அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா ஓஹோ
அழகுக்கு இவள்தான் தாய் நாடா
(அழகிய லைலா..)
ஏ சிறகென விரித்தாள் கூந்தலை இங்கே
சூரியன் நிலவாய் ஆனது அங்கே
என் மனம் இன்று போனது எங்கே
மன்மதனே உன் ரதி எங்கே
கன்னத்தை தொட்டால் சந்தனம் கொட்டும்
வெட்கத்தை தொட்டால் குங்குமம் கொட்டும்
புன்னகை பட்டால் மல்லிகை மொட்டும்
பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்
காலடி ஓசைகள் கம்பனை கேட்டது அம்மம்மா
பிக்காசோவின் ஓவியம் ஒன்று
பீத்தோவின் சிம்பனி ஒன்று
பெண்ணாய் மாறியதோ
அந்தப்புரத்து மகராணி ஓஹோ
அந்தப்புரத்து மகராணி
(அழகிய லைலா..)
உயிருக்குள் மின்னல்கள் அடிப்பது என்ன
தாகங்கள் என்னை குடிப்பது என்ன
அழகினில் என்னை வளைப்பது என்ன
இதயம் கொள்ளை போனதென்ன
ரகசியமாய் இவள் இளமையை ரசித்தேன்
கவிதைகள் எழுதி மனசுக்குள் படித்தேன்
கனவுகள் அடுக்கி காலையில் கலைத்தேன்
தினம் தினம் இவளை யோசித்தேன்
வாலிப குறும்புகள் ஜாடைகள் சொல்லுது ஐயய்யோ
பூக்கள் அவளை பார்த்து பார்த்து
ஆட்டோகிராப் கேட்டு கேட்டு
கைகள் நீட்டியதோ
அந்தப்புரத்து மகராணி ஓஹோ
அந்தப்புரத்து மகராணி
(அழகிய லைலா..)
படம்: உள்ளத்தை அள்ளித்தா
இசை: சிற்பி
பாடியவர்: மனோ
Friday, October 29, 2010
அழகிய லைலா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment