Wednesday, June 24, 2009

ரத்த திலகம் - ஒரு கோப்பையிலே

பாடலை கேட்க

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
(ஒரு...)

காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
நான் காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனிமனிதன்
நான் படைப்பதனால் என்பேர் இறைவன்
(ஒரு...)

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன்
நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
(ஒரு...)

படம் : ரத்த திலகம்
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை : KV மகாதேவன்

3 Comments:

ஆயில்யன் said...

//நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை///


கவிதைகளாலும் பாடல்களாலும் காவியங்களாலும் காலத்தை வென்ற கலைஞன்

பிறந்த நன்னாளில் போற்றுவோம் கவியரசு கண்ணதாசனை !


நன்றிகளுடன்....

G3 said...

//கவிதைகளாலும் பாடல்களாலும் காவியங்களாலும் காலத்தை வென்ற கலைஞன்

பிறந்த நன்னாளில் போற்றுவோம் கவியரசு கண்ணதாசனை !


நன்றிகளுடன்....//

Repeatae :)

gils said...

my fav poet and fav song..kalakiteenga.. :)

Last 25 songs posted in Thenkinnam