Thursday, October 4, 2012

காட்டு செடிக்கு காவல் கிடைச்சாச்சே



காட்டு செடிக்கு காவல் கிடைச்சாச்சே
காட்டுக்குள பாடம் படிச்சாச்சே
ரொம்ப பழைய உலகம்
இப்ப புதுசா தெரியுதே
அடி ஆத்தி இந்த ரத்ததிற்கு பேரென்ன
அடி ஆத்தி இது அன்பு தானே வேரென்ன


காட்டு செடிக்கு காவல் கிடைச்சாச்சே
காட்டுக்குள பாடம் படிச்சாச்சே


பருத்தி பஞ்ச போல மனசு
பச்ச தண்ணி போல வயசு
பாசம் தவிர ஏதும் தெரியாதே
பொய்கள் இல்லா வேறு உலகம்
போட்டியின்றி நெஞ்சம் பழகும்
வன்முறைக்கு வேலை கிடையாதே
உப்பு மூட்டை ஏறிக்கொண்டு
ஊர சுத்தி பார்க்கும் போது
தப்புத்தண்டா ஏதும் இன்றி
பயணம் தொடருதே
அடி ஆத்தி மனம் துள்ளி துள்ளி குதிக்குதே
சுதி ஏத்தி தினம் காத்து போல பறக்குதே

பள்ளிக்கூட பாடம் நமக்கு
சொல்லிடாத வாழ்க்கை இருக்கு
அந்த பாடம் இங்கே நடக்கிறதே
அன்பு ஒன்றே சாமி கணக்கு
அதுக்கு ஈடு என்ன இருக்கு
கொடுத்து வாங்கும் மனிதம் ஜெயிக்கிறதே
ஒத்த பருக்கை யானபோதும்
பகுத்து உண்ணும் நெஞ்சம் தான்
காதல் இன்றி காதலோடு
மகிழும் மனசுதான்
அடி ஆத்தி ரெண்டும் வெட்கப்பட்டு சிரிக்கிறதே
சுகம் ஏத்தி மனம் எல்லை தாண்டி பறக்குதே


காட்டு செடிக்கு காவல் கிடைச்சாச்சே
காட்டுக்குள பாடம் படிச்சாச்சே



படம்: பதினாறு (2011)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக் ராஜா
வரிகள்: சினேகன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam