Get Your Own Hindi Songs Player at Music Pluginஇயற்கை என்னும் இளைய கன்னிஏங்குகிறாள் துணையை எண்ணிஇயற்கை என்னும் இளைய கன்னிஏங்குகிறாள் துணையை எண்ணிபொன்னிறத்து மெல்லிடையில் பூவாடபொட்டு வைத்த வண்ண முகம் நீராடபொன்னிறத்து மெல்லிடையில் பூவாடபொட்டு வைத்த வண்ண முகம் நீராடதாமரையாள் ஏன் சிரித்தாள்தலைவனுக்கோ தூது விட்டாள்இயற்கை என்னும் இளைய கன்னிஏங்குகிறாள் துணையை எண்ணிதலையை விரித்துத் தென்னை போராடுதோஎதனை நினைத்து இளநீராடுதோகன்னி உன்னைக் கண்டதாலோதன்னை எண்ணிக் கொண்டதாலோஇலைகள் மரத்துக்கென்ன மேலாடையோஇடையை மறைத்துக் கட்டும் நூலாடையோகட்டிக்கொண்ட கள்வன் யாரோகள்வனுக்கும் என்ன பேரோஇயற்கை என்னும் இளைய கன்னிஏங்குகிறாள் துணையை எண்ணிமலையைத் தழுவிக் கொள்ளும் நீரோட்டமேகலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமேமஞ்சள் வெய்யில் நேரம் தானேமஞ்சம் ஒன்று போடலாமேதலையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமேகாலை மறைத்துச் செல்லும் ஆற்றோட்டமேஇன்னும் கொஞ்சம் நேரம் தானேஅந்திப் பட்டு பேசலாமேஇயற்கை என்னும் இளைய கன்னிஏங்குகிறாள் துணையை எண்ணிஹ ஹ ஹா லலல ல் லல்ல லல்ல ஹ ஹ ஹ…படம்: சாந்தி நிலையம்இசை: MS விஸ்வநாதன்பாடியவர்: P சுசீலாவரிகள்: கண்ணதாசன்
ஹலோ மை ஃபிரண்ட் மிக்க நன்றி இந்த பாடல் பதிவிற்கு...ஆனால்.. உங்களுக்கு நம் பாலுஜியின் மீது என்ன கோபம்... இந்த பாடல் பாலுஜியின் வாழ்கையில் மட்டுமல்ல நம் அணைவரது வாழ்கையிலிருந்தும் நீங்காத பாடல்...பாடியவர்கள் பட்டியலில் திரு.S.P.பாலசுப்பிரமணியம் அவர்களின் பயரையும் இணக்கவும்இந்த பாடலில் பாலுஜியின் குரலில் என்ன ஒரு இளமை... அந்த இளமை இன்னும் அவர் குரலில் இருப்பது ஒரு அதிசயமே.. இந்த பாடலை அவர் அப்பொழுது எப்படி பாடினாரோ அதே போல் இன்றும் பல இசைக்கச்சேரியில் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்..வாழ்துக்களுடன்மதுரை அருண் குமார்.
மதுரை அருண்குமார் 2010 இலேயே சுட்டிக்காட்டியும்திருத்தம் மேற்கொள்ளப் படவில்லை. ஏனோ?
பதினொரு வருடங்களாகியும் திருத்தம் செய்யவில்லை என்றால் இந்த blog உயிர்ப்புடன் இல்லை என்று பொருள்.
இன்று (05-08-2021) வரை திருத்தவில்லை!
Post a Comment
4 Comments:
ஹலோ மை ஃபிரண்ட் மிக்க நன்றி இந்த பாடல் பதிவிற்கு...
ஆனால்.. உங்களுக்கு நம் பாலுஜியின் மீது என்ன கோபம்...
இந்த பாடல் பாலுஜியின் வாழ்கையில் மட்டுமல்ல நம் அணைவரது வாழ்கையிலிருந்தும் நீங்காத பாடல்...
பாடியவர்கள் பட்டியலில் திரு.S.P.பாலசுப்பிரமணியம் அவர்களின் பயரையும் இணக்கவும்
இந்த பாடலில் பாலுஜியின் குரலில் என்ன ஒரு இளமை... அந்த இளமை இன்னும் அவர் குரலில் இருப்பது ஒரு அதிசயமே..
இந்த பாடலை அவர் அப்பொழுது எப்படி பாடினாரோ அதே போல் இன்றும் பல இசைக்கச்சேரியில் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்..
வாழ்துக்களுடன்
மதுரை அருண் குமார்.
மதுரை அருண்குமார் 2010 இலேயே சுட்டிக்காட்டியும்
திருத்தம் மேற்கொள்ளப் படவில்லை. ஏனோ?
பதினொரு வருடங்களாகியும் திருத்தம் செய்யவில்லை என்றால் இந்த blog உயிர்ப்புடன் இல்லை என்று பொருள்.
இன்று (05-08-2021) வரை திருத்தவில்லை!
Post a Comment