காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான் ( காகித)
அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை ( காகித)
தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திடவில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா எங்களை அழைத்திடு தாயே (காகித)
Saturday, June 21, 2008
522.காகித ஓடம் கடலலை மீது ...
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 6:10 AM
வகை P சுசீலா, ராமமூர்த்தி
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
நன்றிக்கா! தேடிக் கொண்டிருந்த பாடல். ரொம்ப நாள் கழித்து இந்த பாட்டைக் கேட்கிறேன்... மீண்டும் நன்றி!
Post a Comment