பொன்னென்ன பூவென்ன கண்ணே - உன்கண்ணாடி உள்ளத்தின் முன்னேஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்புவி காணாமல் போகாது பெண்ணே( பொன்னென்ன பூவென்ன )மார்கழியில் மாலையிலேமலர்ந்ததொரு மல்லிகைப்பூயார் வருவார் யார் பறிப்பார்யார் அறிவார் இப்போது( பொன்னென்ன பூவென்ன )ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும்ஒலியோடு நடை போடும் நீரோடையும்சுகமானது சுவையானதுஉன் வாழ்வும் அது போல உயர்வானது( பொன் )செவ்வான மேகங்கள் குழலாகுமாசெந்தூரம் விளையாடும் முகமாகுமாநடை போடுமா இசை பாடுமாநடந்தாலும் அவை யாவும் நீயாகுமா( பொன் )படம்: அலைகள்இசை: எம்.எஸ். விஸ்வநாதன்பாடல்: கண்ணதாசன்பாடியவர்: ஜெயச்சந்திரன்***விரும்பிக் கேட்டவர்: ஜிரா
நன்றி நன்றி நன்றி :-)விரும்பிக் கேட்ட பாடலை உடனே தந்த வலைப்பூ வள்ளலே! நன்றி.இந்தப் பாடல்தான் ஜெயச்சந்திரன் முதலில் தமிழில் பாடிய பாடல்.இந்தப் பாடல் இயக்குனர் ஸ்ரீதரின் அலைகள் என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.கன்னட நடிகரான விஷ்ணுவர்தன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதற்குப் பிறகு மழலைப் பட்டாளங்கள் படத்தில் கதாநாயகனாகவும்.. விடுதலை படத்தில் துணைக் கதாநாயகனாகவும் நடித்தார்.
Post a Comment
1 Comment:
நன்றி நன்றி நன்றி :-)
விரும்பிக் கேட்ட பாடலை உடனே தந்த வலைப்பூ வள்ளலே! நன்றி.
இந்தப் பாடல்தான் ஜெயச்சந்திரன் முதலில் தமிழில் பாடிய பாடல்.
இந்தப் பாடல் இயக்குனர் ஸ்ரீதரின் அலைகள் என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.
கன்னட நடிகரான விஷ்ணுவர்தன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதற்குப் பிறகு மழலைப் பட்டாளங்கள் படத்தில் கதாநாயகனாகவும்.. விடுதலை படத்தில் துணைக் கதாநாயகனாகவும் நடித்தார்.
Post a Comment