என் மனசை பறித்துச் சென்ற
கள்வனே நீ யாரோ
என் வயசை உணர வைத்த
தூயவனே யாரோ
கண்களிலே ஒரு கனவு
இதயமெல்லாம் உன் நினைவு
பூங்காற்றே என் மனதில்
பூத்தது புது உறவு
ராரே ராரே ராரேரோ
ஓஹோஹோ ராரேராரேரோ
ராரே ராரே ராரேரோ
ஓஹோஹோ ராரேராரேரோ
என் மனசை.. நீ யாரோ
யாரோ யாரோ யாரோ யாரோ யாரோ
நீ வந்து தீண்டும் போது
நெஞ்சினிலே பூப்பூக்கும்
சின்ன சின்ன பார்வையாலே
மேனி எங்கும் சிலிர்த்துவிடும்
உன் விரல்களால் பதியும் காயங்கள் சுகமே
அணைக்கும் போது அலைபாயுதே மனமே
சொந்தம் என்றொரு போர்வை கொடு
தலையணையாய் நான் என்னை தந்திடுவேன்
நானே நானே..
(என் மனசை..)
படம்: ஆண்டாள்
இசை: சுரேஷ் ரோகன்
பாடியவர்: ஷர்மிளா சிவகுரு
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சவுண்ட்பார்ட்டி உதயகுமாருக்காக இந்த பாடலை ஸ்பெஷலா டெடிக்கேட் பண்ணுவோம். :-)
Saturday, March 22, 2008
335. என் மனசை பறித்துச் சென்ற...
பதிந்தவர் MyFriend @ 9:07 AM 2 பின்னூட்டங்கள்
வகை 2000's, சுரேஷ் ரோகன், மலேசியா, ஷர்மிளா சிவகுரு
Thursday, March 20, 2008
331. நீ பார்த்திடல் அழகு
நீ பார்த்திடல் அழகு
நீ பேசிடல் அழகு
நீ ரசித்திடல் அழகு
அதனால் நான் அழகு
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
திங்கள் தரையிறங்கி தென்றல் சேர்ந்திணைந்து
ஆடை சூழ்ந்தழகு பெண்ணே
தீயில் சிவப்பெடுத்து கொள்ளன் கோர்த்தெடுத்த
தங்கம் படிந்தழகு பெண்ணே
உன் சிறு மொழி வார்த்தை தீண்டியதால்
என் விழியது மனிதனை தேடியதே
நீ சொன்ன ஒரு வரியில்
இங்கு மலர்ந்திடும் புது மொழியே
தமிழே நீ யார் என்று சொல்லி விடு
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
விண்ணில் தவங்கள் செய்து மண்ணில் வசந்தம் தந்த
நவம்பர் மாத மழை நீயே
கேட்கும் மொழி அறிந்து தீர்ப்பாய் எனை புரிந்து
ஆசை தீர்த்தழகு நீயே
உன் கருவிழி பார்வை ஒளி கொடுத்தால்
நம் கனவுகள் நாளும் சுடர் விழுமே
நீ மிதக்கும் கனவுகளில் என்றும்
நான் பிறப்பேன் உன் மடியில்
உயிரே நீ யார் என்று சொல்லிடவா
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
அழகு ஆ.. அழகு..
படம்: நவம்பர் 24
இசை: லாரன்ஸ்
பாடியவர்கள்: நரேன், ஷர்மிளா சிவகுரு
விரும்பி கேட்டவர்: நாமக்கல் சிபி
பதிந்தவர் MyFriend @ 6:16 AM 2 பின்னூட்டங்கள்
வகை 2000's, நரேன், மலேசியா, லாரன்ஸ், ஷர்மிளா சிவகுரு