Tuesday, December 20, 2011

ஹேஹேஹே கீச்சுக் கிளியே - 2000வது பாடல்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்

கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில்,
இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்,
அதன் உயிர்சதை இசைவது
என்றும் அந்த நாதத்தில்,

உயிர்களின் சுவாசம் காற்று,
அந்த காற்றின் சுவாசம் கானம்,
உலகே இசையே… ஏ…
எந்திர வாழ்கையின் இடையே,
நெஞ்சில் ஈரத்தில் புசிவதும் இசையே,
எல்லாம் இசையே, …ஏ…
காதல் வந்தால் அட அங்கும் இசைதான்,
கண்ணீர் வந்தால் அட அங்கும் இசைதான்,
தொட்டில் குழந்தை ஒன்று அழுதால்,
அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான்,
யுத்த தளத்தில் தூக்கம் தொலைத்து,
கண் விழிப்பதற்கும் இந்த இசை தான்,

இசையோடு வந்தோம்… இசையோடு வாழ்வோம்,
இசையோடு போவோம்… இசையாவோம்…

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

இன்னிசை நின்று போனால் என் இதயம்,
நின்று போகும் இசையே… உயிரே…
எந்தன் தாய்மொழி இசையே,
என் இமைகள் துடிப்பதும் இசையே,
எங்கும் இசையே,
மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்,
கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்,
ஐம்புலன்கள் எந்தன் இருப்பு,
செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு,
நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு,
ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு,

இசையோடு வந்தேன்… இசையோடு வாழ்வேன்…
இசையோடு போவேன்… இசையாவேன்…

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

இசை:தேவா
பாடியவர்:ஹரிஹரன்
திரைப்படம்:முகவரி
வரிகள்: வைரமுத்து

6 Comments:

Prabu Krishna said...

மிக அருமையான பணி இது. வாழ்த்துகள்.

ADHI VENKAT said...

இது வரை 2000 பாடல்களைத் தந்து எல்லோரையும் மகிழ்வித்த, மகிழ்விக்கின்ற தேன் கிண்ணத்துக்கு வாழ்த்துகள். இந்த வலைப்பூவை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வரும் அனைவருக்கும் பாராட்டுகள்.

இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி முத்துலெட்சுமி.

கானா பிரபா said...

2000 பாடல் கொடுத்த தேன்கிண்ணம் 20000 பாடல்களாகப் பெருக வாழ்த்துகிறேன்

அன்புடன் நான் said...

உங்க சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

பாராட்டுகளும்.

ADHI VENKAT said...

2000 பாடல்கள்... இன்னும் இடப்பக்கத்தில் ஏன் ”ஆயிரமாவது பாடலை எட்டும் நேரத்தில்” என்றே எழுதி இருக்கு? மாற்றி விடுங்களேன்... :)

Anonymous said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Last 25 songs posted in Thenkinnam