Wednesday, November 9, 2011

என் வெண்ணிலவே எரிக்காதே



என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே
உன்னில் படர்ந்த என்னுயிரை
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே



பனியில் இலையற்ற தனிமரம் நான்
பாலையில் துடித்திடும் சிறுப்புழு நான்
காதல் தேவதைப் போல் வந்து
களப்பலிக்கேட்பதேன் மோகினியே
நீ ஏன் எரித்தாய் மீனாட்சி
உன் நிழலில் வாழும் மதுரையடி!
மழையாய் தர வா நீ
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...



கள்ளிப் பாலை ஊற்றிவிட்டு
வெள்ளி நிலவாய்ப் போனவளே
என்னில் வளர்த்த பொற்சிறகை
ஒடிந்திட நடந்திடும் கொடும் புயலே
அழகரைத் தொட்டதால் வைகை நதி
அலை கடல் சேரா மதுரையடி
என் விடிவா முடிவா நீ!
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...

என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே
உன்னில் படர்ந்த என்னுயிரை
மண்ணில் ஏதோ... வீசிவிட்டாய்...
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...

திரைப்படம் : ஆடுகளம்
பாடியவர் : கே கே
இசை: ஜிவி ப்ரகாஷ்
வரிகள் : V. I. S. Jayapalan

2 Comments:

வல்லிசிம்ஹன் said...

யப்பாடி என்ன வரிகள்.
ரொம்ப அருமை. வைர வரிகளா இல்லை வேற யாராவதா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ வல்லி அது வில்லனா நடிச்ச.. ஜெயபாலன் எழுதியதாம்..

Last 25 songs posted in Thenkinnam