ஓய்வெடு ஓய்வெடு நிலவே - நீ
காதலில் தேயாதே
சாய்ந்திடு சாய்ந்திடு நிலவே - வா
மார்பிலே இடம் தாரேன்
பனி மார்கழி மாதத்திலே
இள வான்மதி மோகத்திலே
இந்த காதலன் கீதத்திலே
இளைப்பாரிடு நாணத்திலே
தேய்ந்தது தேய்ந்தது நிலவு -தன்
காதலன் முகம் காண
நிலமெனில் நீராய்
மரம் எனில் வேராய்
உயிர்துணை சேர்ந்திட
நானும் வரவா
மலருக்கு மணமாய்
இதழுக்கு நிறமாய்
இணைபிரியாதொரு ராகம் தரவா
மலர்விழி அம்பில் நான்
விழுந்தென்னை இழந்தேன்
தளிர்க்கரம் பற்றி நான்
யார் என்று மறந்தேன்
இடைவெளி இனி இல்லை
வா காதல் மானே
ஈருடல் இணைந்ததும்
ஓர் உயிர் தானே
தேய்ந்தது தேய்ந்தது நிலவு - தன்
காதலன் முகம் காண
சாய்ந்தது சாய்ந்தது நிலவு - உன்
மார்பினில் சுகம் காண
கவி எனில் பொருளாய்
கரும்பெனில் சுவையாய்
கடை வரை நான் உந்தன் கூடவருவேன்
நிஜமெனில் நிழலாய்
நெருப்பெனில் சுடராய்
இருவிழி மூடாமல் காவல் தருவேன்
உனக்கெனத்தானே பால் நிலவாக வளர்ந்தேன்
உனைக்கண்டதாலே நான் தினம் தேய மறந்தேன்
இயற்கையின் தடை மீறி
வாழும் நம் காதல்
இதற்கிணை கிடையாது
வேரொரு காதல்
ஓய்வெடு ஓய்வெடு நிலவே - நீ
காதலில் தேயாதே
சாய்ந்திடு சாய்ந்திடு நிலவே - வா
மார்பிலே இடம் தாரேன்
பனி மார்கழி மாதத்திலே
இள வான்மதி மோகத்திலே
இந்த காதலன் கீதத்திலே
இளைப்பாரிடு நாணத்திலே
தேய்ந்தது தேய்ந்தது நிலவு -தன்
காதலன் முகம் காண
சாய்ந்தது சாய்ந்தது நிலவு - உன்
மார்பினில் சுகம் காண
திரைப்படம்: வேலை
பாடகர்கள்: பவதாரிணி, ஹரிஹரன்
இசை: யுவன்சங்கர் ராஜா
வரிகள் : ஆர்.வி. உதயக்குமார்
Wednesday, November 16, 2011
ஓய்வெடு ஓய்வெடு நிலவே
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 12:41 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment