மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே
மருகி மருகி தினம் உருகி உருகி
உன்னைத் தாங்கி தாங்கி மோட்சம் போனேனே
நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே
என்ன ஆச்சு ஏதும் எனக்கு தெரியாதே
மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே
உலகில் உள்ள அழகை எல்லாம் உன்னில் கண்டேனே
அணுமின நிலையம் ஒன்றை உந்தன் கண்ணில் கண்டேனே
எதுவும் புரியாமல் என்னை அறியாமல்
உன்னில் காதல் கொண்டேனே
சிலையை மீட்டும் உளியைப் போலே என்னைத் தொட்டாயே
காலம் செய்யும் விரலால் என்னை ஏதோ செய்தாயே
உலையை களையாமல் வழியை உணராமல்
சுகமாகக் கொன்றாயே
உன்னைக் கண்ட மறு நொடியே
இருதயம் வலப் புறம மாரிடுதே
உன் கை தீண்டும் ஒரு நொடியில்
நரம்புகள் எனக்குள்ளே வெடிக்கின்றதே
மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே
தனியே நாமும் காணும் நேரம் பூமி நிற்கட்டும்
பிரியா விடையை சொன்ன பின்னே மீண்டும் சுற்றட்டும்
சிறகை விரிக்காமல் உயரே பறக்காமல்
விழி விண்ணைத் தாண்டட்டும்
உந்தன் முன்னே தூங்கும் தோட்டம் தோற்றுப் போகட்டும்
நீயும் சூட பூக்கள் எல்லாம் நெஞ்சில் கேட்கட்டும்
கடலும் நீயாக புயலும் நானாக
உன்னில் மையல் கொள்ளட்டும்
காதல் என்ற வார்த்தையிலே ஆயிரம் கவிதைகள் தெரிகிறதே
இமைகள் தாக்கி இதயங்களே பொடிப் பொடிப் பொடியாய் உதிர்கிறதே
மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே
மருகி மருகி தினம் உருகி உருகி
உன்னைத் தாங்கித் தாங்கி மோட்சம் போனேனே
நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே
என்ன ஆச்சு ஏதும் எனக்குத் தெரியாதே
படம்: யுவன் யுவதி
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், மதுமிதா
வரிகள்: கலை குமார்
0 Comments:
Post a Comment