Sunday, October 10, 2010

மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே



மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிறதே
படுத்தால் இரவிலே என் தூக்கம் என்னை திட்டும்
விழியின் இடையிலே ஒரு கனவை செறுகி குத்தும்

நெஞ்சின் ராட்டிணம் எனை சுற்றி தான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியினில் நான் பார்க்க
(மேகம்..)

பாதையின் ஓரத்தில் நடந்து நானும் போகையில்
முகத்தில் காட்ட மறுத்திடும் ஒற்றை குயிலும் கூவுதே
காலையில் எழுந்ததும் ஓடிச்சென்று பார்க்கிறேன்
நேற்று பார்த்த அணில்களின் ஆட்டம் இன்றும் தொடருதே

முதல் முதல் வாழ்வில் தோன்றும்
வண்ண குழப்பம் வானவில் தானா
நதிகளில் வாழ்ந்தே பழகி
கடலை கண்டால் தாவிடும் மீனா

போதும் போதும் என்று உள்ளம்
எச்சரிக்கை செய்யும் போதும்
வேண்டும் வேண்டும் என்று கேட்கும்
மனதின் உள்ளே இன்னோர் உள்ளம்
(நெஞ்சின் ராட்டிணம்..)
(மேகம்..)

கடற்கரை சாலையில் காற்று வீசும் மாலையில்
பேசிக் கொண்டு செல்வதை கனவு கண்டு விழிக்கிறேன்
கரைகளை தீண்டிடும் அலைகளாக மாறினேன்
சேர்ந்துக் கொள்ள சொல்லியே மீண்டும் மீண்டும் போகிறேன்

வலித்திடும் நெஞ்சில் நெஞ்சில்
வழியும் உதிரம் இனிப்பது ஏனோ
மறு முறை பார்க்கும் வரையில்
காக்கும் நேரம் கசப்பது ஏனோ

பகலில் தூங்கும் வெண்ணிலாவும்
வெளியில் வந்து தானே தீரும்
அந்த நேரம் வந்ததாக
நெஞ்சின் உள்ளே ஏதோ கூறும்
(நெஞ்சின் ராட்டிணம்..)
(மேகம்..)

படம்: கண்ணாமூச்சி ஏனடா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிசரண், ஷ்வேதா
வரிகள்: தாமரை

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam