Thursday, October 14, 2010

தோகை விரித்தொரு ஆண் மயில்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

தோகை விரித்தொரு ஆண் மயில் நடனம் ஆடியதே
அருகில் போய் அதை அணைத்திட ஆசை கூடியதே
இருப்பக்கம் எறிகின்ற மெழுகாய்
ஏன் என்னை நீ மாற்றி சென்றாய்
மழை சிந்தும் உன்னாலே வீசும்
மண் வாசம் போல் மூச்சில் நின்றாய்
வழிகின்ற சுகம் காதல் தான்
(தோகை..)

அழகிய முகம் பளிச்சென நிறம்
அது என்னை கவந்ர்ந்தது மிக கொஞ்சமே
உலகத்தில் உள்ள அத்தனை பொன்னும்
உன்னுடைய குணம் ஆகி என்னை கொல்லுதே

பார்க்கும் யாருக்கும் பிடிக்கும் உன்னை
உன்னை போல் ஒரு ஜென்மம் அபூர்வம்
உன்னை ஏந்திடும் சிம்மாசனமாய் ஆனதே இதயம்
மெத்தாகி போனேன் மெத்தாகி போனேன்
(தோகை..)

எங்கே வந்தேன் எதற்க்கு உனை கண்டேன்
நமக்குள்ளே முடிச்சுகள் முடிந்தவை தான்
சுற்றம் தரும் சூழ்நிலை தரும்
இனி எந்த தடைகளும் தவிர்ந்தவை தான்

நூறு பெண்களை நீயும் ஏற்றால்
நூரில் ஒன்றென நானும் வாழ்வேனே
இந்த பிறவியில் உன்னை சேறும்
நாள் வரை வாழ்வேன்
இல்லையேல் சாவேன் இல்லையேல் சாவேன்
(தோகை..)

படம்: கலாபக் காதலன்
இசை: நிரு
பாடியவர்: சின்மயி
வரிகள்: தாமரை

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam