Sunday, December 14, 2008

837.பச்சைமலைப் பூவு நீ உச்சி மலைத்தேனு

ராப்(rapp) பிறந்தநாளுக்காக இந்த பாடல். வெள்ளி மணியைப்போல சிரிக்கும் தேவதைக்கு சர்ப்ரைஸ் கிஃப்டாக இதுல நிறைய தர்ராங்க.. நிலவையே பிடிச்சித்தராங்க, சித்திரத்து சோலை முத்துமணி மாலை..வானவில்லு நூலில விண்மீன் வச்ச ட்ரெஸ் .. (உலகத்திலேயே பெரிய டிசைனர் ட்ரஸ்) வாழ்த்துக்கள் ராப்.... எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க தேன்கிண்ணம் வாழ்த்துகிறது.


பச்ச மலைப் பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னு மணி
சிரிச்சா வெள்ளி மணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்


காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட

மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம்
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன்

பச்ச மலைப் பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவனத் தேரு

பூ நாத்து முகம் பாத்து வெண்ணிலா நாண
தாளாமல் தடம் பாத்து வந்தவழி போக(பூ நாத்து)
சித்திரத்துச் சோலை முத்துமணி மாலை
மொத்தத்துல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணுலே மீன் புடிச்சு சேல தச்சுத் தாரேன் ஹோய்

(பச்ச மலைப் பூவு)
பச்ச மலைப் பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவனத் தேரு

திரைப்படம்: கிழக்கு வாசல்
பாடியவர்: எஸ்.பி .பி
இசை : இளையராஜா





3 Comments:

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் “ராப்”அக்கா!

//வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன் விண்ணுலே மீன் புடிச்சு சேல தச்சுத் தாரேன் ஹோய்//

யேயப்பாடியோவ்!

எம்புட்டு செய்யுறீங்க உங்க தங்கச்சிக்கு!

rapp said...

ஹா ஹா ஹா ரொம்ப ரொம்ப நன்றிங்க முத்து:):):) சூப்பர் பாட்டு:):):)

சூப்பர் கிப்டா தந்துட்டீங்க:):):) நான்கூட நாயகன் படத்துல இருந்து நிலா நிலா ஓடி வா பாட்டைத்தான் தருவீங்கன்னு நெனச்சேன்:):):):)
என்னைய இப்டி சூப்பரா சொன்னத்துக்கு ஸ்பெஷல் நன்றி:):):)

rapp said...

ரொம்ப நன்றிங்க ஆயில்யன்:):):)

Last 25 songs posted in Thenkinnam