கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பில் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊணும்நீ ..உயிரும் நீ
பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை
முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில்
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
(கண்கள் நீயே..காற்றும் நீயே )
இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத்தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்
தோளில் ஆடும் தேனே
தொட்டில் தான் பாதிவேளை
பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும்
இராவணன் ஈடில்லா என்மகன்
எனைத்தள்ளும் முன்
குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக்கிள்ளும் முன்
விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே
என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்
சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ
கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை
கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ
இசை: ஜி.வி ப்ரகாஷ்
வரிகள்: தாமரை
திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்:சிதாரா
Wednesday, December 21, 2011
கண்கள் நீயே காற்றும் நீயே
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 10:07 PM
வகை GV பிரகாஷ் குமார், சிதாரா, தாமரை
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
boss wrong song link!!!
no boss.. அந்தப்பாட்டு தனியா எம்பெட் செய்யக்கிடைக்கல அதனால் முழுப்படம் லிங்க் குடுத்திருக்கேன்.. 6 வது பாட்டு கண்கள் நீயே..:)
Post a Comment