Get Your Own Hindi Songs Player at Music Plugin
மெதுவா மெதுவா தொடலாமா -
என்மேனியிலே கை படலாமா.. படலாமா ?
ஓ...ஓஹோ.ஹோ..
வெட்கம் இப்போது வரலாமா -
நீவிலகிச் செல்வதும் சரிதானா.. சரிதானா ?
வேட்டைக்கு வந்தது நினைவில்லையா நினைவில்லையா -
இங்குவேறொரு புள்ளிமான் கிடைக்கலையா கிடைக்கலையா
காட்டுக்குள்ளே இந்த நாடகமா
காதலென்றால் இந்த அவசரமா..அவசரமா ?
(வெட்கம்)
குளிர்ந்த காற்றாய் மாறட்டுமா மாறட்டுமா -
உன்கூந்தலில் நடனம் ஆடட்டுமா ஆடட்டுமா
கொல்லும் கண்களை வெல்லட்டுமா
கோடிக் கதைகள் சொல்லட்டுமா.. சொல்லட்டுமா
(மெதுவா)
இதயம் முழுவதும் எனக்கில்லையா எனக்கில்லையா
இன்பமும் துன்பமும் உனக்கில்லையா உனக்கில்லையா
நாளை மணமக்கள் நாமில்லையா -
அதுநடக்கும் வரையில் பொறுக்கலையா
(மெதுவா)
படம்: வேட்டைக்காரன்
இசை: KV மகாதேவன்
Tuesday, October 26, 2010
மெதுவா மெதுவா தொடலாமா
பதிந்தவர் MyFriend @ 1:18 AM
வகை 1960's, KV மகாதேவன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment