Sunday, October 24, 2010

வான் நிலா தரும் ஒளி





வான் நிலா தரும் ஒளி இவள் விழி
தேன் பலா தரும் சுவை இவள் மொழி
தமிழ் தானோ?
வான் புகழ் நைல் நதி இவள் நடை
தாமரை மலர் கொடி இவள் இடை
தமிழ் பெண்ணோ?

உன் அழகினை பாட
என் தமிழ் மொழி போதாது
நான் உவமைகள் சொன்னால்
அது முழுமையென்றாகாது
நீ ஒரே ஒரு தரம் பிறந்தவள்
அவன் படைப்பினில் மிக சிறந்தவள் ஒஹோ ஹோ ஒ..ஒ

சிலு சிலுவென விழும் புது பனித்துளியோ
மழை எழுதும் முதல் கவியோ
தம் தம் தம் சங் சங்கீதம்
கொலுசொரு ஜல்
நீலம் தோய்த்த அந்த ஆகாயம்
உந்தன் மேலாடும் நூலாடையோ
ஒரு தரம் சிரிக்கையில் தெரிக்கையில்
புது புது கவிதைகள் புலப்படும் புறப்படும்

ரதியே ரதம் போல் நடந்தே
நீ வரும் வழி எங்கும்
குறிஞ்சி மலர் போல் குலுங்கும்
கூர் நெருஞ்சி முள் என்றும்
நதிக்குள் குதிக்கும் மீன்கள்
உன் நீள் விழி கண்டு
நிலத்தில் வாழும் மீனோ
என வியப்பது உண்டு

வான் நிலா தரும் ஒளி இவள் விழி
தேன் பலா தரும் சுவை இவள் மொழி
தமிழ் தானோ?
வான் புகழ் நைல் நதி இவள் நடை
தாமரை மலர் கொடி இவள் இடை
தமிழ் பெண்ணோ?

தினம் தினம் மனதினில் உந்தன் முகமெழுதி
ரசித்திருப்பேன் உயிர் தழுவி
கா-தல் தே-வி என் நெஞ்சம்
உன் கோயில் தான்
காதல் என்றும் அந்த கோயில் தீபம்
என்று எண்ணங்கள் ஏற்காதோ
இடி மின்னல் மழையிலும்
அடிக்கின்ற புயலிலும்
உயிர் உள்ள வரையிலும்
ஒளி விடும் விளக்கிது
என்னை தான் கனம் நீ பிரிந்தால்
நீர் விழிகளும் வார்க்கும்
உனைதான் வருத்தும் அவள் யார்
என இயற்கையும் கேட்கும்
பெண்ணை அழகாய் படைத்தல்
அந்த இயற்கையின் வேலை
அறிந்தும் எனையே கேட்டால்
அட இது என்ன லீலை?

வான் நிலா தரும் ஒளி இவள் விழி
தேன் பலா தரும் சுவை இவள் மொழி
தமிழ் தானோ?
வான் புகழ் நைல் நதி இவள் நடை
தாமரை மலர் கொடி இவள் இடை
தமிழ் பெண்ணோ?

உன் அழகினை பாட
என் தமிழ் மொழி போதாது
நான் உவமைகள் சொன்னால்
அது முழுமையென்றாகாது
நீ ஒரே ஒரு தரம் பிறந்தவள்
அவன் படைப்பினில் மிக சிறந்தவள் ஒஹோ ஹோ ஒ..ஒ

படம் : காதல் வைரஸ் (2002)
இசை : ரஹ்மான்
வரிகள் : வாலி
பாடியவர்கள் : ஸ்ரீநிவாஸ், கார்த்திக் ராஜா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam