தேன்கிண்ண நேயர்களே நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ளேன் இனிமையான பாடலுடன். கேட்டு மகிழுங்கள்.
படம்: அன்று கண்ட முகம்
பாடியவர்கள்: டி.எம்.எஸ், ஏ.எல்.ராகவன்
இசை: கே.வி.மகாதேவன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
வாடா... மச்சான் வாடா
வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா
ஆசை மட்டும் பெரிசா இருந்தா
அதிர்ஷ்டம் வருமாடா ஓ ஓ ஹோஒ
மீசை மட்டும் பெரிசா இருந்தா
வீரம் வருமாடா ஆஆஆஆ ஓஓஓஓ
ஆசை மட்டும் பெரிசா இருந்தா
அதிர்ஷ்டம் வருமாடா
மீசை மட்டும் பெரிசா இருந்தா
வீரம் வருமாடா
காசுக்காக காரியம் செஞ்சா கருணை வருமாடா
வெறும் காசுக்காக காரியம் செஞ்சா கருணை வருமாடா
கைக்கு கையா சண்டை போட தைரியம் உண்டோடா
ஏண்டா டோய் ஏண்டா டோய் ஏண்டா டோய் டேய் டேய்
வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
வாடா மச்சான் வாடா
தண்டனைக்கு தப்பிய திருடன் தரணியில் உண்டோடா டா
தப்பிப் போன திருடனை கூட தர்மம் விடுமாடா
தண்டனைக்கு தப்பிய திருடன் தரணியில் உண்டோடா டா
தப்பிப் போன திருடனை கூட தர்மம் விடுமாடா
அந்தப் புகழும் கொலையும் கூட அகப்பட்டுக் கொண்டாண்டா டா டா
அவனே அப்படி ஆனா நீயே அப்பன் மகனோடா போடா
வாடா மச்சான் வாடா.. பயப்படாமா வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா
சொந்தப் புத்தி இருந்தா நல்ல சோத்துக்கு வழியுண்டு
இந்த புத்தி இருந்தா அங்கே கம்பிக் கதவு உண்டு
அம்மா இருந்தா அவளை தேடும் பாசம் என்னென்று
எங்கம்மா இருந்தா அவளை தேடும் பாசம் என்னென்று ஹெஹே
அடுத்தவன் சொல்லை கேட்டு கெட்டவன் ஆயிரம் பேருண்டு
ஏண்டா டோய் ஏண்டா டோய் ஏண்டா டோய் டேய் டேய்
வாடா மச்சான் வாடா.. பயப்படாமா வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா
0 Comments:
Post a Comment