Wednesday, June 3, 2009

திருப்பாச்சி அருவாள




திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா
திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா

திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா
சிங்கம் தந்த பிள்லையின்னு தெரியவைப்போம் வாடா வாடா
எட்டுதிசை தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியனை எட்டித்தொடு வாடா வாடா

போர்தானே நம்ம ஜாதிப் பொழுதுப்போக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில் புலிநகமா மாறும் வாடா
வெள்ளாட்டுக் கூட்டமுனு வெளியே சொன்ன ஆளுகளா
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா
(திருப்பாச்சி..)

என்கூரு பொம்பளைக மோப்பமிட வந்தவன எங்கசிய மூக்கருத்தாக
எங்காட்ட திருடித் தின்னு சப்புகொட்டி நின்னவன எங்காத்தா நாக்கருத்தாக
எங்க குரும்பாட்டு கறிக்கொழம்பு குளித்தலையில் மனமனக்கும் வாசத்துக்கே எச்சி விட்டீக
நாங்க குளிச்சி அனுப்பிவச்ச கொறத்தாத்து தண்ணியில ஏண்டியம்மா கறி சமைச்சீங்க
அட கோம்பா மாந்தோப்புல கொலகொலையா காய் திருடி கோவனத்தை தவறவிட்டீக
அந்த கோவனத்தக் கொண்டுபோயி அப்பனுக்கு செலவில்லாம ரிப்பனுக்கு வெட்டிக்கிடீக
அட கலவாணி கோத்திரமே காலமாட்டு
அட கலவாணி கோத்திரமே காலமாட்டு த்திரமே எப்ப நீங்க திருந்தப்போறீக
(திருப்பாச்சி..)

உப்பு தின்னா தண்ணீ குடி தப்பு செஞ்சா தலையில் அடி பரம்பரையா எங்க கொல்கையடா
மானந்தானே வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழமட்ட மான காக்க வீரம் வேணுமடா
அட சோழக்கூழு கேட்டு வந்தா சோறு போட்டு விசிறிவிடும் ஈரமுள்ள எங்க வம்சமடா
சோறு போட்டும் கழுத்தறுத்த கூறு போட்டு பங்கு வைக்கும் வீரந்தானே எங்க அம்சமடா
நாங்க வம்புச்சண்டைக்கு போறதில்ல வந்த சண்டையை விடுவதில்லை வரிப்புலிதான் தோத்ததில்லையடா
எங்க உறையவிட்டு வாலெடுத்த ரத்த ருசி காட்டிவைக்கும் வழக்கமெங்க குலவழக்கமடா
நான் தத்திவெச்ச புலியடங்கும் எட்டு வச்ச மல உருகும்
தொட்டதெல்லாம் துலங்கப் போகுதடா
(திருப்பாச்சி..)

படம்: தாஜ் மஹால்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீராம், கல்பனா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam