சந்தக் கவிகள் பாடிடும் மனதினில்
இன்பக்கனவுகளே ( சந்தக் கவிகள்)
சொந்தம் தர வரும் ஆனந்தம்
சிந்தும் கவிமழை ஆரம்பம் (சொந்தம்)
தோன்றாத பேரின்பம்
தொடர்ந்துவரும் என்னுடனே
தினம் பல ( சந்தக்கவிகள்)
சின்னஞ் சிறுவயது
பாடும் அவள் மனது ( சின்னஞ்)
சீர்காண வேண்டும்
திருநாளும் வர வேண்டும்
மலர்மாலை சூடும்
உறவோடு கூடும்
என்னுள்ளம் கண்டாடும் உறவுகளின்
இனியசுகம் தினம் பல (சந்தக் கவிகள்)
தட்டும் ஒலி இசையில்
மெட்டி கவிதை தரும்
என்னன்பு நெஞ்சில்
புதுராகம் அது பாடும்
மடை போல ஓடும்
மனமோடு கூடும்
என் உள்ளம் கண்டாடும் உறவுகளின்
இனியசுகம் தினம் பல
சந்தக் கவிகள் பாடிடும் மனதினில்
இன்பக்கனவுகளே ( சந்தக் கவிகள்)
சொந்தம் தர வரும் ஆனந்தம்
சிந்தும் கவிமழை ஆரம்பம்
தோன்றாத பேரின்பம்
தொடர்ந்துவரும் என்னுடனே
தினம் பல ( சந்தக்கவிகள்)
Saturday, August 28, 2010
சந்தக் கவிகள் பாடிடும் மனதினில்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 1:10 PM
வகை இளையராஜா, ப்ரம்மானந்தம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment