Friday, August 19, 2011

யுவன் யுவதி - மயக்க ஊசி



மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே
மருகி மருகி தினம் உருகி உருகி
உன்னைத் தாங்கி தாங்கி மோட்சம் போனேனே
நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே
என்ன ஆச்சு ஏதும் எனக்கு தெரியாதே

மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே

உலகில் உள்ள அழகை எல்லாம் உன்னில் கண்டேனே
அணுமின நிலையம் ஒன்றை உந்தன் கண்ணில் கண்டேனே
எதுவும் புரியாமல் என்னை அறியாமல்
உன்னில் காதல் கொண்டேனே
சிலையை மீட்டும் உளியைப் போலே என்னைத் தொட்டாயே
காலம் செய்யும் விரலால் என்னை ஏதோ செய்தாயே
உலையை களையாமல் வழியை உணராமல்
சுகமாகக் கொன்றாயே
உன்னைக் கண்ட மறு நொடியே
இருதயம் வலப் புறம மாரிடுதே
உன் கை தீண்டும் ஒரு நொடியில்
நரம்புகள் எனக்குள்ளே வெடிக்கின்றதே

மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே

தனியே நாமும் காணும் நேரம் பூமி நிற்கட்டும்
பிரியா விடையை சொன்ன பின்னே மீண்டும் சுற்றட்டும்
சிறகை விரிக்காமல் உயரே பறக்காமல்
விழி விண்ணைத் தாண்டட்டும்
உந்தன் முன்னே தூங்கும் தோட்டம் தோற்றுப் போகட்டும்
நீயும் சூட பூக்கள் எல்லாம் நெஞ்சில் கேட்கட்டும்
கடலும் நீயாக புயலும் நானாக
உன்னில் மையல் கொள்ளட்டும்
காதல் என்ற வார்த்தையிலே ஆயிரம் கவிதைகள் தெரிகிறதே
இமைகள் தாக்கி இதயங்களே பொடிப் பொடிப் பொடியாய் உதிர்கிறதே

மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே
மருகி மருகி தினம் உருகி உருகி
உன்னைத் தாங்கித் தாங்கி மோட்சம் போனேனே
நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே
என்ன ஆச்சு ஏதும் எனக்குத் தெரியாதே

படம்: யுவன் யுவதி
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், மதுமிதா
வரிகள்: கலை குமார்

Thursday, December 16, 2010

கிங்குடா அன்பு கிங்குடா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

கிங்குடா அன்பு கிங்குடா
கிங்குடா அண்ணன் கிங்குடா
ஹோய் டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும் தினதின்
டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும் போடு
டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும்

இன்னாப்பா
மியூஜிக் அடிச்சாத்தான் நாங்க ஆடுவோம்

கிங்குடா அன்பு கிங்குடா
கிங்குடா அண்ணன் கிங்குடா
கிங்குடா இனிமே கிங்குடா
கிங்குடா கிங்கோ கிங்குடா
யெக்கக்கோ யெக்கக்க்கோ கிழிகிழின்னு கிழிச்சிக்கோ
அப்பப்போ அப்பப்போ ஆண்டவனை நினைங்கப்போ
(கிங்குடா..)

மரீனா பீச்சில் தூங்கும் நம்ம புரட்சி தலைவர் கிங்குடா
அவரு பக்கத்தில் நானும் தூங்க சான்சு கெடச்சா கிங்குடா
வாழ்க்கை சூதாட்டம் தாண்டா அதில் ஜேக்போட் கிஞ்குடா
யே அள்ளிக்கோ அசத்திக்கோ யெக்கக்கோ யெக்கக்கோ
உலக அழகிங்க நூறு பேரை வர சொல்லி
அதுல ஒருத்திய கட்டிக்கிட்டா கிங்குடா
(கிங்குடா..)

கில கில கில கில கில கில
கிச்சிலிக்கான் கிச்சிலிக்கான்
அஹான் அஹான் அஹா ஹஹான்
யெக்கக்கோ யெக்கக்கோ அப்பப்போ அப்பப்போ

சுக்ரன் திசையும் தோட என்ன சுத்துர நேரமும் வரும்டா
கர்ரன்சி நோட்ல தாண்டா நான் கோட்டைய கட்டுர கிங்குடா
கடல் ஒன்னு வாங்கி அதில் கப்பலை விடுர கிங்குடா
யே அள்ளிக்கோ அசத்திக்கோ யெக்கக்கோ யெக்கக்கோ
தங்கச்சிக்கு பக்கத்துல பிரதர் கிங்குடா
சிங்கப்பூர் மாப்பிள்ளை தேடிவரும் கிங்குடா
(கிங்குடா..)

படம்: உள்ளம் கொள்ளை போகுதே
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்கள்: கலைக்குமார், மனோ, பிரபு தேவா, யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: கலைக்குமார்

Wednesday, December 8, 2010

ஆளான தேகம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை

ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை
தித்திக்கும் தேகத்தை தேனீக்கள் மொய்க்குதே
ஒத்தைக்கு ஒத்தையாக வாடா
தூங்காத கண்ணுக்குள் நீ தூங்க வருவாயா
வெண்ணிலா பருவம் தொட்டு வேரோடு பறித்திடு
(ஆளான..)

எட்டு பதினெட்டு இந்த பெண்ணோட தேகம் தொட்டு
ஆடு விளையாடு நீதான்
கையால் இரு கையால் வளவி என்னை பூட்டிக்கொள்ள
வா வா வருவாயா நீதான்
இந்த மெழுகுவர்த்தியை தினம் ஏற்றி வைத்திடு
என்னை உருக வைத்திடு வா வா
மூன்றாம் பிறையினை நீ ஊதி ஊதியே
அதை முழுமை ஆக்கிடு வா வா
(ஆளான..)

நீயோ இல்ல நானோ ஒரு நேர்க்கோட்டில் நடந்து வந்தால்
யோகம் சுக யோகம் தீரும்
வண்டு ஒரு வண்டு இறை இல்லாமல் போன பின்னே
பூவாய் பிறந்தாலே பாவம்
பல முட்கள் நடுவிலே ரோஜா வாழ்வது
அட பாவம் இல்லையே வா வா
ஒரு மெத்தை நடுவிலே ஒரு முத்தம் தந்து நான்
உன்னை மென்று திங்கவா வா வா
(ஆளான தேகம்..)

படம்: அரசு
இசை: தேவா
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: கலைக்குமார்

Sunday, July 11, 2010

ஆசை ஆசையாய் இருக்கிறதே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆசை ஆசையாய் இருக்கிறதே
இதுப்போல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே
இதயங்கள் நனைந்திடவே

நம்மை காணுகின்ற கண்கள்
நம்மோடு சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம்
அந்த சொர்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும்
உயிர் எங்கள் வீடாகும்
சுகங்கள் என்றும் இங்கு விளையாடும்
நிரந்தர ஆனந்தம்
(ஆசை..)

நம் தாயின் முகத்தில் ஒரு கோடி கடவுள்
தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்
தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி
கோவிலை போல மாற்றிடுவோம்
அன்னைக்கு பணிவிடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்
சொந்தங்கள் சேர்ந்திருப்போம்
அனைவரின் அன்பில் ஆயுளும் கூடிடுமே
(ஆசை..)

பல நூறு வண்ணம் ஒன்றாக சேறும்
ஓவியம் போல சேர்ந்திருப்போம்
வரலாறு எல்லாம் நம் பேரை நாளை
சொல்வது போல வாழ்ந்திருப்போம்
எங்களுக்குள்ளே வலைந்திடுவோம்
நாணலை போல் தானே
ஒற்றுமை காத்திட நின்றிடுவோம்
தூண்களை போல் நாமே
அடை மழையாக பெய்யும் சந்தோஷம்
(ஆசை..)

படம்: ஆனந்தம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: கலைக்குமார்

Friday, July 25, 2008

610. ஆலங்கட்டி மழை




ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா? ஹச்..
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா? ஹச்..
(ஆலங்கட்டி..)

சமரசம் செய்ய சந்திரன் வந்தாச்சா?
சின்ன சின்ன சண்டை சமாதனமாச்சா? ஹச்
இப்ப பழச மறந்து கதைக்க வந்தாச்சா?
என்ற விசனம் மறந்து காத்தோடு போயாச்சா?

ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும்
ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும்
ஐயோடா

குளம் காட்டும் வெண்ணிலவாய் அழகான நம் குடும்பம்
கல் ஒன்று விழுவதால் கலையலாமா?
கல் ஒன்று விழுவதினால் தண்ணீரில் நெளி நெளியாய்
அலைபோடும் ஓவியத்தை ரசிக்கலாமே
சித்தன வாசல் சிற்பங்கள் பக்கம் வெறும் பாறை ஏனோ
அன்பென்னும் உளி பட்டால் பாறை சிலை ஆறுமே
பித்து குழலுக்கு தேங்காய் பூவ போல
ஒன்னா கலந்திட நெஞ்சு துடிக்குது
சொந்தத்தை தினம் சந்திக்க
அவர் நிழல் கூட ஏங்குது
(ஐயோடா..)

ஆற்றோர நாணல் அது காற்றோடு கை குலுக்க
நட்போடு நாமும் அதை கொஞ்சலாம் நில்
பனையில பழம் பறிச்சு விதையில் தென்ன வளர்க்க
ஆறேனும் ஆசை பட்டால் ஆகுமோ சொல்
ஒருவர் புன்னகை மற்றவர் முகம் அதில் பூக்குமே
உள்ளங்கையின்ற ரேகைகள் பலன் ஒன்றாகுமே
அனைவரும் இங்கு நடந்திடும் போது
ஒரு நிழல் மட்டும் தெரிவதென்ன
கவிதை போல் உள்ள குடும்பத்தில்
நானுமொரு வார்த்தை ஆகலாமோ
(ஆலங்கட்டி..)
(ஐயோடா..)

படம்: தெனாலி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, கமல் ஹாசன்
வரிகள்: கலைகுமார்

Last 25 songs posted in Thenkinnam