ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக்கேட்டு தூங்கும் ஆவராம்பூவே
தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு
அமுதே என் கண்ணே பசும் பொண்ணே இனி துன்பம் ஏன் இங்கு
[ஆலோலம் பாடி]
மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம்
இன்பம் துன்பம் என்றும் உண்டு
தாய் இழந்த துன்பம் போலே
துன்பம் அது ஒன்றுமில்லை
பூமி என்ற தாயும் உண்டு
வானம் என்ற தந்தை உண்டு
நீங்கிடாத சொந்தம் என்று
நீரும் காற்றும் எங்கும் உண்டு
பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும்
தாய் இன்றி நின்ற பிள்ளை தன்னை என்றும் காக்கும்
நீ காணும் எல்லாம் உன் சொந்தம்
[ஆலோலம் பாடி]
சோகம் எதுவும் சுமையே இல்லை
சுகங்கள் கூட சுகமே இல்லை
ஆதரவை தந்தால் கூட
அதையும் இங்கு அறிந்தாய் இல்லை
வந்ததுண்டு போனதுண்டு
உன் கணக்கில் ரெண்டும் ஒன்று
வரவும் உண்டு செலவும் உண்டு
உன் கணக்கில் வரவே உண்டு
ஊர் எங்கள் பிள்ளை என்று இன்று சொல்லக் கூடும்
உலகம் உந்தன் சொந்தமென்று உந்தன் உள்ளம் பாடும்
நீ யாரோ அன்பே அமுதே!
[ஆலோலம் பாடி]
Get Your Own Hindi Songs Player at Music Plugin
பாடியவர்: இளையராஜா
இசை : இளையராஜா
படம்: ஆவாரம்பூ
Monday, October 18, 2010
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
//சோகம் எதுவும் சுமையே இல்லை
சுகங்கள் கூட சுகமே இல்லை
உலகம் உந்தன் சொந்தமென்று உந்தன் உள்ளம் பாடும்//
அருமையான வரிகள்
ஃபீலிங்க்ஸ் பாட்டு :)
Post a Comment