Monday, August 16, 2010

சிங்கம் - என் இதயம் இதுவரை துடிக்கவில்லை



என் இதயம் இதுவரை துடிக்கவில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே
இது சுகமா வலியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும்
சேர்ந்து துரத்துகிறதே
(என் இதயம்..)

கூட்டத்தில் நின்றாலும் உன்னையே தேடுது கண்கள்
ஒற்றையாய் போனாலும் உன்னுடன் நடக்குது கால்கள்
அச்சமே இல்லாத பேச்சிலே மயங்குது நெஞ்சம்
மிச்சமே இல்லாமல் உன்னிடம் வந்தேன் தஞ்சம்
தாவனி மோதியே சாயுதே தேரடி
ரெண்டடி நாலடி நூறு அடி இழுத்தாய்

என் இதயம் இதயம் இதயம் இதயம் இதயம்..
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

உன்னிடம் எப்போதும் உரிமையாய் பழகிட வேண்டும்
வைரமே ஆனாலும் தினம் தினம் தொலைத்திட தூண்டும்
இதுவரை என் நெஞ்சில் இல்லவே இல்லை பயங்கள்
இரண்டு நாள் பார்த்தேனே மிரட்டுதே உந்தன் குணங்கள்
இத்தனை நாட்களாய் படுத்ததும் உறங்கினேன்
இரண்டு நாள் கனவிலே உன்னை கண்டு விழித்தேன்
(என் இதயம்..)

படம்: சிங்கம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: திப்பு, சுசித்ரா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam