Tuesday, June 9, 2009

அங்காடித் தெரு - உன் பேரை சொல்லும் போதே



உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்
(உன் பேரை..)

நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்கள் நூறு
உனை தொடரும் பறவைகள் நூறு
பெண்ணே பெண்ணே
(நீ இல்லையென்றால்..)
(உன் பேரை..)

உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லை
பெண்ணே பெண்ணே
(நீ இல்லையென்றால்..)
(உன் பேரை..)

படம்: அங்காடித் தெரு
இசை: GV பிரகாஷ், விஜய் அந்தோணி
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல், ஹரி சரண்

3 Comments:

ஆயில்யன் said...

பாஸ் அஞ்சலி பாஸ் அஞ்சலி :)))


//
உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்//


சூப்பரேய்ய்ய்ய்ய்ய் :))))

ஆயில்யன் said...

அழகான பாடல்

அழகான அஞ்சலி :))


அஞ்சலி ரசிகர் மன்றம்
தோஹா கத்தார்

(பின்னே ச்சும்மாவா ஆர்கெட்ல கம்யூனிட்டி எல்லாம் ஓபன் பண்ணி வைச்சுக்கிட்டு குந்தியிருக்கோம்ல!)

:)

Anonymous said...

\\"பாஸ் அஞ்சலி பாஸ் அஞ்சலி :)))"//


ஆயில்ய‌ன் யாருக்கு அஞ்ச‌லி செலுத்த‌றாரு

Last 25 songs posted in Thenkinnam