
பதிவின் தலைப்பைப் பார்த்து தயவுசெய்து கொதிப்படையவேண்டாம் இசையன்பர்களே. யாருக்காவது புதிய, பழைய பாடல் வேண்டுமா? தேடிப்போங்க தேன்கிண்ணம் தளத்திற்க்கு என்று சொல்லும் அளவுக்கு இதில் புதிய பழைய பாடல்கள் தொகுப்பு வரவேண்டும் என்பது என் ஆசை. அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்று எனக்கு தெரியவில்லை. இவரை எங்கேப்பா புடிச்சீங்கன்னு சில பேர் கேட்பது எனக்கு கேக்குதுங்க. என்னங்க பன்றது அதிகம் கேட்கமுடியாத அறிதான சில பழைய பாடல்களை வானொலியில் கேட்கும் போது நமது இணையதள இசைப்பிரியர்களூக்கு வழங்காமல் இருந்தால் எவ்வளவு துரோகம். அதனால் தான் இந்த பதிவு (ஹி.. ஹி... ஹி..). சரி விஷயத்துக்கு வருகிறேன்.புதிய பாடலகள் அரங்கேறும் வரிசையில் இந்த தலைப்பைப்போல் சில அறிதான பிரபலமான, பிரபலமாகாத பாடல்கள் கேட்கவும் தேவாமிர்தமாக தான் இருக்கிறது. இதோ கீழே பாடல்கள் தொகுப்புடன் கேட்டுத்தான் பாருங்களேன்.
1. என்றும் சொந்தமில்லை, புனர்ஜென்மம், பி.பி.ஸ்ரீனிவாஸ்
2. மயக்கம் எனது, குங்குமம், டி.எம்.எஸ்
3. போடா போடா, உல்லாசபயணம், டி.எம்.எஸ்
4. மலை சாய்ந்து போனால், காற்றிலே கீதம், டி.எம்.எஸ்
5. என்ன உறவோ என்ன பிரிவோ, கலங்கரை விளக்கம், டி.எம்.எஸ்
6. கனவுகளே கனவுகளே, உத்தமன், டி,எம்.எஸ்
7. தங்கமலரே உள்ளமே,
8. என்னை மறந்ததேன், க்லங்கரை விளக்கம்
9. ஒருவனுக்கு ஒருத்தி என்றேன், தேனும் பாலும்
10. பகலிலே சந்திரனை, குலமகள் ராதை
11. கண்ணிலே அன்பிருந்தால், ஆனந்தி
12. பூமாலை இங்கே, பராசக்தி
13. அன்பில் மலர்ந்த ரோஜா, கணவனே கண்கண்ட தெய்வம்,பி.சுசீலா
பாடல் தொகுப்பின் நடுவில் நமது டிஜ்ஜிடல் குரலோன் திரு. ஆர்.ஜி.எல்,என் சார் ஒரு வரி சொல்லுவார் ”தினமும் சாம்பார், ரசம், பொரியல் என்பதை விட ஒரு நாள் பழைய சாதமும், வெங்காயத்தையும் சாப்பிட்டு பாருங்கள் பழைய சாதமும் பஞ்சாமிர்தமாக தெரியும் சோகமும் ஒரு சுகமே”.
”சோகத்திலும் ஒரு சுகம் இருக்கிறது” இந்த வார்த்தையை எனது பா.நி.பா தளத்தில் பாலுஜியின் சோகப்பாடல்கள் விளக்கத்தில் இந்த வார்த்தையை பலதடவை நான் உபயோகித்துருக்கிறேன். திரு. ஆர்.ஜி.எல்.என் சார் சொன்னது போல் சோகத்திலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது இது முற்றிலும் உண்மை.
மேலும் “பகலிலே சந்திரனை” என்ற பாடலுக்கு ஒன்று சொல்வார் சில பழைய பாடல்களானாலும் புதிய பாடல்களானாலும் கேட்டால் ரசிக்க முடியாது திரையில் காட்சியுடன் பாடல்களை கேட்டு ரசிக்கும் போது அற்புதமாக இருக்கும் இந்த வார்த்தையும் சரிதான்.
அறிதான அதிகம் கேட்கமுடியாத பாடல்களை வழங்கிய “டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்களூக்கு தேன்கிண்ணம் நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.