மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே
மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே
உன் வண்ணம்
உந்தன் எண்ணம்
நெஞ்சின்
இன்பம்
மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே
பொன்னின் தோற்றமும்
பூவின் வாசமும்
ஒன்றிணைந்து தேகமோ
பிள்ளை மொழி அமுதமோ
பிஞ்சு முகம் குமுதமோ
பூமுகம்
என் இதயம் முழுதும்
பூவென
என் நினைவைத்தழுவும்
நெஞ்சில் கொஞ்சும்
மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே
மேகம் நீர் தரும்
பூமி சீர் தரும்
தெய்வம் நல்ல பேர் தரும்
இன்பப் புனல் ஒடிடும்
இன்னிசைகள் பாடிடும்
வாழ்வெல்லாம் நம் உறவின்
நலங்கள்
நாள் எல்லாம் உன் நினைவின்
சுகங்கள்
வாழும்
நாளும்
( மஞ்சள் வெயில்)
திரைப்படம் : நண்டு
இசை: இளையராஜா
பாடியவர் : உமா ரமணன்
Thursday, August 18, 2011
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
இது எனக்கு பிடித்த பாடல். பகிர்வுக்கு நன்றி முத்துலெட்சுமி.
என் உணா்வுகளை செம்மைப்படுத்தும் பாடல் ் நன்றி இசைஞானி ்
Post a Comment