Wednesday, August 11, 2010

அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை

அடிப் பெண்ணே

பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோசம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண் பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே அடிப்பெண்ணே

வானத்தில் சில மேகம்
பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசையென்ன

பூங்காற்றில் ஒரு ராகம்
பொன்வண்டின் ரீங்காரம்
பாடு ம் பாடல் என்ன
சித்தாடை கட்டாத செவ்வந்தியே
சிங்காரப் பார்வை சொல்லும்
சேதிஎன்னவோ
அடிப்பெண்ணே பொன்னூஞ்சல்
ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோசம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண் பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே அடிப்பெண்ணே

நீரோடும் ஒரு ஓடை
மீனாடும் சிறு மேடை
தேடும் தேவை என்ன
பார்த்தாளோ ஒரு ராணி
பாலாடை இவள் மேனி
கூறும் ஜாடை என்ன
ஒன்றோடு ஒன்றான எண்ணங்களே
கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ
அடிப்பெண்ணே பொன்னூஞ்சல்
ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோசம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண் பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே
அடிப்பெண்ணே





பாடியவர் : ஜென்சி
இசை : இளையராஜா
திரைப்படம் : முள்ளும் மலரும்
பாடல்வரிகள் : பஞ்சு அருணாசலம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam