Thursday, September 20, 2012

அட்டகத்தி - ஆசை ஒரு புல்வெளி

ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி
பூ மீது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே
ஓ ரிங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்குமே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்

யார் உயிர் யாரோடு
யார் உடல் யாரோடு போனது
மர்மம் ஆனது இன்பம்
காற்றுக்கு எல்லை இல்லையே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்

இளமை தூக்கதில் இரண்டு ஏக்கங்கள்
விழித்து பார்த்ததும் வண்ணங்கள்
விரல்கள் கோர்த்து தான் திசைகள் மீறலாம்
காற்றுக்கு எல்லை இல்லையே

மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே

படம் : அட்டகத்தி (2012) 
இசை : சந்தோஷ் நாராயணன் 
பாடியவர்கள் : பிரதீப், கல்யாணி நாயர் 
வரிகள் : கபிலன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam