகத்தின் எல்லை போகவே தோன்றுமே
இரவினில் நான் விழிக்கிறேன்
கனவினில் தான் உறங்கினேன்
நடந்ததை நான் மறக்கிறேன்
இன்று புதிதாய் பிறக்கின்றேன்
நான் கண்டேன்
கண்கள் பேசும்போது
காலம் நகராது
இதயம் அது விட்டுவிட்டு
துடிக்கிறதே
நான் கண்டேன்
திரைப்படம் : முரண்
பாடியவர்கள்: ரஞ்சித்,?
இசை: சாஜன் மாதவ்
வரிகள்: லலிதா ஆனந்த்
Monday, November 28, 2011
நான் கண்டேன்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 3:10 PM
வகை சாஜன் மாதவ், ரஞ்சித், லலிதா ஆனந்த்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment