ஏய் எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு
கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு
சுத்தமாக சொன்னதெல்லாம் போதலையா
மொத்தமாக காதுல தான் ஏறலையா
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளுடா
அந்த ஆண்டவன் தான் கிருஸ்துவனா
முஸ்லிமா இல்லை இந்துவா
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
மனசுக்குள்ள நாய்களும் நரிகளும
நால்வை பேய்களும் நாட்டியமாடுதடா
மனிதனென்னும் போர்வையிலிருக்குது
பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா
அட யாரும் திருந்தலயே இதுக்காக வருந்தலயே
அட யாரும் திருந்தலயே இதுக்காக வருந்தலயே
நீயும் நானும் ஒன்னு இது நெசந்தான் மனசுல எண்ணு
பொய்யையும் புரட்டையும் கொன்னு இந்த பூமிய புதுசா பண்ணு
சும்மா சொன்னத சொன்னத சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா
அட உன்னதான் நம்புறேன் நல்லவா
உன்னால மாறுதல் வந்திடுமல்லவா
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா
கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது
பாவத்தை பெருக்குது இது என்ன ஜென்மம்மடா
இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்லப்பொழுது
இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்லப்பொழுது
அடியே ஞான தங்கம் இங்கு நானொரு ஞானச்சிங்கம்
இதை பார்த்தா பொய்களும் ஓடும் இரண்டு போட்ட உலகமும் மாறும்
அட பத்திரம் பத்திரம் பத்திரம் தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது
இது சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது
உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
படம்: ராமன் அப்துல்லா (1997)
இசை: இளையராஜா
பாடியவர்: நாகூர் ஹனீஃபா
வரிகள்: வாலி
3 Comments:
கருத்துள்ள பாட்டு...
பகிர்வுக்கு மிக்க நன்றி...
பாடல் வரிகள் மற்றும் பாடலுக்கு இசை அமைத்தது பாடலைப் பாடியவர் என அனைத்தும் மிக சிறப்பாக இருக்கிறது எத்தனை முறை கேட்டாலும் திரும்பத் திரும்ப கேட்க வேண்டும் என்றே தோன்றுகிறது.இந்த அற்புதமான படைப்பை படைப்பதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு சேர்த்து நன்றி சொல்கிறேன்
வாலி + நாகூர் ஹனீபா + ராஜா = 💕
Post a Comment