முதல் மழை எனை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே
ம்ம்ம்...முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ம்ம் இதமாய் மிதந்ததே
கனவோடு தான் அடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்
என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம்நின்று உணர்ந்தேன்
எதுவும் புரியாப் புது கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்
கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடு தான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடு தான் நானும் பறந்தேன்
முதல் மழை எனை நனைத்ததே
ல ல லலா
முதன் முறை ஜன்னல் திறந்ததே
ல ல லலா
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே
ஓர் நாள் உன்னை நானும் காணா விட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை
ஓ ஓ ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை
இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே
மேஹுல்மேஹூல் மாஹியாஹியோ ?? :-) பாட்டில் இடையில் வருவது இது தானா
Sunday, June 22, 2008
524.முதல் மழை எனை நனைத்ததே...
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 9:19 AM
வகை பிரசன்னா, மஹதி, ஹரிஹரன், ஹாரிஸ் ஜெயராஜ்
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
//மேஹுல்மேஹூல் மாஹியாஹியோ ?? :-) பாட்டில் இடையில் வருவது இது தானா//
இதுக்கெல்லாம் விவேக் தான் வரணும் அவர் தான் உயிரின் உயிரே பாட்டின் முதல் அடிக்கு விளக்கம் சொன்னவர் ;-)
நல்ல பாட்டு, படம் பப்படமானதால் இன்னும் எடுபடாமல் போயிற்று
;) கானாப்ரபா நல்லா சொன்னீங்க.. ஆனா பாட்டை எப்படியோ மேடையில் பாடறவங்க சரியா பாடிறாங்க இல்ல..
சித்திரை செவ்வானம் பாட்டுலயும் இதே குழப்பம் தான்..இது காலம் காலமா தொடருது..
//மேஹுல்மேஹூல் மாஹியாஹியோ //
இடையில் அல்ல ஆரம்பிப்பதே இதிலிருந்துதான்!
எத்தனை பேரின் செல்பேசிகளில் கூவிக்கொண்டிருக்கும் வைரவரிகள் :))))
ஆயில்யன்.. ரொம்ப சரி ஆரம்பம் அதான்.. இடையிடையேயும் வருதேன்னு அப்படி சொல்லிட்டேன்.. சந்தேகமா இருப்பதால மேலே போடலை..
வைரவரிகள் தான்.. பாடல் முழுதும்
அதனால் தான் பாடலாசிரியரைபோட வேண்டும் என்று ஆவல் வந்தது..இல்லாவிட்டால் பொதுவாக அதைப்போட விடுபடுவது உண்டு.
ஹா ஹா தற்போதைக்கு வந்த பாடல்களிலேயே மிகமிக பிடித்த பாடல்
Post a Comment