படம்:சகோதரி
பாடியவர்கள்.ஏ.எம்.ராஜா, ஜமுனாராணி??
இயக்குனர்: ஏ. பீம்சிங்
தயாரிப்பாளர் ஜி. எச். வீரண்ணா
கர்நாடகா பிலிம்ஸ், சி. ஆர். பாசவராஜ்
கதை : கிருஷ்ணமூர்த்தி புரானிக்
நடிப்பு: பாலாஜி, பிரேம்நசீர், முத்துராமன், நாகைய்யா, சந்திரபாபு, தேவிகா, ராஜசுலோச்சனா, தாம்பரம் லலிதா, எஸ். ஆர். ஞானகி, பிரியதர்சினி
இசையமைப்பு: ஆர். சுதர்சனம்
வருடம்:1959
|
கண் பாடும் பொன் வண்ணமே
காதல் முத்தாரமே
அழகில் ஆடும் இருவர் பாடும்
இனிய சங்கீதமே
கண் பாடும் பொன் வண்ணமே
காதல் முத்தாரமே
அழகில் ஆடும் இருவர் பாடும்
இனிய சங்கீதமே
கண் பாடும் பொன் வண்ணமே
தங்கத் தமிழ் மீதே
பொங்கும் அலைப் போலே
அந்தி மாலை
இந்த வேலை
அன்பு கலைவண்ணம் கொண்டாடுவேன்
அந்தி மாலை
இந்த வேலை
அன்பு கலைவண்ணம் கொண்டாடுவேன்
கண் பாடும் பொன் வண்ணமே
கல்லும் கனியாகும்
உள்ளம் மலராகும்
காதல் என்னும்
வார்த்தை சொன்னால்
காணும் பொருள் யாவும் கதை கேட்குமே
காதல் என்னும்
வார்த்தை சொன்னால்
காணும் பொருள் யாவும் கதை கேட்குமே
கண் பாடும் பொன் வண்ணமே
தங்கை மறுத்தாலும்
சமையல் வெறுத்தாலும்
சிந்தை ஒன்றாய்
ஏறும் இன்பம்
மாறாது மறையாது எந்நாளூமே
சிந்தை ஒன்றாய்
ஏறும் இன்பம்
மாறாது மறையாது எந்நாளூமே
கண் பாடும் பொன் வண்ணமே
காதல் முத்தாரமே
அழகில் ஆடும் இருவர் பாடும்
இனிய சங்கீதமே
கண் பாடும் பொன் வண்ணமே
1 Comment:
இப்பாடலைப் புனைந்தவர் கவியரசர் கண்ணதாசன்.
பாடற் காட்சியில் நடித்தவர்கள், ப்ரேம் நசீர் + தேவிகா.
Post a Comment