Saturday, October 16, 2010

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்

பதிவர் அவந்தியின் பிறந்தநாளுக்காக இந்த இளமைதுள்ளலான பாட்டு ஒலிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்.




பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நாந்தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம்
இங்கு ஓராயிரம்
(பழமுதிர்..)

தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்க்கொண்ட பூஞ்சோலை நீர்க்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே
(பழமுதிர்..)

பந்தங்கள் யாவும் தொடர்கதைப்போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெருங்கிய இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்த்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட
(பழமுதிர்..)

படம்: வருஷம் 16
இசை: இளையராஜா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: வாலி

2 Comments:

சென்ஷி said...

அருமையான பாடல்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அவந்திகா..

Thekkikattan|தெகா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அவந்தி :) ...

Last 25 songs posted in Thenkinnam